உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்” என்பது திருமூலர் வாக்கு. இந்தப் புத்தகத்தில், நோய்கள் வராமல் தடுக்கவும், அப்படி நோய் வந்தால் என்ன சிகிச்சை பெறலாம் என்ற ஆலோசனைகளும் உள்ளன. குறிப்பாக சர்க்கரை நோய் பற்றிய முக்கியமான தகவல்களும், சர்க்கரை நோய் வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் விரிவாக இடம் பெற்றுள்ளன. மற்றும் சிறுநீரகக் கல் வராமல் எப்படி தடுக்கலாம், பித்த வெடிப்புக்கான சிகிச்சை முறைகள் எவை, சளித்தொல்லைக்குத் தீர்வு என்ன, அழகிய முகம் […]

Read more

மகரந்த சுவடுகள்

மகரந்த சுவடுகள், சுமதிஸ்ரீ, விஜயா பதிப்பகம், பக்.112, விலைரூ.70. தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை மகரந்த சுவடுகளாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் என எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் கஷ்டங்களை முதல் கட்டுரையில் அறிய முடிகிறது. ‘விடுதிக்குப் பணம் கட்ட முடியாததால் மதிய உணவு நேரத்தில் பட்டினியாக நூலகத்தில் நேரத்தைக் கழிக்கும் சுமதிக்கும் சேர்த்து, இரண்டு டிபன் பாக்ஸ்களில் சாப்பாடு கொண்டு வரும் கிறிஸ்டி என்னும் தோழியை 39’. ‘கடந்த […]

Read more

உலக சினிமா வரலாறு

உலக சினிமா வரலாறு, ஜாக் சி.எல்லுஸ், தமிழில் வேட்டை எஸ். கண்ணன், புதிய கோணம், பக். 608, விலை 495ரூ. சினிமாவின் துவக்க காலத்திருந்து துவங்கி, நவீன காலம் வரையில், ஆங்கிலத்தில் வெளிவந்த, ஜாக்சி எல்லீஸின் (A History of film) என்ற நூல், உலக சினிமாவின் வரலாற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் நூல். இந்நூலை, வேட்டை எஸ்.கண்ணன் அழகு தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் வாசகர்களுக்கு அளித்துள்ளார். புதிய சாதனமான சினிமாவின் குழந்தை பருவம், 1895 – 1914 அமெரிக்க சினிமாவின் எழுச்சி, 1914 […]

Read more

பாலி முதல் மியான்மார் வரை

பாலி முதல் மியான்மார் வரை, மாத்தளை சோமு, தமிழ்க் குரல் பதிப்பகம், விலை 180ரூ. எழுத்தாளர் மாத்தளை சோமு, இந்தோனேஷியாவின் பாலி தீவு முதல் மியான்மார் வரை உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தனது அனுபவங்களை சிறப்பான முறையில் பயண நூலாக தந்து இருக்கிறார். அந்த நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழின் தொன்மங்களையும் தமிழர்களையும் நேரில் கண்டு அவை பற்றிய வியக்கத்தக்க செய்திகளை பிரமிப்பூட்டும் வகையில் தந்து இருக்கிறார். இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா, உலகில் முதன் முதலாக கட்டப்பட்ட இந்து கோவிலை கொண்ட நாடு […]

Read more

இக்கால இந்தியா மற்றும் கல்வி

இக்கால இந்தியா மற்றும் கல்வி,  வி.நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.190, விலைரூ.120. பி.எட். பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய இந்திய கல்வி பற்றி எழுதப்பட்டுள்ள நூல். பல்வேறு இனம், மொழி, நிலப்பரப்பு, பொருளாதார, கலாசார வாழ்க்கைகள் கொண்ட பன்முகத்தன்மை உள்ள ஒரு நாட்டில், பலதரப்பட்ட மக்களுக்கும் ஒரே விதமான கல்வியைக் கொடுப்பதில் உள்ள சிக்கல்களை நூல் ஆராய்கிறது. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த குழந்தைகள் இடையிலேயே படிப்பை நிறுத்திவிடுவது, அல்லது அடுத்த வகுப்புக்குப் போக முடியாமல் தேர்வில் தோல்வியடைந்து தேங்கிவிடுவது, பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் உள்ள […]

Read more

மருத்துவப் பூங்கா

மருத்துவப் பூங்கா, டாக்டர் கமலி ஸ்ரீபால், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. மாலைமலர் நாளிதழில் டாக்டர் கமலி ஸ்ரீபால் எழுதிய மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அடிப்படை தேவையாகும். அதைப்போலவே ஆரோக்கியமும் அவசியத் தேவை. அதன் அடிப்படையில் நமது நலவாழ்வுக்குத் தேவையான அனைத்து மருத்துவச் செய்திகளையும் இந்த நூலில் டாக்டர் ஸ்ரீபால் அனைவருக்கும் புரியும்படி எளிய முறையில் எடுத்துக் கூறுகிறார். இருதயத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள், தலைவலி, வாய்புண், நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை தவிர்க்கும் வழிமுறைகள், சிறுநீரகக் கல், கால் […]

Read more

சித்த வைத்தியத் திரட்டு

சித்த வைத்தியத் திரட்டு, தி.நா.அங்கமுத்து முதலியார், சங்கர் பதிப்பகம், பக். 264, விலை 225ரூ. பத்தியம், புடம், கிருதம், எரு, விறகு வகைகளையும், நிறுத்தல் அளவை நிறைகள், முகத்தல், பழங்கால சித்த மருத்துவ அளவைகளையும் பட்டியலிடுகிறது இந்நூல் நன்றி: தினமலர், 21/5/2017.   —-   தமிழ் மொழி அகரமுதலி, ஞானச்செல்வன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 120ரூ. மக்களிடம் பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கும், தமிழில் கலந்து கிடக்கும் தெலுங்கு, கன்னடம், பாரசீகம், அரேபியச் சொற்களுக்கும் பொருள் தருவதாக அமைந்துள்ளது இந்நூல். […]

Read more

புற்றுநோயை வெற்றி கொள்ள வேதி சிகிச்சையை (கீமோ தெரபி)யை அறிந்து கொள்வோம்,

புற்றுநோயை வெற்றி கொள்ள வேதி சிகிச்சையை (கீமோ தெரபி)யை அறிந்து கொள்வோம், செ. நடேசன், விஜய்ஆனந்த் பதிப்பகம், பக்.96, விலை ரூ.100. உலக மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாகப் புற்றுநோய் மாறிவிட்டது. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ஒரு சிகிச்சை ஹீமோ தெரபி. ஹீமோ தெரபி பற்றிய விரிவான தகவல்களை இந்நூல் தருகிறது. ஹீமோ தெரபி மருந்துகளை உடலில் செலுத்தும் பலவிதமான முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அந்த மருந்துகள் உடலுக்குள் சென்று உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை அழித்துவிடுகின்றன. எனினும் இந்த மருந்துகளினால் முடிகொட்டுதல், எலும்பு […]

Read more

யானைச் சொப்பனம்

யானைச் சொப்பனம், இரா.நாறும்பூநாதன் நூல் வனம், பக்.176, விலை ரூ.120. நூலாசிரியர் முகநூலில் எழுதிய 59 பதிவுகளின் தொகுப்பு.நூலாசிரியரோடு தொடர்புடைய ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடைய/ தொடர்பில்லாத மனிதர்கள், இடங்கள், அவர் சந்திக்க நேர்ந்த உலக நடப்புகள் என பலவும் இந்தப் பதிவுகளின் பேசுபொருள்களாகியுள்ளன. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, அயோத்திதாச பண்டிதர், குன்றக்குடி அடிகளார் ரசிகமணி டி.கே.சி, போன்றோருடன் அவருடைய ஆசிரியர்கள், நண்பர்கள் என பலரும் இப்பதிவுகளில் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றனர். பாளையங்கோட்டையில் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு தனிப் பள்ளியைத் தொடங்கிய அனி ஜேன், திருநெல்வேலியில் இரயில்வே […]

Read more

ஆன்மிகம் அறிவோம்

ஆன்மிகம் அறிவோம், முனைவர் இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. பூஜை, சடங்குகளை செய்யும் போது அதற்கான காரண, காரியங்களை அறிந்து செய்தால், வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்; பக்தி பரவசம் பெருகும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 21/5/2017.   —-   காலத்தை வென்ற ஜோதிட சித்தர்கள், கவிதா, விலை 200ரூ. ஜோதிடக் கலையின் மூலவர்கள் சித்தர்கள். சித்தர்கள் விவரித்துள்ள பஞ்சபட்சி சாஸ்திரம், ஆரூடம், கைரேகை சாஸ்திரம், வான சாஸ்திரம் போன்ற சோதிடக் கலையைப் பற்றிய முழு விளக்கங்களை […]

Read more
1 2 3 4 9