ராதிகா சாந்தவனம்

ராதிகா சாந்தவனம், முத்து பழனி,  காவ்யா, விலை 270ரூ. 17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரான பிரதாப சிம்மனின் அரசவையில் நடனக் கணிகையாக தேவதாசியாக இருந்த முத்து பழனி என்ற பெண், தெலுங்கு மொழியில் படைத்த இந்த நூல், காமம் கொப்பளிக்கும் காதல் இலக்கியமாகப் போற்றப்படுவது ஏன் என்பதை, இந்த நூலில் காணப்படும் உணர்ச்சிகரமான பாடல்களைப் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. 584 பாடல்களைக் கொண்ட இந்த நூல், முதலில் 1887ல் ஆங்கிலேயர் ஒருவரால் பதிப்பிக்கப்பட்டது. சிற்றின்பங்களை மையமாகக் கொண்டு இருந்ததால் தடை […]

Read more

இலக்கிய இன்பம்

இலக்கிய இன்பம், மு.சு. கன்னையா, சங்கர் பதிப்பகம், விலை 220ரூ. வாய்ச் சுவையில் விலங்குகள் மகிழும். செவிச் சுவையில் மனிதர் மகிழ்வர். இலக்கியச் சுவை நம்மை தெய்வ நிலைக்கு உயர்த்தும். இனிமையான, 25 இலக்கியக் கட்டுரைகள் இந்நுாலில் படிப்போருக்கு இன்பம் கொடுக்கும். திருக்குறளைப் பற்றி, 12 கட்டுரைகள் பேசுகின்றன. புறநானுாற்றில், 243 தொடித்தலை விழுத்தண்டினார் எனும் முதியவர் பாடிய இளமையைப் போற்றும் பாடல் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நற்றிணை, ஐங்குறுநுாறு, முல்லைப்பாட்டின் முதுமை ஒப்பு நோக்கப்படுகிறது. காமத்துப் பாலா? இன்பத்துப் பாலா? மூன்றாம் பாலின் […]

Read more

ஆக்கப்படுவதே வாழ்க்கை

ஆக்கப்படுவதே வாழ்க்கை, பிரீத்தி ஷெனாய், தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக்.214, விலை ரூ.235 ஒரு சுயமுன்னேற்ற நூலைப் போன்ற தலைப்பைக் கொண்ட இந்நூல், உண்மையில் சுயமுன்னேற்ற நூல் அல்ல, நாவல். கொச்சினில் உள்ள அங்கிதா என்ற கல்லூரி மாணவி தில்லி ஐஐடியில் படிக்கும் வைபவ் என்பவனிடம் காதல் வயப்படுகிறாள். செல்பேசி இல்லாத அக்காலத்தில் அவனுடன் தொலைபேசியில் பேசுவதே சாதனையாக இருக்கிறது. அங்கிதா பயின்ற கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் அவள் போட்டியிட்டு வெல்கிறாள். பிற கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. […]

Read more

கண்மணி சோபியா

கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், பக்.170, விலை ரூ.150. நிகழ்கால நிகழ்வுகளில் அதுவும் சிறார்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுத்திய வலியை எழுத்தின் வழியே அனல் பறக்க நாவலாகத் தந்துள்ளார் நூலாசிரியர். அவரின் முதல் நாவலான இந்தப் படைப்பு ஓர் அறிவியல் புதினம் என்பது கூடுதல் சிறப்பு. அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திய விஞ்ஞானி தேவநாதன், பெண் ரோபோ (கண்மணி சோபியா) ஒன்றை உருவாக்கி தமிழ்நாட்டில் உலவ விடுகிறார். கோவை, குன்னூர், கொடைக்கானல் என அது பயணம் செய்கிறது. கூட்டு பாலியல் […]

Read more

பாரதிதாசன் படைப்புக்கலை

பாரதிதாசன் படைப்புக்கலை, ச.சு.இளங்கோ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 475ரூ. தமிழ் இலக்கியத்தைப் பாரதி புதுமைப்படுத்தினார். இவருக்குப் பின் வந்த பாரதிதாசன் புதுமைத் தமிழைப் பொதுமைப்படுத்தினார்.பாவேந்தரின் பாடல்களில் சமூக சீர்திருத்தம் எரிமலையாக ஒளிரும். அதன் வெப்பத்தையும், ஒளியையும் இந்நுாலாசிரியர் ஆய்வு செய்து, 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஆய்வேடு நுாலாக, வடிவம் பெற்றுள்ளது. ‘கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா’ எனும் குறுங்காவியங்களை விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார். கண்ணகி, மணிமேகலை பாத்திரப் படைப்புகளை, சமூக நீதியுடன் ஒப்பிட்டு பல உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். […]

Read more

அருஞ்சொற்குவை

அருஞ்சொற்குவை, முனைவர் வே.குழந்தைசாமி, விலை 100ரூ. தற்காலத்தில் கருத்துப் புதுமைகளும், கண்டுபிடிப்புகளும், புதிய பரிணாமங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. அத்தகைய புதிய கருத்துகள், செய்திகள் வெளியிடவும், மொழியாற்றல் அவசியமாகிறது. ஆங்கிலச் சொல் – இணையான தமிழ்ச் சொல் – மூலம் என்ற அடிப்படையில் பட்டியலிட்டுள்ள ஆசிரியர், தமிழ் என்னும் ஆழ்கடலில் முத்துகளை சேகரிக்க இயலாவிடினும், கடற்கரை மணலில் சேகரித்த சிப்பிகளைத் தொகுத்து, ‘அருஞ்சொற்குவை’யாக வழங்கி, நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறார். நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

திருக்குறள் களஞ்சியம்

திருக்குறள் களஞ்சியம், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், விலை 600ரூ. திருவள்ளுவரும் திருக்குறளும், நம் பண்டைய நீதி நுாலாசிரியர், கம்பன் கண்ட வள்ளுவர், வாழ்க்கை துணை நுால், திருக்குறளும் பொது நோக்கமும், இரந்து வாழும் வாழ்வு, தோன்றின் புகழோடு, குறள் நெறி, குறள் உணர்த்தும் பாடங்களை பட்டியலிடுகிறது இந்நுால். குறளில் சைவ சித்தாந்தம், கீதையும் குறளும், நுண்பொருள்மாலை ஆய்வுரை, குறள் வழங்கும் செய்தி, வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும், சீர்திருத்தம் உள்ளிட்ட கட்டுரைகள் அடங்கியது இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி:தினமலர் இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம், ஜெ.பாஸ்கரன், மணிமேகலைப்பிரசுரம், விலை 100ரூ. சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் சந்தேகமில்லை. சைக்கிள் விட்ட துள்ளலையும், கல்யாணங்களில் ஆனந்தப்பட்டதையும், பெண் பார்த்த அப்பாவித் தனத்தையும், வாழைப்பூ வடை சாப்பிட்ட நாக்கு ரசனையையும், துபாய் அனுபவிப்பையும், லண்டனில் படித்ததையும், அகஸ்தியர் கோவில் அமைப்பையும், அம்மாவின் அரவணைப்பையும், சினிமா மோகத்தையும் நினைவுகூர்வதாக அமைந்துள்ளது இந்நுால். சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் […]

Read more

திரைமொழி

திரைமொழி, வித்யாசாகர், முகில் பதிப்பகம், விலை 180ரூ. வித்யாசாகர் எழுதியுள்ள ஒவ்வொரு திரைப்படத்தின் ஆழமான விமர்சனங்களும் வாழ்வியலின் நிதர்சனப் பதிவன்றி வேறில்லை. திரைப்படம் பற்றிய சிறந்த பார்வையை கற்றுத் தந்திருக்கிறார். இந்நுால் எதிர்கால இளைஞர்களின் சிந்தனைப் பெட்டகமாகவும், புதிதாக திரைப்படம் இயக்கும் இயக்குனர்களுக்கு கதைகளின் களமாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை நன்றி:தினமலர் இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இறை இரகசியம்

இறை இரகசியம், பண்டிட் நாராயணன், ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ், விலை 390ரூ. எங்கே கடவுள்? பிரபஞ்சம் உருவான வரலாறு, யுகங்கள், சிருஷ்டி கர்த்தா, முப்பெரும் தேவியராகிய கலைமகள், அலைமகள், மலைமகள், விஷ்ணு மாயா, 108 திவ்ய தேசங்கள், ஆதிசிவன், 1,008 லிங்கங்கள், சிவபெருமானின் வேறு வடிவங்கள், தட்ஷிணாமூர்த்தி, காலபைரவர் உள்ளிட்ட ஆன்மிக செய்திகள் அடங்கிய பொக்கிஷம் இந்நுால். ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள், குலதெய்வ வழிபாடு ஏன்? இறை வழிபாடு ஆறு, ஜோதிடம் உருவான வரலாறு, இறையை உணர்வது எப்படி? நம்மை நாமே உணர்வது எப்படி? மந்திரம், […]

Read more
1 2 3 4 5 6 8