காவிரி மகாத்மியம்

காவிரி மகாத்மியம், வே.மகாதேவன், இந்து கலாச்சாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வுமையம், பக்.208, விலை 100ரூ. அண்மையில், நடைபெற்ற காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்நுால், காவிரியின் பெருமையைப் புராண, வரலாற்றுச் சான்றுகளோடு மேற்கோள் பாடல்களுடன் விரிவாகப் படைக்கப்பட்டுள்ளது. குரு பகவான், 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நதியில் புஷ்கர மேளா தீர்த்தவாரி நிகழ்வது பற்றி குறிப்பிடுகையில், 12 ராசிகளிலும் குரு இருக்கும்போது ஒவ்வொரு புண்ணிய நதியில் புஷ்கரம் உருவாக ஏற்பாடாகி, அதன்படி குரு மேஷத்தில் இருக்கும்போது கங்கைக்கு விசேஷம். ரிஷபத்தில் நர்மதை, […]

Read more

ஆடிப்பாவை போல

ஆடிப்பாவை போல, தமிழவன், எதிர் வெளியீடு, பக். 404, விலை 350ரூ. தமிழவன் படைப்புகள் பொதுவாக, நவீனத்துவம் சார்ந்தனவாய் அமைவன. மேனாட்டு இலக்கிய உத்திகளை அறிந்து வைத்திருக்கிற அவர், தாம் படைக்கும் படைப்புகளில், அத்தகைய உத்திகளை அறிமுகப்படுத்துவதில், ஆர்வம் கொண்டிருப்பவர். பின் நவீனத்துவ வாசிப்பினுாடே, புதிய பரிமாணங்களில் நவீனத்தை மையப்படுத்தி, எழுதி வரும் அவர், பரிசோதனை முயற்சியாகப் படைப்பிலக்கியம் அமைய வேண்டும் என்ற, எதிர்பார்ப்பைத் தம் படைப்புகள் ஒவ்வொன்றிலும் பதிவு செய்து வருபவர். அந்த வகையில், ‘ஆடிப்பாவை  போல’ என்ற நாவலும் அமைந்திருக்கிறது. குறுந்தொகையில்  […]

Read more

புனைவு வெளி

புனைவு வெளி, நா. விச்வநாதன், பேசும் புதிய சக்தி பதிப்பகம், விலை 150ரூ. சி.சு.செல்லப்பா தொடங்கி தஞ்சை ப்ரகாஷ் வரை 18 இலக்கிய பிதாமகர்களைப் பற்றிய எழுத்துக் கோலம்தான் இந்தப் புத்தகம். எளிய வாசகர்களுக்கும் எழுத்து ஆளுமைகளை அடையாளம் காட்டும் விதமாக எளிமையான தமிழில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம். தமிழுக்கு நல்வரவு. ஒரு ஆரம்பப் பள்ளி வாத்தியார் தோற்றம், ஒரு மாத தாடி’ என்று சி.சு.செல்லப்பாவை இவர் உருவகிக்கும் சித்திரம் வாசகரை 60-களின் செல்லப்பாவைத் தேட வைக்கிறது. ஒவ்வொரு தனிநபரும் ஒரு தத்துவம்தான். தரிசனம்தான். […]

Read more

திருக்குர்ஆனில் மறுமை

திருக்குர்ஆனில் மறுமை,  தமிழில் கே.எம். முகம்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 210ரூ. மறுமை குறித்து சிந்திக்காத முஸ்லிம் யாரும் இருக்க முடியா. இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில், இறைநம்பிக்கையுடன், மறுமையின் மீதுள்ள நம்பிக்கையும் இணையும் பொழுதுதான் அது முழுமை பெறுகிறது. ஒவ்வொரு தனிமனிதனின் மறுமை வாழ்வு அவனது மரணத்தில் இருந்துதான் தொடங்குகிறது. மறுமை எப்படி நிகழும்? உலக அழிவு எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கு கேரள இஸ்லாமிய அறிஞர் கே.சி. அப்துல் லாஹ் மவுலவி அழகிய முறையில் விளக்கம் அளித்துள்ளார். அவர் எழுதிய […]

Read more

மல்லிகைபூ

மல்லிகைபூ, ஞா.சிவகாமி, பூம்புகார் பதிப்பகம், விலை 50ரூ. தலைமைச் செயலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய ஞா.சிவகாமி எழுத்துறையிலும் முத்திரை பதித்தவர். அவர் எழுதியுள்ள மல்லிகைப்பூ என்ற இந்தப் புத்தகத்தில், 25 சிறுகதைகள் அடங்கியுள்ளன. எல்லாமே மனதைத் தொடும் கதைகள். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

கடவுளால் முடியாத செயல்கள்

கடவுளால் முடியாத செயல்கள், முரு.பழ.ரத்தினம் செட்டியார், பதிப்பாசிரியர் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலை 125ரூ. மயிலம், பொம்மபுர ஆதினத் திருமடத்தில் நடந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 12ம் ஆண்டு விழா மாநாட்டில் வெளியிடப்பட்ட நூல். சைவ சித்தாந்த ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல ஆய்வுப் பெட்டகமாகவும், ஆய்வு அணுகுமுறைகளோடு சைவ சித்தாந்தத்தை உணர வைக்கிறது. அத்துடன் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைகளை ஆராய்பவர்கள் ஆராய்ச்சி முறைகளுக்காகவும், தெளிவுக்காகவும் படிக்க வேண்டிய புத்தகம். முரு.பழ.ரத்தினம் செட்டியார் […]

Read more

சொந்தச் சகோதரிகள்

சொந்தச் சகோதரிகள், கே. பாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. வலியின் கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்த தனது கதைகளை ‘சொந்தச் சகோதரிகள்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்திருக்கிறார் கே. பாரதி. எட்டு வயதில் திருமணம், 12 வயதில் கணவன் மரணம் என தன்னுடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தன்னுடைய நீண்ட கூந்தலை மழிப்பதற்காக உட்கார்ந்திருக்கும் பாகீரதியின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பிராமணக் குடும்பங்களில் விதவைப் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்தக் கதை கூர்மையாக விளக்குகிறது. ‘சுயம்’ எனும் […]

Read more

அற்புத மனிதர் அப்துல்கலாம்

அற்புத மனிதர் அப்துல்கலாம், நெல்லை சு.முத்து, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக்.112, விலை 100ரூ. அப்துல் கலாம் தம்மை நாட்டுக்கே தந்து வான் புகழ் கொண்ட சிற்றுார், தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் எனும் கடலோரக் கிராமம். சிவாலயமும், வைணவக் கோவிலும், முகம்மதியப் பள்ளிகளும் அருகருகே இருந்தன. போட்டி பொறாமையின்றி அமைதியுடன் வாழ்ந்து வந்த தமிழகத்தின் முதலாவது சமத்துவபுரம் அந்தத் தீவு. ஆபுல் – காபுல் ஒலியுல்லா தர்க்கா என்னும் தொழுகை இடம் ராமேஸ்வரத்தில் உள்ளது. அவர்கள் ஆதாமின் மக்கள் என்று திருமறை உரைக்கிறது. […]

Read more

தாய்

தாய், தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகெங்கும் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்களால் அமரத்துவம் மிக்க புரட்சிகரமான நாவலாக அங்கீகரிக்கப்பட்ட நாவல், மார்சிம்கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலாகும். ஒரு புரட்சித்தாயின் வேட்டைத் தவமாக, என்றென்றும் அழியாத காவியமாக கார்க்கி இந்த நாவலைப் படைத்துள்ளார். இன்று வரை தொழிலாளி வர்க்கத்திற்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து, வீரத்தை ஊட்டி வரும் ஓர் உலக இலக்கியம் என்றே இந்த நாவலைக்கூறலாம். இந்த நாவல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. நாவலை தமிழில் எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், அழகிய […]

Read more

மகாபாரதம் மாறுபட்ட கோணத்தில்

மகாபாரதம் மாறுபட்ட கோணத்தில், சுரானந்தா, சுரா பதிப்பகம், விலை 200ரூ. இந்தப் புத்தகத்தை எழுதிய சுரானந்தா, உண்மையில் மகாபாரதத்தை நன்கு ஆராய்ந்து, புதிய கோணத்தில் எழுதியுள்ளார். இடையிடையே தன் கருத்துக்களையும் சொல்கிறார். இதில் பல புதிய தகவல்கள் அடங்கியுள்ளன. சகுனி, பகடை உருட்டுவதில் வல்லவன். அதற்குக் காரணம் அவனுடைய அண்ணன், தான் இறப்பதற்கு முன்னதாக இரண்டு பெருவிரல்களையும் வெட்டித் தருகிறான். அவைதான் பகடைக்காய்களாக மாறி, வெற்றி தேடித்தருகின்றன. இப்படி சுவையான தகவல்கள் நிறைய உள்ளன. நன்றி: தினத்தந்தி, 08/11/2017

Read more
1 5 6 7 8 9