திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ்

திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ், குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 168, விலை 140ரூ. நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை மிகச் சரியாக கணித்த தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ். தலைவர்களின் அகாலமரணம், மோசமான இயற்கைப் பேரழிவுகள், உலகப் போர்கள், சண்டைகள், சச்சரவுகள் என்று பல்வேறு அம்சங்களை 16ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் எப்படித் துல்லியமாக கணிக்க முடிந்தது என்பதை அலசும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

ஆடவும் பள்ளுப் பாடவும்

ஆடவும் பள்ளுப் பாடவும், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 96, விலை 150ரூ. ‘நீயுமா பாரதி… விடுதலையைப் பாட நாங்கள்தான் குனிந்து கும்மியடிக்க வேண்டுமா? என்ற கவிதைகளின் வரிகளிலேயே இக்கவிதைத் தொகுப்பு எதைப் பற்றியது என்பதை உணர்த்திவிடுகிறது. பெண், பெண்ணியம், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றின் தேவைகளும், கட்டாயமும் என்பது போன்ற உணர்வை ஊட்டும் கவிதைகள் இவை. நன்றி: குமுதம், 3/5/2017

Read more

பெண்களுக்காக

பெண்களுக்காக, அர்ச்சனா நடராஜன், கண்ணப்பன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. டீன் – ஏஜ் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை, அவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவம், மாதவிடாய், உள்ளிட்டப பெண்கள் பிரச்னைகள், கர்ப்பகால டிப்ஸ்கள், குழந்தைப் பராமரிப்பு, குடும்ப பராமரிப்பு, தொடர்ந்து வீட்டுத்தோட்டம் அமைப்பது வரையான பல அரிய தகவல்களைத் தாங்கி வரும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

அவலங்கள்

அவலங்கள், சாவித்ரி, எதிர் வெளியீடு, விலை 180ரூ. அவலங்களின் வாழ்வு கதாசிரியர் பிரான்ஸில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர். ஒரே நாவலின் அத்தியாயங்கள் என்று கருதும் அளவுக்கு இந்தத் தொகுப்பின் கதைகள் தொடர்கின்றன. காதல், வீரம், சோகம், நகைச்சுவை அத்தனை உணர்வுகளும் விரவிக்கிடக்கின்றன. இந்திய அமைதிப் படைப்புக்கு இரையான ராணியக்கா, சாதிக்கொடுமைக்கு ஆளான மல்லிகா, மனைவியின் காதில் ஈர்க்குச்சி சொருகியதைக் காணச் சகியாமல் கடையில் வேலை செய்து சிமிக்கி வாங்கிக்கொடுத்த நாதன் நாடு திரும்புகையில் விமானத்திலேயே மனைவியுடன் மரணிப்பது, கடல் புலிப் பிரிவில் சேர்ந்து கண்ணிழந்த […]

Read more

ஜோதிடவியல் (முதற்பாகம்)

ஜோதிடவியல் (முதற்பாகம்), கே.கே. பாவேந்தர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ஜோதிட குருகுலம், பக். 304, விலை 400ரூ. ஜோதிடத்தை முறையாகவும், சந்தேகம் ஏதுமின்றியும் பயில விரும்புவோருக்கு, இந்த நூலை விடச் சிறப்பான ‘கைடு’ கிடைப்பது அரிது என்றே சொல்ல வேண்டும். இன்று ஜோதிடம் பார்க்காதவர்களே கிடையாது என்றே சொல்லலாம். கடவுளை நம்பாத பரம நாஸ்திகர்கள் கூட ரகசியமாக தங்கள் ஜாதகத்திற்கு என்ன பலன் என்று தங்கள் குடும்பத்தவர் மூலம் பார்த்துக் கொள்ளும் காலம்! ஜாதகப் பலனைத் தெரிந்து கொள்ள ஒரு தொழில்முறை ஜோதிடரை அணுகாமல் தாங்களே […]

Read more

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. கருத்துகளின் ஜல்லிக்கட்டு தமிழ்ச் சமூகத்தில் நிகழும் சமகால மக்கள் போராட்டங்கள் குறித்து உடனுக்குடன் நூல்கள் வெளியாவது ஆரோக்கியமானதொரு அணுகுமுறை. சென்னை பெருமழை வெள்ளம், பணமதிப்பு நீக்கம் போன்றவற்றைப் பற்றிப் பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த மரபின் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்தும் நூல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரியில் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்ம் குறித்த பலரின் பன்முகப்பட்ட பார்வைகள் […]

Read more

ஜென் தத்துவ விளக்கக் கதைகள்

ஜென் தத்துவ விளக்கக் கதைகள், சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், பக். 192, விலை 100ரூ. இந்தியாவில் வேரூன்றி உலகு எங்கும் கிளை பரப்பி, மணம் வீசுவது புத்த மதம். ஜப்பான் மக்களின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் புத்த தத்துவங்கள் வழி காட்டியுள்ளன. காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ற ஜென் தத்துவக் கதைகள், கைபேசி ‘சிப்’ அளவு சிறிதாக இருந்தாலும், கதையின் வீச்சு மனதைப் பெரிதா ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஒவ்வொரு கதையும் தர்க்க வாதங்களுடன் தொடங்குகிறது. தன்னைத் தான் ஆராய்கிறது. திருப்பமாக ஒரு தீர்ப்பைத் தருகிறது இந்தக் கதைகளில். […]

Read more

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள், குன்றில் குமார், குறிஞ்சி, பக். 176, விலை 150ரூ. நூலாசிரியர் குன்றில் குமார் கூறும் கருத்துக்கள், அதிசயம். ஆனால், உண்மை என்ற நிலையில் விளக்கம் பெறுகின்றன. அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி நம்ப முடியாத அதிசயங்களும், வியப்பும், அமேசான் காடுகளில் ஏராளமாக உள்ளன. ‘அமேசான்’ என்றால் மரங்களை அழிக்க வல்லவன் என்று அப்பகுதிமக்கள் மொழியில் அர்த்தமாம். தென் அமெரிக்காவில், பிரேசில், பெரு, பொலிவியா, கானா, ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா ஆகிய […]

Read more

குற்றங்களே நடைமுறைகளாய்

குற்றங்களே நடைமுறைகளாய், ப. திருமலை, வாசகன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பாக, பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக உருவாக்கியுள்ளார் ஆசிரியர். தமிழகத்தின் கல்வி அறிவு, குற்ற செயல்கள், விவசாய பிரச்னை, மழை, சூழியல் வன உயிர்கள் பாதுகாப்பு என, பல துறைச் சார்ந்த, 25 கட்டுரைகள், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ‘தமிழகத்தில், கடந்த, எட்டு ஆண்டுகளில், மட்டும் காணாமல் போன விவசாய நிலம், 13 லட்சம் ஏக்கர் ஆகும். ‘காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, […]

Read more

ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு

ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு, முனைவர் அ.காமாட்சி, முனைவர் செ.கல்பனா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 428, விலை 325ரூ. ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்நூறு பாடல்களையும் உருபன் அடிப்படையில் பகுத்து, உரையுடன் இந்த நூலின் முதற்பகுதி தருகிறது. இரண்டாம் பகுதியில் ஐங்குறுநூற்றில் வரும் சொற்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அகர வரிசைப்படுத்தப்பட்டு இலக்கணப் பொருளும், ஆங்கில இலக்கண விளக்கமும், தமிழ்ச் சொல்லும் வழங்கப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில் சொற்கோவையில் இடம் பெற்றுள்ள சொற்கள் வரும், ஐங்குறுநூற்றுப்பாடல் எண்ணும், அடி எண்ணும் தரப்பட்டுள்ளன. ஐந்தாம் பகுதியில் ஐங்குறுநூற்றுச் சொற்களுக்கு […]

Read more
1 6 7 8 9