சிவபூமியாம் இலங்கை

சிவபூமியாம் இலங்கை, மேருபுத்திரி, டாக்டர் மயூரநாதன் வெளியீடு, பக். 136. திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய திருகோணமலை, திருக்கேதீசுரம் ஈழ நாட்டு சிவத்தலங்கள். சைவ பக்தி மிக்க யாழ்ப்பாணத் தீவுக்கு அருகில் உள்ள, காரைத் தீபத்தில் வாழ்ந்து சமாதி அடைந்தவர் சுவாமி முருகேசப் பெருமாள். இவர் தன் அருள் ஆற்றலால் பல அற்புதங்கள் செய்து காட்டியவர். பலருக்கும் ஞான வழிகாட்டிய மகான். இவரது ஆசிரமத்தில் வாழும் பெண் அடியார்களுள் தலைசிறந்த தவச் செல்வி மேருபுத்திரி. இவர் இயற்றிய தெய்வப் பாடல்களைக் கொண்டது இந்நுால். இவரது பாடல்களில் […]

Read more

ஊடகவியல்

ஊடகவியல், துரை. மணிகண்டன், கமலினி பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை அறிவதற்கும், அதற்கேற்ப செயல்பாடுகளை உருவாக்கிக் கொள்ளவும், பிறருடன் கலந்துரையாடவும், இவ்வாறு பலவகையிலும் நமக்கு உதவுவது ஊடகங்களாகும், இதைப் பற்றிய விரிவான தகவல்களை நமக்கு இந்நுால் எடுத்துரைக்கிறது. இந்நுாலில், ஊடகம் குறித்த விளக்கங்களும் சிறப்பாக உள்ளன. வானொலி குறித்தும், தொலைக்காட்சி குறித்தும் அடுத்த பகுதி விரிவாக விவரிக்கிறது. கணினி, இணையம் குறித்த தகவல்களை நான்காம் பகுதி விளக்குகிறது. இதில் இணைய இதழ்கள், அலைபேசி, குறுஞ்செயலி எனப் பல […]

Read more

ஈரோடு மாவட்ட வரலாறு

ஈரோடு மாவட்ட வரலாறு, புலவர் செ. இராசு, வேலா வெளியீட்டகம், பக். 254, விலை 200ரூ. பத்தொன்பதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில் கோவை மாவட்டத்துக்கு உட்பட கிராமமாக இருந்த ஈரோடு, 1979ல் மாவட்ட நிலைக்கு உயர்ந்தது. தமிழகத்தின் சிறு பிரிவுகளில் ஒன்றாக விளங்கியது கொங்கு நாடு. இந்த கொங்கு நாட்டை நான்கு திசைகளின் அடிப்படையில் நான்கு பிரிவாகப் பிரித்திருந்தனர். அவற்றில் தெற்குக் கொங்குப் பகுதியையும் வடக்குக் கொங்குப் பகுதியையும் உள்ளடக்கியது இந்த ஈரோடு மாவட்டம். பெருங்கற்காலம் துவங்கி ஈரோட்டுப் பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குக் கொடுமணல் […]

Read more

மணல் வெளியில் சில மயிலிறகுகள்

மணல் வெளியில் சில மயிலிறகுகள், தியாரூ, ஜே,பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 200ரூ. எல்லா காலக்கட்டத்திலும் மனித சமூகத்தில் தன்னம்பிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக கருதப்பட்டு நுால்கள் படைக்கப்பட்டு வருகின்றன. புறவெளியில் இருந்து நுால்கள் மற்றும் படிப்பை மூலமாகத் தன்னம்பிக்கைச் சாதனங்களைத் தேடும்படியான சூழல் நிலவுகிறது. தன்னெழுச்சிக்காக பல்வேறு படைப்பாளர்கள் பொன்மொழித் தொகுப்புகளையும், அனுபவக் கட்டுரைகளையும் ஏராளமாக எழுதி விட்டனர். இன்றளவிலும் எல்லாருக்குமே பிறருக்குச் சொல்வதற்கென்று பல்வகை அனுபவங்களோ, செய்திகளோ நாளும் ஊற்றெடுக்கின்றன. எழுத்தாளர்கள் அவற்றை பிறருக்காக நுால்களாக்கி வெளியிடுகின்றனர். பத்திரிகையில் தொடராக […]

Read more

தாய்

தாய், மாக்சிம் கார்க்கி, தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 350ரூ. இருநுாறு முறைக்கு மேல் மறு பதிப்பும், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுமான மாக்சீம் கார்க்கியின், ‘தாய்’ உலகின் மிகச் சிறந்த செல்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ரஷ்யக் கலைஞன் கார்க்கி. ரஷ்ய இலக்கியத்தின் ‘பொற்கால’த்தின் கடைசிப் பிரதிநிதி கார்க்கி. ‘அலக்வி மாக்ஸிமோவிச் பெஷ்கோவ்’ என்னும் பெயர் பூண்ட கார்க்கி பிறந்தது, 1869ல்; இறந்தது, 1936ல். கார்க்கியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1892 முதல், […]

Read more

மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்

மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 1000ரூ. மேலை நாட்டார் தொடர்பால் தமிழுக்கு வந்து சேர்ந்த ஒரு புதிய இலக்கிய வகை, ‘நடைச்சித்திரம்’ ஆகும். இது வாழ்க்கை வரலாறு அன்று. படைப்பாளியின் மனத்தில் பதிந்த ஒருவரின் ஆளுமைப் பண்புகளை தனக்குரிய வகையில் எடுத்துச் கூறுவது ஆகும். அந்த வகையில் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ்ச்சான்றோர்கள், சினிமா நடிகர்கள் என 100 பேரைப் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலை எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணன் […]

Read more

தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித்தலங்கள்

தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித்தலங்கள், கே.சாய்குமார், விலை 140ரூ. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 300 சைவ, வைணவ தலங்களுக்கான வழிகாட்டியாக அமைகிறது இந்நூல். தலத்தின் பெயர், தலத்துக்கு செல்லும் வழி, தலக்குறிப்பு, சாமி அம்பாள் பெயர், நடை திறக்கும், அடைக்கும் நேரம் மற்றும் ஆலய நிர்வாகிகள், அர்ச்சகர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றை எளிய நடையில் அட்டவணைப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். அது மட்டும் இன்றி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள தலங்களில் நீராடி வழிபடுவதால் என்னென்ன பயன்கள் என்றும், தமிழ் மாதங்கள் வாரியாக எந்தெந்த தலங்களில் […]

Read more

எங்கு செல்கிறோம்?

எங்கு செல்கிறோம்?, பி.ஏ.கிருஷ்ணன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 140ரூ. அரசியலும் கலாச்சாரமும் முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். அரசியலோடு மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என வேறு தளங்களுக்கும் கட்டுரைகளை எடுத்துச்செல்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் இயல்பில் ஒரு புனைவெழுத்தாளர் என்பதால் எழுத்து நடை உயிர்ப்போடு மிளிர்கிறது. நன்றி: தி இந்து,1/12/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

நபிமார்கள் வரலாறு

நபிமார்கள் வரலாறு, ஹாஜி எம்.ஏ.சாகுல் ஹமீது அன் சன்ஸ், விலை 550ரூ. நபி என்பதற்கு செய்தி அறிவிப்பாளர் என்பது பொருளாகும். நபிமார்கள் என்ற இறைத்தூதர்கள், இறைச் செய்திகளை மக்களுக்கு எடுத்துரைத்து வந்ததால், அவர்களுக்கு இந்தப் பெயர் வந்தது. இவர்களில் ஆதம் இத்ரீஸ், நூஹு, இப்ராகீம், யூசுப், அய்யூப், மூசா, தாவூது, கலைமான், யூனுஸ், ஈசா உள்ளிட்ட 26 நபிமார்களின் வரலாறு இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. கஸஸுல் அன்பியா என்ற தலைப்பில் இந்நூல் அரவி, பார்சி, உருது ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த நூலை […]

Read more

மூளை என்னும் மூலவர்

மூளை என்னும் மூலவர்,  பக்கவாதத்தையும் வெல்லலாம், அ.வேணி, சிவாவேணி பதிப்பகம், பக்.224, விலை ரூ.220. பக்கவாதம் என்றால் என்ன? அந்நோய் வருவதற்கான காரணங்கள் எவை? பக்கவாத நோய்க்கான அறிகுறிகள் எவை? பக்கவாத நோய் வராமல் தடுக்க, எதை உண்ண வேண்டும்? என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? குழந்தைகளுக்குப் பக்கவாதம் வருமா? பெண்கள் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பது ஏன்? சுவாசிக்கும் காற்று, சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகள் ஆகியவற்றால் பக்கவாதம் வருமா? பாரம்பரியத்தால் பக்கவாதம் வருமா? குடிப்பழக்கத்திற்கும், புகைப்பழக்கத்திற்கும் பக்கவாதத்திற்கும் தொடர்புகள் உள்ளதா? பக்கவாதம் வந்துவிட்டால் […]

Read more
1 2 3 4 5 8