காலனியத் தொடக்கக் காலம்(கி.பி 1500-1800)

காலனியத் தொடக்கக் காலம்(கி.பி 1500-1800), எஸ்.ஜெயசீல ஸ்டீபன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 195ரூ. உலகம் சுற்றிய அடிமைகள் தமிழகம் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டபோது நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் பேசும் ஐந்து ஆய்வுக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ராணுவத்தில் சேர்ந்தது, கைவினைஞர்கள் மற்றும் மீன்பிடிச் சமூகங்களின் வாழ்க்கை நிலை, ஐரோப்பியர்களின் அடிமை வணிகம், மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட தமிழக அடிமைகளின் நிலை என காலனிய கால கட்டத்து வரலாற்றைப் பேசும் தொகுப்பு. போர்த்துகீசு, பிரெஞ்சு மொழிகளில் உள்ள இதுவரை […]

Read more

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி)

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி), வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 175ரூ. விதியால் இறப்பவர்களைவிட விரக்தியால் தற்கொலை செய்து கொள்பவர்களால் ஏற்படும் இழப்புகள் கொடுமையானது. ஒற்றை விநாடியில் முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்கு பதில் சில நிமிடங்கள் நிதானித்து மனம் விட்டுப் பேசினால் எத்தகைய பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். உயிரை பாதிக்கும் வழியில் இருந்து சாதிக்கும் பாதைக்கு மனதைத் திருப்பும் முறையினை எளிமையான நடையில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் இறையன்பு. படித்து முடித்ததும் மனதில் தளர்ச்சி நீங்கி தன்னம்பிக்கை பரவுவது நிச்சயம். நன்றி: […]

Read more

மகாபாரதம் – மாறுபட்ட கோணத்தில்

மகாபாரதம் – மாறுபட்ட கோணத்தில், சுரானந்தா, சுரா பதிப்பகம், பக்400, விலை ரூ.200. வேதவியாசரால் எழுதப்பட்ட மகாபாரதம் ஓர் இதிகாசம். ஒவ்வொரு மனிதரும் அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்பிக்கிறது. நம்ப முடியாத பல சம்பவங்களும் கிளைக்கதைகளும் இதில் உள்ளன. மகாபாரதத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் இன்றைக்கும் நாம் பல உருவங்களில் காணமுடிகிறது என்பதுதான் வியப்பு. அதுமட்டுமல்ல, கலியுகத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதை அன்றைக்கே பட்டியலிட்டிருக்கும் வேதவியாசர் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான். துரியோதனனை தீயவன் என்று முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. அதே சமயம் யுதிஷ்டிரனை முழுமையான […]

Read more

மண்ணும் மனிதரும்

மண்ணும் மனிதரும், சிவராம காரந்த், தமிழில்; தி.ப.சித்தலிங்கையா, சாகித்திய அகாதெமி, பக்.648, விலை ரூ.485. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளரின் சிறந்த படைப்பு. ஒரு கடலோர வேளாண்மைக் குடும்பத்தில் நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. நிலத்தை விட்டு தொழில் செய்ய நகரத்துக்கு இடம் பெயர்தல் நிகழ்கிறது. ஆங்கிலக் கல்வி பெற்ற இரண்டாம் தலைமுறை, மண்ணுடன் தனக்குள்ள உறவுகளை இழக்கிறது. மூன்றாம் தலைமுறை வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. இத்தகைய நெருக்கடியில் அந்தக் குடும்பப்பெண்கள் முன்னேறவும், நிலை நிற்கவும் போராடுகிறார்கள். பார்வதி, சரசுவதி, நாகவேணி என்ற மூன்று பெண்களும் […]

Read more

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?, ஜெயராணி, எதிர் வெளியீடு, விலை 220ரூ. புதிய வெளிச்சம் பெருமளவில் கவனம் பெற்ற ‘ஜாதியற்றவளின் குரல்’ தொகுப்புக்குப் பிறகாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சமூகத்தின் ஒவ்வொரு அடுக்குகளிலும், எல்லாமட்டத்திலும் எவ்விதமாக சாதியம் தனது மூர்க்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதையும், ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப சாதிய வன்மம் எவ்வாறு தனது ரூபத்தை மாற்றிக்கொண்டு அதே மூர்க்கத்தோடு செயல்படுகிறது என்பதையும் ஜெயராணியின் கட்டுரைகள் முன்வைக்கின்றன. சாதியக்கூறுகளைத் தனித்துவத்துடன் அணுகும் ஜெயராணியின் பார்வை, சாதியக் கண்ணோட்டதில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. நன்றி: தி இந்து, […]

Read more

எம்மும் பெரிய ஹூமும்

எம்மும் பெரிய ஹூமும், ஜெர்ரி பிண்டோ, தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி, சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.240. 2016 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம் இந்நூல். இதுதவிர, கிராஸ் வேர்ட் புக் அவார்டு உட் பட பல விருதுகளை இந்நூல் பெற்றுள்ளது. மும்பையில் மாஹிம் பகுதியில் ஒரு படுக்கையறை உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளைச் சித்திரிப்பதே இந்நாவல். எம் என்றழைக்கப்படும் தாய் மனநோய் உள்ளவள். அதன் காரணமாக மிகுந்த மகிழ்ச்சி அல்லது […]

Read more

மௌனத்தின் நிழல்

மௌனத்தின் நிழல், கர்ணன், கவிதா பப்ளிகேஷன், பக்.320, விலை ரூ.280. விடுதலைப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் ஏற்கெனவே பல புதினங்கள் வந்துள்ளன. இதுவும் அவ்வகையிலானதுதான் எனினும், குறிப்பிட்ட ஓர் ஊரை மட்டுமே கதைக்களமாகக் கொண்டிருப்பதாலும், நிஜத்தில் வாழ்ந்து மறைந்தவர்களே கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருப்பதாலும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. ஆன்மிக நகரமாக அறியப்பட்டிருக்கும் மதுரை, தென்னிந்தியாவின் அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்ததை ஏராளமான உண்மை நிகழ்வுகள் மூலம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். தொடக்கத்தில் காவல்துறை அதிகாரி சேதுராமன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வதைப் படிக்கும்போதே […]

Read more

மீனும் பண் பாடும்

மீனும் பண் பாடும், ஹால்டார் லேக்ஸ்நஸ், தமிழில் எத்திராஜ் அகிலன், காலச்சுவடு பதிப்பகம், விலை 375ரூ. மாறுவேடமிட்டிருக்கும் நம் முகங்கள் நோபல் பரிசு பெற்ற ஹால்டார் லேக்ஸ்நஸை ‘மீனும் பண் பாடும்’ நாவல் மூலமாகத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் எத்திராஜ் அகிலன். இந்த நாவலில் இழையோடும் பகடிக்காகவே ஆர்வத்தோடு வாசித்தார்கள். இன்றைய சமூகத்தில் உலகமயமாக்கல் விளைவித்திருக்கும் இடர்ப்பாடுகளை நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே யூகிக்கத் தொடங்கியிருக்கிறார் லேக்ஸ்நஸ். அயல்தேச கிராமவாசிகளின் நாட்டார் வழக்குகளும், அவர்களது வாழ்வுமுறையும், மனவோட்டங்களும் ஆச்சர்யத்தக்க வகையில் நமது சூழலுக்கு மிக […]

Read more
1 7 8 9