நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா?

நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா?, நலந்தா செம்புலிங்கம், விஜயா பதிப்பகம், விலை 50ரூ. 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு, 2000 ரூபாய் நோட்டை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியது பற்றி அலசி ஆராய்கிறார், நலந்தா செம்புலிங்கம். நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —- கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை, தொகுப்பு சீட் அறக்கட்டளை, விகடன் வெளியீடு, விலை 185ரூ. புத்துணர்ச்சி பெறவும், ஆராக்கியமாகவும் வாழவும் நமது பாரம்பரிய உணவுகள் உதவுகின்றன. அத்தகைய கேப்பை முறுக்கு, சிறுதானிய சத்து உருண்டை, கேழ்வரகு இனிப்பு பணியாரம், […]

Read more

எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்

எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள், கமலா கந்தசாமி, விசா பப்ளிகேஷன்ஸ், விலை 105ரூ. நடிகராக இருந்தபோதும், முதல்-அமைச்சராக பதவி வகித்தபோதும் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த ருசிகர சம்பவங்கள் ஏராளம். அவற்றை தொகுத்துத் தந்துள்ளார் கமலா கந்தசாமி. சம்பவங்கள் காலவரிசைப்படி எழுதப்பட்டுள்ளதால், வரிசையாகப் படிக்கும்போது, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது. 28-ம் பக்கத்தில், எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் சிரிப்பு நடிகராக நடித்து வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை ஆரம்பித்தபோதும், கிருஷ்ணன் தி.மு.க.விலேயே இருந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், 1/9/1957ல் காலமாகிவிட்டார். எம்.ஜி.ஆர். […]

Read more

இதயம் மறப்பதில்லை

இதயம் மறப்பதில்லை, ஜீவன், மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. விஞ்ஞான காதல் கதை கார் விபத்தில் இறந்துவிடும் கதாநாயகன் விஞ்ஞான அதிசயத்தால் சில ஆண்டுகளுக்குப் பின் உயிர் பெறுகிறான். அதற்குள் அவனுடைய காதலிக்குத் திருமணம் நடந்துவிடுகிறது. இதனால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களை வைத்து, கதையை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஜீவன். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜீவன் இக்கதையை ஆங்கிலத்தில் எழுத, அதை அசல் தமிழ்க் கதைபோல் மொழிபெயர்த்துள்ளார் ஏ. கிருஷ்ணமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Read more

பண்ணைக் கருவிகள்

பண்ணைக் கருவிகள், த. ஜெயகுமார், விகடன் பிரசுரம், விலை 95ரூ. பஞ்சாப் மாநிலம், விவசாயத்தில் முன்னணியில் இருக்கிறது. அங்குள்ள விவசாயிகள், மாடுகளைப் பூட்டி, ஏர் உழும் முறையைக் கைவிட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன. நடவு முதல் அறுவடை வரை கரவீகளைக் கொண்டே சாகுபடி செய்கிறார்கள். இதனால் வேலை குறைகிறது. விளைச்சல் அதிகரிக்கிறது. இந்த கருவிகள் பற்றிய முழு விவரங்களையும், அதற்கு அரசாங்கத்திடம் இருந்து பெறக்கூடிய மானியம் பற்றிய தகவல்களையும் இந்த நூலில் தருகிறார் த. ஜெயகுமார். நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Read more

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவில் சிந்தனைகள்

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவில் சிந்தனைகள், லாவண்யா பதிப்பகம்,விலை 140ரூ. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதை முனைவர் க. மங்கையர்க்கரசி இந்த நூலில் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அலசி இருக்கிறார். மருத்துவயியல், கருவியல், மரபியல், இயற்பியல், அணுவியல், கணிதவியல், வானியல் என்பன போன்ற 12 தலைப்புகளில் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அறிவியல் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

சித்தர் கைகண்ட மருந்து

சித்தர் கைகண்ட மருந்து, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வி. பலராமய்யா, அமராவதி, விலை 80ரூ. பல்வேறு நோய்களுக்கு சித்தர் மருந்துகள் உடனடியாக பயன் அளிக்கும். அந்த மருந்துகள் செய்யும் விதத்தை விவரமாகக் கூறுகிறார், “வைத்திய ரத்தினம்” என்று புகழ் பெற்ற ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி. பலராமய்யா. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —- ஒரு தளிரின் தாகம், கவிஞர் வமூர் பால. ஞானசேகரன், ஞானகுரு பதிப்பகம், விலை 75ரூ. பக்தி கவிதைகள் கொண்ட புத்தகம். ஆன்மிகவாதிகளின் இதயத்தைத் தொடும். நன்றி: தினத்தந்தி, […]

Read more

என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான்

என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான், சித்தார்த் மெடிகேர் வெளியீடு, விலை 210ரூ. ராஜீவ் காந்தி பற்றிய புத்தகம் முன்னாள் பிரதமரும், இந்திரா காந்தியின் மூத்த மகனுமான ராஜீவ் காந்தியின் வாழ்க்கையையும், அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னணியையும் விளக்கும் புத்தகம் “என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான்.” இந்த நூலை டாக்டர் ஷரத் ராம்தேவ் சிக்ஜி இந்தியில் எழுத, இராமலட்சுமி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பு சிறப்பாக உள்ளது. புத்தகத்தின் தலைப்புதான் புரியும்படி இல்லை. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Read more

சருகுகள்

சருகுகள், போசு, டினோ, பெர்லின், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வீழ்ந்த பிறகும் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் தன்னை உருவாக்கிய மரத்திற்கே உரமாகவும் உருமாறும் சருகுகளின் பங்கு அதிகம். இதை அடிநாதமாகக் கொண்டு 18 சமூகப் பிரச்னைகளை இந்நூலில் நாடகவடிவில் அலசியிருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். விழிப்பூட்டும் சிந்தனை நாடகங்கள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

சருகுகள்

சருகுகள், போசு, டினோ, பெர்லின், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வீழ்ந்த பிறகும் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் தன்னை உருவாக்கிய மரத்திற்கே உரமாகவும் உருமாறும் சருகுகளின் பங்கு அதிகம். இதை அடிநாதமாகக் கொண்டு 18 சமூகப் பிரச்னைகளை இந்நூலில் நாடகவடிவில் அலசியிருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். விழிப்பூட்டும் சிந்தனை நாடகங்கள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன்

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன், கோ. ராஜசேகர், வாசகன் பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. எரியும் அடுப்பாக அவள் வயிறும் அணைந்த நெருப்பாக அவள் கல்வியும் – என்று பெண் கல்வியின் நிலையை இதைவிட ஆணி அடித்த மாதிரி சொல்ல முடியாது. இப்படி நிறைய கவிதைகள் நிறைந்த நூல். இளம் கவிஞர்களுக்குப் பிடிக்கும். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more
1 3 4 5 6 7 9