வேத வாழ்வில் பெண் குரல்

வேத வாழ்வில் பெண் குரல், ஜி.ஏ.பிரபா, சந்தியா பதிப்பகம்,பக்.120, விலை ரூ.115. வேதகாலப் பெண்களான மைத்ரேயி, லோபமுத்ரா, காத்யாயினி, ஸ்ரீமதி, ஜபாலா, மானஸ புத்ரா, கார்கி, ஷ்ரத்தாவதி முதலிய 20 பேர் பற்றிய கதைகள் இந்நூலில் உள்ளன. வேத காலத்தில் மக்கள் நியாயம், சத்தியம், உண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்; பொறாமை, கோபம், அடுத்துக் கெடுக்கும் எண்ணமில்லாமல் வாழ்ந்தனர்; ஆணுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்துரிமைகளையும் பெற்றிருந்தனர்; அறிஞர்கள் சபையில் எதிர்த்து வாதாடவும், புரோகிதமும் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பன போன்ற தகவல்களோடு அன்றைய பெண்களின் புத்திசாலித்தனம் […]

Read more

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள், தொகுப்பாசிரியர்: மு.சாயபு மரைக்காயர்,வானதி பதிப்பகம், பக்.504, விலைரூ.400. குறிப்பிடத்தக்க இஸ்லாமிய படைப்பாளிகளான ஜெய்புன்னிசா, தாழை மதியவன், குணங்குடி மஸ்தான் சாகிபு, கா.மு.ஷெரீப், மு.சாயபுமரைக்காயர், நசீமா பானு, மீரான் மைதீன், சல்மா, அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலருடைய படைப்புகளில் காணக் கிடைக்கும் பெண்ணியச் சிந்தனைகளைப் பற்றி பேசும் நூல். 77 கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் பெண்ணுரிமை தொடர்பான இஸ்லாமிய நெறி என்ன என்பதைப் பல கட்டுரைகள் விளக்குகின்றன. 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்களில் நிறைய ஆண்கள் கொல்லப்பட்டதால், பெண்கள் […]

Read more

காலத்தைச் செதுக்குபவர்கள்

காலத்தைச் செதுக்குபவர்கள், ராம் முரளி, யாவரும் பதிப்பகம், விலை 200ரூ. திரை மேதைகளை அறிவோம் மொழிபெயர்ப்புகளின் வாயிலாகத் திரையுலக உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் ராம் முரளியின் இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இது. திரைத் துறையில் தீவிரமாக இயங்கிய இயக்குநர்களின் வாழ்வை அறிவதன் மூலம் அவர்களது படைப்புகளை நெருக்கமான அணுக உதவும்விதமாக நேர்காணல்களும் கட்டுரைகளும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆன்மிக மற்றும் தத்துவார்த்தக் கண்ணோட்டம் கொண்ட இயக்குநர்கள், அரசியல்ரீதியில் திரைப்படங்களை அணுகியவர்கள், புதிய திரைப்பாணியுடன் வலம்வரும் சமகாலப் படைப்பாளிகள் என மூன்று பகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, […]

Read more

பிரச்சினைகளும் தீர்வுகளும்

பிரச்சினைகளும் தீர்வுகளும், முஹம்மது யஹ்யா தாவூதி, எஸ்.கே.எஸ்.பப்ளிஷரஸ், விலை 70ரூ. இந்த நவீன யுகத்தில் ஒவ்வொரு மனிதரும் சந்திக்கும் பிரச்சினைகளை பேசுவது மட்டுமல்லாது, அதனை களைவதற்கான தீர்வுகளையும் அருமையாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

மண்ணும் மனிதரும்

மண்ணும் மனிதரும்,  சிவராம காரந்த், தமிழில்; தி.ப.சித்தலிங்கையா, சாகித்திய அகாதெமி, பக்.648, விலை ரூ.485. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளரின் சிறந்த படைப்பு. ஒரு கடலோர வேளாண்மைக் குடும்பத்தில் நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. நிலத்தை விட்டு தொழில் செய்ய நகரத்துக்கு இடம் பெயர்தல் நிகழ்கிறது. ஆங்கிலக் கல்வி பெற்ற இரண்டாம் தலைமுறை, மண்ணுடன் தனக்குள்ள உறவுகளை இழக்கிறது. மூன்றாம் தலைமுறை வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. இத்தகைய நெருக்கடியில் அந்தக் குடும்பப்பெண்கள் முன்னேறவும், நிலை நிற்கவும் போராடுகிறார்கள். பார்வதி, சரசுவதி, நாகவேணி என்ற மூன்று […]

Read more

மௌனத்தின் நிழல்

மௌனத்தின் நிழல்,கர்ணன்  கவிதா பப்ளிகேஷன், பக்.320. விலை ரூ.280; விடுதலைப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் ஏற்கெனவே பல புதினங்கள் வந்துள்ளன. இதுவும் அவ்வகையிலானதுதான் எனினும், குறிப்பிட்ட ஓர் ஊரை மட்டுமே கதைக்களமாகக் கொண்டிருப்பதாலும், நிஜத்தில் வாழ்ந்து மறைந்தவர்களே கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருப்பதாலும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. ஆன்மிக நகரமாக அறியப்பட்டிருக்கும் மதுரை, தென்னிந்தியாவின் அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்ததை ஏராளமான உண்மை நிகழ்வுகள் மூலம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். தொடக்கத்தில் காவல்துறை அதிகாரி சேதுராமன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வதைப் படிக்கும்போதே […]

Read more

வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட வரலாறு

வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை, வ.உ.சி.நூலகம், விலை 1500ரூ. பற்றி எரிந்த பனை! பிரபாகரனின் இளமைப் பருவம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையிலான வரலாறு. கூடவே, பிரபாகரனின் நேர்காணல்கள், அறிக்கைகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளியீடுகள், இலங்கைத் தமிழர்ப் போராட்டங்கள் குறித்து ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய – இலங்கை ஒப்பந்தம், தமிழகத் தலைவர்களுடனான இலங்கை போர்க்குழுக்களின் உறவுகள், போர்க்கள வியூகங்கள், வெற்றி தோல்விகள் ஆகியவற்றுடன் சர்வதேச சமூகத்துடனான விடுதலைப் புலிகள் அமைப்பின் உரையாடல்களையும் […]

Read more

ஹெர்லக் ஷோம்ஸ் ஒரு குரங்கு வே(சே) ட்டை

ஹெர்லக் ஷோம்ஸ், ஒரு குரங்கு வே(சே) ட்டை, ஜம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 115ரூ. கலகலப்பாக ஒரு காமிக்ஸ் புக் படித்து பலகாலம் ஆச்சு என்று ஏக்கப்பெருமூச்சு விடுபவர்களுக்காகவே வந்திருக்கும் விசேஷம் இது. ஹாலிவுட்டின் ஹெர்லக் ஹோம்ஸையும் மிஸ்டர் எக்ஸையும் கலந்து செய்த கலவை ஹெர்லக் ஷோம்ஸ். உதவியாளர் வேஸ்ட்சன்னுடன் சேர்ந்து காணாமல் போன குரங்கு, சிங்கங்கள், ஒரு சிறுமி ஆகியோரைக் கண்டுபிடிப்பதோடு, கொள்ளைக் கூட்டம் ஒன்றையும் விடிக்கச் செல்லும் சாகஸத்தில் இவரது ஒவ்வொரு மூமென்டும் சூப்பர் காமெடி. வித்தியாசமான கோணங்களில் வரையப்பட்ட […]

Read more

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்-உலக இதிகாசங்களில் குழந்தைகள்-ரோஹிணி சவுத்ரி, தமிழில்: சசிகலா பாபு, எதிர் வெளியீடு, பக்.200, விலை ரூ.200. உலக நாடுகளின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பல்வேறு புராணக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புதான் இந்நூல். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கதைகளின் நாயகர்களுமே சிறுவர்கள் என்பதுதான். இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள இளவரசர்களின் பாத்திரங்களை மட்டும் தனியாகத் தொகுத்து, அவற்றினூடே புராணங்களின் கருப்பொருள்கள் அலசப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இணையற்ற இதிகாசமாகக் கருதப்படும் மகாபாரத்தை எடுத்துரைக்கும்போது கூட, பால்ய பருவ பாண்டவர்களின் கதையாகவே அது விரிகிறது. […]

Read more

பரமாத்துவிதம் ஒரு சைவ நெறி

பரமாத்துவிதம் ஒரு சைவ நெறி, கி.முப்பால்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.222, விலை ரூ.180. உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்றை மறுத்து 16 ஆம் நூற்றாண்டில் எழுந்த நெறிதான் பரமாத்துவிதம். பரமாத்துவித நெறியைப் பின்பற்றுபவர் உலகின் எப்பொருளும் தம்மிடத்திலும், தாம் உலகின் எல்லாப் பொருள்களிலும் இருப்பதாக உணர்வார்கள். பிரம்மம் என்பது எல்லாமான பூரணமாக உள்ளது. "பிரபஞ்சம் முழுவதும் உள்ள பூரணம் செயல் தன்மையானது. அதனுடைய இருப்பும், விளக்கமுமே பிரபஞ்சப் பொருள்களின் வாழ்வும், பண்புமாகும். பிரம்மம், பூரணம் தன்னை […]

Read more
1 6 7 8 9