தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள், சா.கந்தசாமி, சாகித்ய அகாடமி வெளியிடு, விலை 290ரூ. சுயசரித்திரம் என்பது, இந்தியாவில் முதன் முதலில் தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது என்றும், அதனை எழுதியவர் 1748ம் ஆண்டு புதுச்சேரியில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய ஆனந்தரங்கப் பிள்ளை என்ற தகவலையும் தரும் இந்த நூலில், ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரனார், தமிழ்த் தாத்தா உவே.சாமிநாதைய்யர், பாரதியார், திரு.வி.க., மா.பொ.சி., கலைஞர் கருணாநிதி, ஜெயகாந்தன் ஆகியோர் உள்பட 12 தலைவர்களின் சுயசரிதங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு தலைவர்கள் பற்றிய குறிப்பும், அதனைத் தொடர்ந்து அந்த தலைவர்கள் […]

Read more

சம்ஸ்காரம்

சம்ஸ்காரம், கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.176, விலை ரூ.175. நூலாசிரியரின் 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் படைப்பு. வீதியோரம் கிடக்கும் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைக்காகப் போராடும் நாய்க்கும், பிச்சைக்காரனுக்குமான போராட்டம்தான் இப்படியும் சில ஆத்மாக்கள் சிறுகதையின் கரு. 1970 – களில் வெளியான நூலாசிரியரின் முதல் சிறுகதையான இது தினமணி கதிரில் பிரசுரமாகியுள்ளது. இன்பதுன்பங்களை ஒன்றெனக் கருதும் துறவிகளுக்கும் தாயின் மரணம் புறக்கணிக்க முடியாதது. உறவுகளைக் கடந்தவனுக்கு தாயின் மரணத்தில் பங்கேற்க சாஸ்திரங்கள் அனுமதிக்காவிட்டாலும், தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வது அவனுக்குக் […]

Read more

உங்களாலும் முடியும்

உங்களாலும் முடியும்,  பி.வி.பட்டாபிராமன், யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ்,  பக்.280, விலை ரூ.230. வெற்றியாளர்கள் என்றால் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அல்ல. பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும், இடையில் கைவிடாதவர்களே வெற்றியாளர்கள். எந்தத் துறையிலும் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் தேவைப்படுவது நம்பிக்கையே. நம்பிக்கையே உண்மையான முதலீடு.ஏழையாகப் பிறப்பது என்பது உங்கள் கையில் இல்லை.ஆனால் ஏழையாகவே இறப்பதா? என்பது உங்கள் கையில் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய ஓர் உண்மை உள்ளது. அது என்னவென்றால், ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றம் செய்து கொள்வது. நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு […]

Read more

பண்டைக்கால இந்தியா

பண்டைக்கால இந்தியா, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.எஸ். புக்ஸ் வேல்டு, விலை 230ரூ. மார்க்சிய கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.டாங்கே, 1942ம் ஆண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது பெரும்பகுதி எழுதப்பட்ட இந்த நூல், இந்தியாவின் ஆரம்ப கால வரலாற்றை மார்க்சிய சிந்தனையோடு அணுகி இருக்கிறது. ஆரியர்கள் எனப்படுபவர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து இந்தியாவுக்கு வந்தார்கள்? யாகம், வேதம் என்றால் என்ன? அந்தக் காலத்தில் இருந்த ஆண் பெண் திருமண உறவுமுறை எப்படி? என்பது போன்றவற்றை விளக்கி இருக்கும் ஆசிரியர், பகவத் கீதை என்பது, மகாபாரத […]

Read more

உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்

உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள், ராபர்ட் ஹெச் ஷூல்லர், தர்மகீர்த்தி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 210ரூ. எப்படிப்பட்ட வேதனையான சூழ்நிலையிலும், எந்தவிதமான தோல்விகளை சந்தித்து இருந்தாலும், அவற்றில் இருந்து மீண்டு, வெற்றியாளராக பரிணமிப்பது எப்படி என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் தந்து இருக்கும் இந்த நூல், தன்னம்பிக்கையை வளர்க்கும் நூல் வரிசையில் தனி இடம் பெற்று இருக்கிறது என்று கூறலாம். ஒவ்வொருவரும் குறைகளை சரி செய்து, புரிய திறமையை வளர்த்துக்கொண்டு மறுபடி வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்பதை இந்த நூல் ஆணித்தரமாக எடுத்துக்கூறுகிறது. நன்றி: தினத்தந்தி 3/7/19, […]

Read more

நிலம் உங்கள் எதிர்காலம்

நிலம் உங்கள் எதிர்காலம், சா.மு.பரஞ்சோதி, பெரிகாம் பதிப்பகம், விலை 525ரூ. நிலம், வீடு, மனைகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும் ஆலோசகர்களுக்கும், தரகர்களுக்கும் பயன் உள்ள வகையில் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. பலவிதமான பட்டாக்கள், பத்திரங்கள், மற்ற ஆவணங்கள், வில்லங்க சான்றிதழ் கிரைய ஒப்பந்தத்தின் போதும் கவனிக்க வேண்டியவை, சர்வே தொடர்பான செய்திகள் என்று ரியல் எஸ்டேட் தொடர்பான அத்தனை ஐயப்பாடுகளுக்கும் இந்த நூலில் விளக்கம் தரப்பட்டு இருக்கின்றன. நிலம் மற்றும் வீடுகளை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த நூல் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி […]

Read more

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம், எழில்மதி, மணிமேகலை பிரசுரம், விலை 55ரூ. குறள் பாக்கள் மூலம் குடியின் தீமைகளை விளக்குகிறார் நுாலாசிரியர். முதன் முதலில் இந்நுால் வெளிவந்த போது, ‘மது விலக்கில் முழு மூச்சுடன் இறங்கியுள்ள நம் மாநில அரசு இந்நுாலை வெளியிடுவது, நாட்டு மக்களுக்கு நலம் பயப்பதாக அமையும்’ என, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் சொன்னார். மது பிரச்னைக்குரிய எல்லா அம்சங்களையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ளமை பாராட்டிற்கும், சிறப்பிற்கும் உரியது. குடிகாரர்களை இந்த நுால் திருத்தும்; நல்வழி காட்டும் என்பதில் எள்ளளவும் […]

Read more

ஆக்கப்படுவதே வாழ்க்கை

ஆக்கப்படுவதே வாழ்க்கை, ப்ரீத்தி ஷெனாய், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், விலை 235ரூ. காதல், நம்பிக்கை, உளஉறுதிப்பாட்டால் விதியையே வெல்லும் வலிமை ஆகியவற்றை சொல்லும் கதைகள் அடங்கிய பெட்டகம் இந்நுால்.தேசிய அளவில் மிக அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட பெருமைக்குரியது இந்தநுால். வாசகரின் உள்ளத்தை கொள்ளையடிக்கும் கள்வன் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வைணவம் வளர்த்த மகான்கள்

வைணவம் வளர்த்த மகான்கள், ஆர்.வி.பதி, நிவேதிதா பதிப்பகம், பக். 154, விலை 150ரூ. வைணவம் வளர்த்தவர் என்றதும் பன்னிரு ஆழ்வார்களையே நினைப்போம். ஆனால், வைணவத்தை எங்கும் பரப்பிய, 32 மகான்களை, இந்த நுாலில் மிகச் சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளார். வைணவ குரு மரபில் முதல்வர் நாராயணர், இரண்டாம் ஆச்சார்யர் பெரிய பிராட்டியார், பின், விஷ்வக்சேனர் இவரே நம்மாழ்வாராக அவதரித்து நான்கு வேதங்களையும் திருவாய் மொழியாகப் பாடியவர். பெருமாள் கோவில்கள் தலையில் சாத்தப்படும் ஸ்ரீசடாரி, நம்மாழ்வார் சடகோபன் பெயரால் வழங்கப்படும் பெருமாள் பாதங்கள். பல நுாற்றாண்டுகளுக்கு […]

Read more

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும், சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், பக். 136, விலை 125ரூ. மவுரிய வம்சம் இந்திய அரசியலில் மேலோங்கி விளங்கக் காரணமாயிருந்த, சாணக்கியரின் அர்த்த சாஸ்திர நுால் சமஸ்கிருத ஓலைச்சுவடிகளால் ஆனது. சென்ற நுாற்றாண்டில் அச்சு வடிவம் பெற்று பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட அது மீண்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கன்று ஈனாத மலட்டுப் பசுவுக்கும், கறவை நின்ற பசுவுக்கும் மதிப்பு உண்டா… இல்லை; அது போல கல்வியறிவு இல்லாத மகனாலும், கடவுள் பக்தி இல்லாத மகனாலும் யாது பயன்? காஞ்சிபுரம் […]

Read more
1 2 3 4 8