இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும்

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும், ப. திருமலை, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. சமூக, பொருளாதார, அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் பொதுமக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போகிறதா பொது வினியோகத் திட்டம்? அள்ளும் மணல் அழியும் உயிரினம், தமிழகத்தில் தலித் படுகொலைகள், பிளாஸ்டிக் பயங்கரம், சுங்கச் சாவடியா வழிப்பறி நிலையமா?, பொது சிவில் சட்டம் அவசியமா? என்பன போன்ற 42 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவிலும், மாநில அளவிலுமான மக்கள் பிரச்சினைகள் குறித்து இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. மக்களின் அன்றாட வாழக்கையைப் பறிக்கும் அரசின் கொள்கைகள் […]

Read more

கடைசித் தீக்குச்சி

கடைசித் தீக்குச்சி, ராஜேஷ்குமார், அருணோதயம், விலை 150ரூ. கிரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் தனது கைவண்ணத்தில் அடுக்கடுக்காக கோர்த்துவிடும் மர்ம முடிச்சுகளை வாசர்களை விட்டே அவிழ்க்க ஆர்வப்படுத்தும் மற்றொரு திகில் நாவல் ‘கடைசி தீக்குச்சி’. இது தினத்தந்தியில் தொடர்கதையாக வெளியானபோதே வாசகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. சித்தார்த் என்பவர் தலைமையில் குரங்குகளை கொண்டு பயோஜெனிக் எனும் ப்ராஜெக்டை இளம் ஆராய்ச்சியாளர்கள் சபரியும், பிரதாப்பும் மேற்கொள்கிறார்கள். இதற்கிடையே சபரியின் மனைவியான அஜந்தாவின் தோழி வாசுகி அவன் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். போலீசுக்கு […]

Read more

தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள், தொகுப்பு ந.முருகேசபாண்டியன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 110ரூ. 25 ஆண்டுகளாக சிறுகதைகள் எழுதி வருகிறார், இறையன்பு ஐ.ஏ.எஸ். விமர்சகர்களாலும், வாசகர்களாலும் பாராட்டப்பட்ட கதைகள் ஏராளம். அந்தக் கதைகளில் மிக மிகச் சிறப்பான கதைகளை தேர்வு செய்து இந்தப் புத்தகத்தில் இடம் பெறச் செய்திருப்பவர் ந.முருகேசபாண்டியன். கதைகளைத் தரம் அறிந்து தேர்வு செய்வதில் அவருக்குள்ள இந்தத் தொகுப்பை தரம் உயர்ந்ததாகச் செய்திருக்கின்றன. இதில் உள்ள 14 கதைகளும் நன்முத்துக்கள். ஒரு பூனையை மையமாக வைத்து எழுதப்பட்ட பூனாத்தி என்ற கதை, […]

Read more

நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் காலமும் வெளியும்

நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் காலமும் வெளியும், தமிழ்மணவாளன்,  அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக்.400, விலை ரூ390. ஓர் ஆய்வேடு நூலாகியுள்ளது. தமிழ்க் கவிதை மரபில் நவீன தமிழ்க் கவிதைகள், நவீன தமிழ்க் கவிதைகளில் நாடக ஆக்கக் கூறுகள், நவீன தமிழ்க் கவிதைகளில் பாத்திரப் படைப்பும் உரையாடலும், நவீன தமிழ்க் கவிதைகளில் காலமும் வெளியும் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டு திகழும் இந்நூல், எடுத்துக் கொண்ட தலைப்புக்குத் தகுந்தாற்போல இந்நான்கு இயல்களிலும் பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு. நூல் முழுவதும் நவீன தமிழ்க் […]

Read more

நொய்யல் இன்று பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்

நொய்யல் இன்று பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம், கா.சு.வேலாயுதன், சப்னா புக் ஹவுஸ், பக்.206, விலை ரூ.140. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தோன்றி வரும் ஆறுதான் நொய்யல் ஆறு. நீலியாறு, கோவை குற்றாலம், வைதேகி நீர் வீழ்ச்சி ஆகியவைதான் நொய்யல் ஆறாக மாறுகின்றன. இன்று காய்ந்து கிடக்கும் இந்த ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு பலமுறை ஏற்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டபோது, அவரே நேரடியாக வெள்ளநீரில் இறங்கி நடந்து மக்களைச் சந்தித்திருக்கிறார். இப்போது நொய்யல் ஆற்றின் பல பகுதிகள் […]

Read more

பெரியார் 95

பெரியார் 95. ஞான வள்ளுவன், இனியன் பதிப்பகம், பக்.464, விலை ரூ.300. ஈ.வெ.ரா.பெரியாரின் வாழ்க்கை வரலாறு, இந்நூல். அவர் சிறுவயதில் அவர் செய்த குறும்புகள், வாலிப வயதில் அவருக்கிருந்த தீய பழக்கங்கள், அவற்றை அவர் கைவிட்டது, பொறுப்பான வணிகராக, நகராட்சி தலைவராக அவர் செயலாற்றியது, காங்கிரஸில் சேர்ந்தது, மதுவிலக்கை ஆதரித்துப் போராடியது, வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தது, சுயமரியாதை இயக்கம் கண்டது, மணியம்மையைத் திருமணம் செய்தது, தி.மு.க. உதயமானது, காமராசரை பெரியார் ஆதரித்தது என அவருடைய 95 ஆண்டுகால வாழ்க்கை, தமிழகத்தின் அரசியல் வரலாற்றுடன் இணைந்து சென்றதை […]

Read more

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?, டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன்; நலம்,  பக்.128; விலைரூ.125. யோகாசனம், தியானம், பக்தி போன்றவை மனித மூளை, மனம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் மாறுதல்களை அறிவியல் அடிப்படையில் விளக்கும் நூல் இது. உதாரணமாக சிலவற்றைச் சொல்லலாம். ‘கம்ப்யூட்டர் உதவியுடன் மனித மூளையின் ஒவ்வொரு பகுதியிலும் மின் அலை அளவுகளை உடனடியாகக் கணக்கிடலாம். அதன்மூலம், அவருக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்னைகளையும் எளிதில் அறியலாம். ஒருவர் கண்களை மூடி பிரார்த்தனை செய்வது போல் இருக்கும்போது இந்த ஆல்ஃபா மின் அலைகள் ஏற்படுகின்றன. கண்களைத் […]

Read more

நெருங்காதே நீரழிவே

நெருங்காதே நீரழிவே, டாக்டர் எஸ். விஜயராகவன், சுஜாதா தேசிகன், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. சர்க்கரை நோயினால் (நீரழிவு) பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த நோயிலிருந்து விடுபட வழி சொல்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணக் கதைகள், ஆதிரையார், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமான் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழப் பேரரசின் முதல் அமைச்சராக இருந்தவர். அவரால் அருளப்பெற்றது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநீலகண்டர், கண்ணப்பர், குலச்சிறையார், திருமூலர், காரைக்கால் அம்மையார் உள்பட 72 சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் புத்தகத்தை எழுதியுள்ளார், ஆதிரையார். அழகிய அட்டைப்படம், அருமையான வடிவமைப்பு. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

பணம் பத்திரம்

பணம் பத்திரம், செல்லமுத்து குப்புசாமி, கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? அந்த சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்?, அதை எப்படி அதிகரிக்கலாம்? என்பது குறித்த பர்சனல் பைனான்ஸ் பற்றி செல்லமுத்து குப்புசாமி எழுதிய நூல். வீடு, தங்கம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வது சரியானதா? பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்? என்பது குறித்து எளிமையாக விளக்குகிறார். சேமிப்பின் அவசியத்தை விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more
1 5 6 7 8 9