அறுபத்து மூவர்
அறுபத்து மூவர், நாயன்மார்கள் வரலாறு, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 450ரூ. சேக்கிழார் பெருமானால் எழுதப்பட்ட வரலாற்று காப்பியம் பெரிய புராணம். இது, சிவபெருமானின் அடியார்களான 63 நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த நாயன்மார்கள் ஐந்து முதல் பத்தாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்கள். பெரியபுராணம் 4,286 பாடல்களைக் கொண்டதாகும். பொருள் பொதிந்த சொற்களைக் கொண்டு இந்தப் பாடல்களை இயற்றியுள்ளார் சேக்கிழார். 63 நாயன்மார்களின் வரலாற்றை அனைவரும் உணர்ந்து ரசிக்கும் எளிய இனிய நடையில் எழுதியுள்ளார், ஈரோடு தங்க விசுவநாதன். புத்தகம் சிறந்த கட்டமைப்புடனும், படங்களுடனும் வெளிவந்துள்ளது. […]
Read more