அகயாழின் குரல்

அகயாழின் குரல், கனகா பாலன், நண்பர்கள் பதிப்பகம், பக்.106, விலை 120ரூ. நுாலாசிரியர் கனகாவின் கவிதைகளில், அவரின் வீட்டு நினைவுகள், உறவுப் பிணைப்பு, காதல், கடமை உணர்ச்சி, இயற்கை என்றே சுற்றி சுழன்று வருகின்றன. ‘பகிர்தல் ஏதுமில்லையாயினும் உச்சரித்துக் கொண்டே இருப்பேன்… உன் பெயரை உயிர் வாங்கும் நச்சரிப்பென்று வெறுத்து விடாதே…!’ என்ற கவிதையில், இரண்டு உள்ளங்களுக்கு இடையே உள்ள திகட்ட திகட்ட ததும்பும் அன்பின் அங்கலாய்ப்பை உணர்ச்சி பொங்க சொல்கிறார். – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர், 14/7/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

அழகிய வாழ்வுக்கு 1330

அழகிய வாழ்வுக்கு 1330, மெய்ஞானி பிரபாகரபாபு, குறளகம், பக். 152, விலை 170ரூ. பொய்யாமொழி புலவர் இயற்றிய மறை நுால் அதிகார வரிசையே இந்நுாலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் மூலக் குறளுடன் பொருந்தும் பொன்மொழியே தரப்பட்டுள்ளது. திருக்குறளின் அந்தந்த அதிகாரங்கள் மற்றும் குறள்களோடு பொருந்திப் படிக்க உதவும் பொக்கிஷம், ‘குறள்நெறி சார்ந்த பொன்மொழி கள்’ அடங்கிய நுால் என்று சொல்லலாம். நன்றி: தினமலர், 14/7/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

ஆக்கப்படுவதே வாழ்க்கை

ஆக்கப்படுவதே வாழ்க்கை, பிரீத்தி ஷெனாய், தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசன், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக். 200, விலை 235ரூ. காதல், நம்பிக்கை, உளஉறுதிப்பாட்டால் விதியையே வெல்லும் வலிமை ஆகியவற்றை சொல்லும் கதைகள் அடங்கிய பெட்டகம் இந்நுால்.தேசிய அளவில் மிக அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட பெருமைக்குரியது இந்தநுால். வாசகரின் உள்ளத்தை கொள்ளையடிக்கும் கள்வன் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! நன்றி: தினமலர், 14/7/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நதியும் நதி சார்ந்த கொள்ளையும்

நதியும் நதி சார்ந்த கொள்ளையும், திலகபாமா, காவ்யா, பக். 104, விலை 100ரூ. இந்த, 50 ஆண்டுகளில் இயற்கையோடு வாழ்ந்த காலம் போய், இயற்கையை விற்கத் துவங்கிவிட்ட காலமாக மாறி, நதி என்றாலே வறண்ட நிலமாகவும், லாரிகள் நிற்கும் இடமாகவும் மாறிவிட்டது’ என, வருந்துகிறார் நுாலாசிரியர். ஒரு லாரி மணல், 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதையும், நீதிமன்ற உத்தரவுகளை உதாசீனப்படுத்தி, அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், லாரி உரிமையாளர்களும் அடிக்கும் கொள்ளைகளையும் ஆதாரங்களோடு பட்டியலிட்டுள்ளார். ‘மணலில் இருந்து, எம்.சாண்டுக்கு மாறுவதற்கான தன்னம்பிக்கையை மக்களுக்கு வழங்க அரசு […]

Read more

சேர மன்னர் வரலாறு

சேர மன்னர் வரலாறு,  ஒளவை சு.துரைசாமி, ஜீவா பதிப்பகம், பக்.232, விலை ரூ.220. மூவேந்தர்களுள் ஒருவராகிய சேர மன்னர்களுக்கென்று விரிவான வரலாறு கிடையாது. சங்க நூல்களை நன்கு பயின்றால் அன்றி சேர நாட்டின் பண்டை நாளை அறிவது அரிது; சோழர்களைப் பற்றியும், பாண்டியர்களைப் பற்றியும் வரலாற்று நூல்கள் உண்டானதுபோல, சேர நாட்டுக்கு வரலாற்று நூல்கள் தோன்றவில்லை; சேர நாடு பிற்காலத்தே கேரள நாடென வழங்கத் தலைப்பட்டது. சேர நாடென்பது கேரள நாடானதற்கு முந்திய நிலையாதலால் அதன் தொன்மை நிலை அறிதற்குச் சேர மன்னர்களையும், சேர நாட்டு […]

Read more

புவி எங்கும் தமிழ்க் கவிதை

புவி எங்கும் தமிழ்க் கவிதை, தொகுப்பாசிரியர்: மாலன், சாகித்திய அகாதெமி, பக்.144, விலை ரூ.160. புவியின் எட்டுத் திக்குகளிலிருந்தும் பெறப்பட்ட கவிதைகள் சிறப்பாக இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நார்வே, இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை பன்முகம் கொண்டதாகவும், அதே நேரத்தில் விரிவின் பொருட்டு செறிவைத் தவறவிடாமல் செழுமை வாய்ந்ததாகவும் ஆக்க நூலாசிரியர் மேற்கொண்ட முயற்சியை கவிதைகளைப் படிக்கும்போது உணர முடிகிறது. இலங்கையில் வசிக்கும் கவிஞர் அபார் தாள் […]

Read more

குரங்கு கை பூமாலை

குரங்கு கை பூமாலை, ஈரோடு அறிவுக்கன்பன், காவ்யா, பக்.264, விலை ரூ.270. சுற்றுச்சூழல் கேடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படுகிறது. சுற்றுச்சூழல் கேடுகளுக்கான காரணங்களும், தீர்வுகளும் பலவிதமாகக் கூறப்படுகின்றன. இந்த நூல் சுற்றுச்சூழல் கெட்டுப் போனதிற்கான உண்மையான காரணங்களைச் சொல்கிறது. அதற்கு பல்வேறு சான்றுகளையும் எடுத்துக்காட்டுகிறது. சர்க்கரை தொழிற்சாலை, சாராய தொழிற்சாலை, பெட்ரோலியம் தொழிற்சாலை, தோல் பக்குவப்படுத்தும் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை,துணிகளை உருவாக்கும் தொழிற்சாலை, வேதியல் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலை, பால் மற்றும் அதன் துணைப்பொருள் தொழிற்சாலை ஆகியவை வெளியேற்றும் கழிவுகள், […]

Read more

அழகிய வாழ்வுக்கு 1330

அழகிய வாழ்வுக்கு 1330, மெய்ஞானி பிரபாகர்பாபு, குறளகம், விலை 170ரூ. பொய்யாமொழி புலவர் இயற்றிய மறை நுால் அதிகார வரிசையே இந்நுாலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் மூலக் குறளுடன் பொருந்தும் பொன்மொழியே தரப்பட்டுள்ளது. திருக்குறளின் அந்தந்த அதிகாரங்கள் மற்றும் குறள்களோடு பொருந்திப் படிக்க உதவும் பொக்கிஷம், ‘குறள்நெறி சார்ந்த பொன்மொழி கள்’ அடங்கிய நுால் என்று சொல்லலாம் நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழ் சினிமா உலகம் தொகுதி 1

தமிழ் சினிமா உலகம், தொகுதி 1, திருப்பூர் அகிலா விஜயகுமார், மணிவாசகர் பதிப்பகம், விலை 600ரூ. தமிழ் சினிமா உலகில் 1930-ம் ஆண்டு மவுன மொழிப் படங்களின் சகாப்தம் முடிவடைந்து, 1931-ல் ‘காளிதாஸ்’ படம் மூலம் பேசும் மொழிப்படங்களின் வருகை தொடங்கியது என்ற தகவலைத் தரும் இந்த நூல், 1931 முதல் 1940 வரை வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வரலாறு, அந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ஆகிய விவரங்கள், சினிமா ரசிகர்கள் படித்து சுவைக்கும் வகையிலும், மாணவர்களுக்கு உதவும் ஆய்வு தகல் […]

Read more

அகயாழின் குரல்

அகயாழின் குரல், கனகா பாலன், நண்பர்கள் பதிப்பகம், விலை 120ரூ. நுாலாசிரியர் கனகாவின் கவிதைகளில், அவரின் வீட்டு நினைவுகள், உறவுப் பிணைப்பு, காதல், கடமை உணர்ச்சி, இயற்கை என்றே சுற்றி சுழன்று வருகின்றன. ‘பகிர்தல் ஏதுமில்லையாயினும் உச்சரித்துக் கொண்டே இருப்பேன்… உன் பெயரை உயிர் வாங்கும் நச்சரிப்பென்று வெறுத்து விடாதே…!’ என்ற கவிதையில், இரண்டு உள்ளங்களுக்கு இடையே உள்ள திகட்ட திகட்ட ததும்பும் அன்பின் அங்கலாய்ப்பை உணர்ச்சி பொங்க சொல்கிறார். – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 2 3 4 5 8