சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ. ஆறடுக்கு முறைப் பதிப்பு ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது சேர முனிவரான இளங்கோ அடிகளால் இயற்றப்பட்டது. கற்பில் சிறந்த கண்ணகி, அவளுடைய கணவன் கோவலன் ஆகியோரின் சரித்திரத்தைக் கூறும் நூல். இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனும் முப்பெரும் காண்டங்களைக் கொண்டது. இது மூவேந்தர்களின் தலைநகரான புகார், (காவிரிப்பூம்பட்டினம்), மதுரை, வஞ்சி என்னும் மூன்று பெருமைகளையும் விளக்குகிறது. சிலப்பதிகாரத்திற்கு ஆறடுக்கு முறைப் பகுப்பில் புலவர் மா.நன்னன், அழகிய முறையில் உரை எழுதியுள்ளார். முதலில் ஒவ்வொரு காதைகளிலும் உள்ள […]

Read more

ஐக்கிய நாடுகள் சபையும் உலக அமைதியும்

ஐக்கிய நாடுகள் சபையும் உலக அமைதியும், பிள்ளை லோகியா, பரத் புக்ஸ், விலை 50ரூ. மீண்டும் உலகப்போர் மூண்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டது ஐ.நா. சபை. அதுபற்றிய விவரங்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

தியாக தீபங்கள் பன்னிரெண்டு

தியாக தீபங்கள் பன்னிரெண்டு, கோவை சுந்தரம், விலை 15ரூ. மகாத்மா காந்தி, நேரு, வ.உ.சிதம்பரனார், பாரதியார், காமராஜர், சத்திய மூர்த்தி உள்பட 12 தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம். படங்களும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

செஞ்சொல் உரைக்கோவை

செஞ்சொல் உரைக்கோவை, கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 86ரூ. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலக்கிய இன்பம், முத்தமிழ், திருப்புகழ் இன்பம், தேவார இன்பம் என்ற 8 தலைப்புகளில் கிருபானந்த வாரியார் பேசிய பேச்சுக்களின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு

முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு, முனைவர் பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 65ரூ. தமிழ்நாட்டில் தோன்றிய மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மக்களிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கு வியப்புக்கு உரியது. ஒரே சமயத்தில் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் போட்டியிடுவார். இரண்டிலும் வெற்றி பெறுவார். நேதாஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் மணிக்கணக்கில் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் முனைவர் ப.பாலசுப்பிரமணியன். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

ஒரே தேசம் ஓர் ஊர் சிலமனிதர்கள்

ஒரே தேசம் ஓர் ஊர் சிலமனிதர்கள், வி.வி.ஆர், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. பல கதைகளும், கட்டுரைகளும் எழுதி புகழ் பெற்ற எழுத்தாளர் வி.வி.ஆர். எழுதிய முதல் நாவல் இது. ஆனால் முதல் நாவல் என்று சொல்ல முடியாத அளவுக்கு திகைப்பூட்டும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நாவலை எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

நதி வெள்ளத்தின் துளி

நதி வெள்ளத்தின் துளி, குழல்வேந்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 90ரூ. ஒரு கவிஞரோடு ஒரு வாசகன் பழகுதல். அந்த கவிஞன் எழுதிய கவிதைகளை அலைபேசி வழியே வாசிக்கக் கேட்டு இன்புறுதல். கவிஞரை நேரில் சந்திக்க வாசகன் ஆவல். படைப்புப் பாலம் இணைத்த இருவருக்குமான உறவுப் பாலம், கவிஞரின் மரணத்தால் தகர்ந்து போதலை, ‘தொலை குரல் தோழமை’ கதையால் உணர முடிகிறது. நன்றி: தினமலர்..

Read more

அகநானூறு

அகநானூறு, தொகுப்பு முனைவர் மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம், விலை 300ரூ. பதிப்பாசிரியர் ராஜகோபாலார்யன் உரை எழுதி பதிப்பித்த அகநானூற்றுப் பாடல்கள் 91 முதல் 160 வரையில் உள்ள 70 பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. பின்னிணைப்பாக ராஜகோபாலார்யன் உரை நெறியும் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

கடல் தாவிய கதாநாயகன்

கடல் தாவிய கதாநாயகன், முனைவர் கு. ஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், விலை 80ரூ. ராமதூதனாக கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றவர் அனுமார். சிரஞ்சீவி வரம் பெற்றவர். ராமாயணம், மகாபாரம் இரண்டிலும் இடம் பெற்ற ஒரே கதாபாத்திரம். அத்தகைய சிறப்பு பெற்ற ஆஞ்சநேயரின் பெருமைகளைக் கூறுகிறார் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

பலன் தரும் பரிகாரத் தலங்கள், அறந்தாங்கி சங்கர், அறந்தாங்கி சங்கர் பதிப்பகம், பக். 76, விலை 150ரூ. தலையெழுத்தை மாற்றி, வாழ்வை வளமாக்கும் திருப்பட்டூர் ஈசன், புற்றுநோயை நீக்கும் அன்னை பாகம் பிரியாள், கண்ணொளி வழங்கம் கண்ணாயிர நாதர் திருக்காரவாசல், குழந்தை வரம் அருளும் குன்றக்குடி முருகன், சகல காரிய சித்தி அருளும் ஸ்ரீரங்கம் பேசும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட தலங்களின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர்,10/9/2017.

Read more
1 6 7 8 9