வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, எழுத்துவடிவம் ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ. கல்வி அறிவில்லாத ஒருவர், கனகாம்பரச் செடி வைத்து அதில் பல ஆய்வுகள் செய்துவேளாண் ஆராய்ச்சியாரான தனிமனித வரலாறு. அசட்டு மனிதராக எல்லோராலும் பார்க்கப்பட்டவர், அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப்படும் அளவுக்கு வளர்ந்த விதத்தை சொல்லியிருக்கும் விதம் போரடிக்காத சுவாரஸ்ய பாடம். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027044.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள்

தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், பக்.384, விலைரூ.200. அமரகவி சித்தேஸ்வரரின் நிஜானந்த போதம் நூலைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இந்த தெய்வங்களுக்கு ஏன் இத்தனை கைகள், தலைகள், ஆயுதங்கள், வாகனங்கள் என ஆன்மிக அன்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் எழக்கூடிய கேள்விகளுக்கு விடைதருவதாக அமைந்துள்ளது இந்நூல்.  இந்நூலில் விரவிக்கிடக்கும் ஆன்மிக முத்துக்குவியலில் இருந்து சில முத்துகள். இறைவன் எல்லையற்ற ஞானம் மிக்கவன், எல்லையற்ற பேராற்றல் படைத்தவன், எங்கும் நீக்கமற நிறைந்தவன். கோயில், குளங்களை சுற்றிவருவதும், […]

Read more

கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர், அ.கா.பெருமாள். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 85ரூ. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையை அரும்பெரும் கவிஞராகவே அறிந்திட்ட நமக்கு இந்த புத்தகம் அதே எண்ணத்தை முற்றிலுமாக மாற்றுவதாக அமைந்துள்ளது. கவிமணி கல்வெட்டு ஆய்வாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் திகழ்ந்தவர் என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. அவருடைய திறமையின் இன்னொரு புறம் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது என்றே கூறவேண்டும். கவிமணி பற்றி இதற்கு முன்னர் இதுபோன்ற ஆய்வு நூல் வந்திருக்குமா? என்பதும் கேள்விக்குரிய ஒன்றுதான். கேரளாவில் நிலவி வந்த தந்தையிட்ன சொத்து அவருடைய சகோதரி […]

Read more

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ. 1350கோடி ஆண்டுகளுக்கு முன் ‘பெருவெடிப்பு’ காரணமாக இந்த உலகம் உருவானதாகக் கருதப்படுகிறது. பின்னர் படிப்படியாக உயிரினம் தோன்றி, அதில் இருந்து ஆதிமனிதன் உருவாகி, 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் சேப்பியன்ஸ் என்ற ஆதி மனித இனம் தோன்றியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அந்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ருசிகரமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மனித வாழ்வில் ஏற்பட்ட மதம், […]

Read more

யானைகளின் வருகை

யானைகளின் வருகை, கா.சு.வேலாயுதன், இந்து தமிழ் திசை பதிப்பகம், விலை 180ரூ. எதிர் திகை ஓட்டம் யானைகளின் மீது தான் கொண்டிருக்நத காதலின் பொருட்டு கடந்த இருபது ஆண்டுகளாக யானைகள் குறித்தும் இயற்கைக்கு மனிதன் செய்த சேதாரங்கள் குறித்தும் தொடர்ந்து அவதானித்துவருபவர் கா.சு.வேலாயுதன். அவரது அனுபவங்களும் அவதானிப்புகளும் ‘யானைகளின் வருகை’ எனும் தொகுப்பாக இப்போது வெளிவந்திருக்கிறது. தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில வனப்பகுதிகளைப் படம்பிடித்துக் காட்டுவதன் மூலம் ஓர் உலகளாவிய பார்வையை முன்வைக்கிறார். வெறுமனே தகவல்களாக, அனுபவப் பகிர்வாக இல்லாமல் தனது நுட்பமான பார்வையின் மூலம் […]

Read more

கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள்

கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள், ஆங்கில மூலம்: எஸ். சாரதா, தமிழில்: கிருஷாங்கினி, சதுரங்கம் பதிப்பகம், பக்.384, விலை ரூ.300. உலகப் பிரசித்தி பெற்ற கலாக்ஷேத்ரா என்னும் இந்திய பாரம்பரியக் கலைக் கல்வி மையத்தைப் பற்றியது இந்தப் புத்தகம். அதே நேரத்தில் ஈடு இணையற்ற அந்தக் கலை மையத்தை உருவாக்கிய ருக்மிணிதேவி பற்றிய வரலாற்றுப் பதிவாகவும் இருக்கிறது. கலாக்ஷேத்ராவில் சேர்ந்து கலை ஞானத்துக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணம் செய்த எஸ். சாரதா எழுதிய ஆங்கில மூல நூலின் தமிழ் மொழி மாற்றமாக இந்தப் […]

Read more

நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல், நாகூர் ரூமி; பினாக்கிள் புக்ஸ், பக்.448, விலை ரூ.420. நமது வாழ்முறைத் தவறுகளினால் நமக்கு நோய் வருகிறது. வாழ்முறையை சரிசெய்துகொண்டால் நோய்களைக் குணப்படுத்தும் வேலையை நம் உடலே செய்து கொள்ளும். வேண்டுமெனில், பாரம்பரியமான வீட்டு வைத்தியம் செய்துகொள்ளலாம். எந்த நோயைப் பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை. இதுதான் இந்த நூலின் சாராம்சம். சாதாரண தலைவலி, காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய்வரை எல்லா நோய்களைப் பற்றியும் இந்நூலில் விரிவாக அலசப்பட்டுள்ளது. ஆனால், எதுவுமே பயமுறுத்தும்படியாக இல்லை. சொல்லப்போனால், நோயைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தாலே […]

Read more

ஓமியோபதி ஆர்கனான், என் பார்வையில் தேடலும் புரிதலும்

ஓமியோபதி ஆர்கனான், என் பார்வையில் தேடலும் புரிதலும், கி.அம்பலவாணன், மனோரஞ்சிதம் பதிப்பகம், பக்.496, விலை ரூ.390. ஹோமியோபதி மருத்துவத்தை உருவாக்கிய டாக்டர் சாமுவேல் ஹனிமன் எழுதிய ORGANON OF MEDICINE என்ற நூலின் தமிழாக்கமே இந்நூல். வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து நேரடியாக மொழிபெயர்ப்பது என்ற முறையில் இல்லாமல், நூலாசிரியர் தான் அந்நூலைப் புரிந்து கொண்டவிதத்தில் இருந்து பல விளக்கங்களுடன் இந்நூலைப் படைத்துள்ளார். நோய்க்கு மருந்தல்ல; நோயாளிக்கே மருந்து என்ற அடிப்படையில் நோயைக் குணப்படுத்தும் ஹோமியோபதி மருத்துவமுறையின் பல அடிப்படைகளை இந்நூல் விளக்குகிறது. 291 […]

Read more

தென்னிந்தியப் பயிர்கள்

தென்னிந்தியப் பயிர்கள், வி.டி.சுப்பையா முதலியார், வேலா வெளியீட்டகம், விலை 450ரூ. விவசாயிகளின் கலைக்களஞ்சியம்,‘ கோவை வேளாண் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் வேளாண்பொருளியல் அறிஞருமான வி.டி.சுப்பையா முதலியாரின் முப்பதாண்டு கால உழைப்பில் உருவாகி 1956-ல் வெளிவந்த நூலின் மறுபதிப்பு. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், பணப் பயிர்கள் என்று அனைத்து வகையான பயிர் வகைகளின் வரலாற்றுப் பின்னணி, சாகுபடி விவரங்கள், விளைச்சலைப் பதப்படுத்தும் முறைகள், விளக்கங்கள், அரிய தகவல்கள் என முழு விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளின் மரபார்ந்த அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அற்புதத் […]

Read more

தடங்கள்

தடங்கள், ராபின் டேவிட்சன், தமிழில்: பத்மஜா நாராயணன், எதிர் வெளியீடு, பக்.312, விலை ரூ.320. ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ராபின் டேவிட்சன் என்ற பெண்மணி நான்கு ஒட்டகங்கள் மற்றும் தனது ஒரே சொந்தமான டிக்கிட்டி எனும் நாயை அழைத்து கொண்டு 1977 – ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாலைவன எல்லை நகரான ஆலிஸ் ஸ்பிரிங் என்ற ஊரில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை 1700 மைல்கள் தனியே பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் ஏற்பட்ட சுவையான அனுபவங்களை விளக்கி அவர் எழுதிய பயண நூலான ட்ரேசஸ் […]

Read more
1 5 6 7 8 9