ஏ.எம்.ராஜா ஜிக்கி திரையிசை பாடல்கள்

ஏ.எம்.ராஜா ஜிக்கி திரையிசை பாடல்கள், தொகுப்பு ஜே,விஜயராகவன், மணிவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. தன்னுடைய குரல் வளத்தாலும், இசையாலும் 35 ஆண்டுகள் மக்கள் மனதில் கொடி கட்டிப்பறந்த பாடகரும், இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜா, மற்றும் அவருடைய காதல் மனைவி ஜிக்கி என்கிற கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் தமிழ் திரையிசையில் எண்ணற்ற வெற்றி பாடல்களை தந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கை வரலாற்றையும், திரையிசையில் அவர்களின் பயணத்தையும் விரிவாக இந்த நூல் அலசுகிறது. இருவர் பற்றியும் அறிந்திடாத அரிய தகவல்களும், புகைப்படங்களும் இடம் பெற்றிருப்பது நூலின் தனி சிறப்பு. […]

Read more

பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை

பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை, மு.ஏழுமலை, காவ்யா பதிப்பகம், விலை 120ரூ. நகைச்சுவை உணர்வு என்பது பிற உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மை வாய்ந்த பண்பாகும். இலக்கிய படைப்புகளிலும் இவ்வுணர்வு கலைத்தன்மையோடு வெளிப்படுவதை காணமுடிகிறது. அப்படி பாரதியாரின் கவிதைகளில் பொதிந்திருககும் நகைச்சுவையை எடுத்துரைக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027187.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

இந்தியாவின் இருண்டகாலம்

இந்தியாவின் இருண்டகாலம், சிசி தரூர், கிழக்குப் பதிப்பகம், பக். 384, விலை 350ரூ. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை இணையமைச்சர், ஐ.நா.வி.ன துணைப் பொதுச் செயலாளர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தவிர, இந்திய அரசியல், கலாசாரம், வரலாறு,, சமூகம், அயல்நாட்டுக் கொள்கை ஆகிய துறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியிருப்பதோடு, உலகம் அறிந்த பேச்சாளராகவும் திகழ்பவர். இவர், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை கொள்ளையடித்த வரலாற்றை இந்நூலில் விவரித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த ‘An […]

Read more

சொல்லும் செய்திகள்

சொல்லும் செய்திகள், வி.என்.மதியழகன், காந்தகளம், விலை 400ரூ. அச்சு ஊடகம், காட்சி ஊடகம், வானொலி ஒலிபரப்பு துறையில் உள்ள சவால்கள், சுவாரசியங்கள், இத்துறையை சார்ந்தவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும்? என்பதை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கும், இதில் நுழைய துடிப்பவர்களும் இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம்

கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம், ப.குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 192, விலை 150ரூ. கால்பந்தாட்ட வரலாறு என்ன? அதன் தோற்றம் எப்போது என்பதை ஆண்டு அடிப்படையில் அடுக்கடுக்காக எழுதியிருப்பது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. களத்தில் தனிநபராக நின்று, எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரர்களைப் பற்றிய செய்திகளோடு, நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் கதாபாத்திரங்களை கால்பந்தாட்ட வீரர்களாகவும் ரசிகர்களாகவும் சித்தரித்து, நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார், நுாலாசிரியர் குணசேகர். நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

ஒழுக்கம்

ஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், விலை 120ரூ. ஒழுக்கத்தின் மேன்மை, திருக்குறளின் பெருமை, அவ்வை பாட்டியின் தமிழ்த்தொண்டு உள்ளிட்டவை கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இக்காலத்திற்கு தேவையான ஆசிரியர்களின் கற்பித்தல் முறை பற்றி எடுத்துரைத்துள்ளது அழகு. நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

எழுத்தும் நடையும்

எழுத்தும் நடையும், சி.மணி, தொகுப்பாசிரியர்: கால சுப்ரமணியம், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.240, விலைரூ.200. சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்ற சிறுபத்திரிகை மூலம் அறிமுகமான பல கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் சி.மணி. அவர் எழுதிய சில கவிதைகள், ஒரு சிறுகதை, ஒரு நெடுங்கதை, ஒரு நாடகம், சில கட்டுரைகள், அவரது நேர்காணல் மற்றும் இதுவரை நூலாக்கம் பெறாத சில கவிதைகள் ஆகியவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவரது புகழ்பெற்ற கவிதையான "நரகம்' கவிதை புதுக்கவிதை உலகில் ஒரு மைல்கல் என்று அப்போது புகழப்பட்டது. அது இந்நூலில் இடம் […]

Read more

ஆச்சரியமூட்டும் அறிவியல்

ஆச்சரியமூட்டும் அறிவியல், ஹாலாஸ்யன், பினாக்கிள் புக்ஸ்,பக்.144, விலை ரூ.135. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் எப்படி இயங்குகின்றன? அவை இயங்கு வதன் அறிவியல் அடிப்படைகள் எவை? என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. புதிய கண்டுபிடிப்புகள் எவை? அவை ஏற்கெனவே உள்ள எந்தப் பொருளின் உயர்வான, அடுத்தநிலையாக உருவாகி இருக்கிறது? என்பதும் நமக்குத் தெரியாது. அவற்றைப் பற்றியெல்லாம் நமக்குச் சொல்கிறது, தினமணி இணையதளத்தில் தொடராக வெளிவந்து, இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள். மின்சார வசதியில்லாத இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுத்தாத புவியீர்ப்பு விசையால் இயங்கும் க்ராவிட்டி […]

Read more

பாணனைத் தொடரும் வெயில்

பாணனைத் தொடரும் வெயில், ச.அருண், வாலி பதிப்பகம், விலை 80ரூ. வறுமை நிழலாய்த் தொடர வாழ்க்கைப் பாதையை அந்த இருளில் தேடும் பாணர்களின் நிலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் கவிதைகள். கண் முன் காட்சியாய் நகர்ந்தாலும் உணரமுடியாத நிஜத்தை கவிதையாய் வாசிக்கிறபோது நெஞ்சம் நெகிழ்வது நிச்சயம். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027223.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. சொல்வேந்தராகப் பலரும் அறிந்த பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பல்வேறு நிலையான ஆளுமைத் தன்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனியென விளக்கும் வகையில், அவரது படைப்புகளில் இருந்து பொருத்தமானவற்றைச் சேர்த்துக் கோத்து உருவாக்கப்பட்டிருக்கும் நூல். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 4 5 6 7 8 9