கா.சு.பிள்ளை சைவப்பெருமக்கள்

கா.சு.பிள்ளை சைவப்பெருமக்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 664, விலை 680ரூ. தமிழகத்தின் தொன்மைச் சமயம் சைவமாகும். இச்சமயம் வளர்த்த பெரியோர் பற்பலராவர்; அவருள் தாயுமானவர், பட்டினத்தார், குமரகுருபரர், சிவஞான சுவாமிகள் ஆகிய நால்வர் பற்றியும், சைவ சித்தாந்த விளக்கத்தையும், சைவ சிந்தாந்த சந்தனாச்சிரியர்கள் பற்றியும் இந்நுால் விரிவாகச் சொல்லியுள்ளது. நுாலைப் படைத்தவர், தமிழகத்தில் தமிழ் வளர்த்த சான்றோரில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றவர். சட்டம் படித்த பலர் தமிழறிஞராகவும் விளங்கினர். அவருள் எம்.எல்., பிள்ளை எனக் குறிக்கப்பட்ட, கா.சுப்பிரமணிய பிள்ளை முதன்மையாளர். அவர் காலத்து, பி.எல்., சட்டப் […]

Read more

மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்

மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள், மு.முருகேஷ், ஆதி வெளியீடு, பக். 64, விலை 40ரூ. நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்குவது விடுகதை. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியரே, ‘பிசி’ என்ற சொல்லால் விடுகதையைச் சுட்டியுள்ளார். மூத்த தமிழறிஞர்களான, ச.வே.சுப்பிரமணியன், ஆறு.ராமநாதன் ஆகியோர் வரிசையில் முருகேஷும் சேர்ந்துள்ளது பாராட்டுக்குரியது. ‘மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்’ என்னும் தலைப்பில், அறிவுக்கு விருந்தாகும், 180 விடுகதைகளைத் தொகுத்துள்ளது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினமலர், 18/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

கல்வி ஏற்பாட்டில் மொழி

கல்வி ஏற்பாட்டில் மொழி,  பி.இரத்தினசபாபதி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.280, விலை ரூ.180. மொழியும் சமுதாயமும் வகுப்பறையில் மொழிப் பன்முகம் வகுப்பறை கற்பிப்பில் தாய்மொழி பெறுமிடம் கல்வி ஏற்பாட்டில் மொழி மொழிசார்ந்த எதிர்கோள்கள் ஆகிய தலைப்புகளில் கல்வி கற்பிப்பதில் மொழியின் பங்கு குறித்துப் பேசும் நூல். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.எட் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் வேண்டும். பல்வேறு தன்மைகளுள்ள சூழலில் அனைத்து மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. […]

Read more

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம்

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம், மூலமும் உரையும் பகுதி 1, உரையாசிரியர் சிவ.சண்முகசுந்தரம், பாரி நிலையம், விலை 1500ரூ. எல்லாப் பொருளும் உள்ள கந்தபுராணம் பதினான்காம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் இயற்றியதாகக் கணிக்கப்படும் காவியமான கந்தபுராணத்தின் மூலமும் உரையும் கொண்ட நூல் வரிசையின் முதல் பகுதி இது. கந்தனாகிய முருகனின் வீரதீரச் செயல்களைச் சொல்லும் கந்தபுராணம் 91 படலங்கள், 10 ஆயிரத்து 345 பாடல்களைக் கொண்டதாகும். ‘எந்தப் பொருளும் கந்தபுராணத்திலே உள’ என்னும் பழமொழியால் சிறப்புப் பெற்றது ‘கந்தபுராணம்’. கச்சியப்ப சிவாச்சாரியார் வரலாறு, கந்தபுராணம் […]

Read more

பறையொழிப்பின் தேவை

பறையொழிப்பின் தேவை, வல்லிசை, அழகிய பெரியவன், நற்றிணை பதிப்பகம், விலை 240ரூ. சுப்பிரமணி இரமேஷ் அழகிய பெரியவனின் இரண்டாவது நாவலான ‘வல்லிசை’, பறையொழிப்பின் தேவையை முன்னெடுக்கிறது. சாதிய அடையாளத்துடனே பார்க்கப்படும் பறை இசைக் கருவியானது சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்குத் தடையாக இருக்கிறது. அதனால், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் முதலில் பறை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கண்ணியைப் பிடித்துக்கொண்டு இந்நாவல் முன்னேறுகிறது. பறையுடன் தொடர்புடைய ஒரு சமூகத்தின் கசப்பான வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள உதவுகிறது. தலித்துகளுக்காகப் போராடிய அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா உள்ளிட்ட பல […]

Read more

நான்காம் சுவர்

நான்காம் சுவர், பாக்யம் சங்கர், யாவரும் பதிப்பகம், விலை 375ரூ. சொற்களைக் கடந்த வாழ்வு வட சென்னை மக்களின் வாழ்க்கையை ஆழமாக நான்காம் சுவர் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் பாக்கியம் சங்கர். நல்ல குணாம்சம் கொண்டவர்கள் மட்டும்தான் நம்மைச் சுற்றி வாழ்கிறார்களா அல்லது நல்ல குணாம்சங்களுடன் மட்டும்தான் நாம் வாழ்கிறோமா என்ன? என்கிற கேள்விகளை இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் எழுப்புகின்றன. இளைய ராகங்கள் கட்டுரையில், ஒரு வேனில் ஒலிப்பெருக்கி சகிதம் அமர்ந்துகொண்டு பாடும் பார்வையற்றவர்களின் வாழ்க்கை அப்பட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. மழுங்கிய விரலில் எவர்சில்வர் தூக்குச் சட்டியை […]

Read more

பசுமை நிறைந்த நினைவுகளே

பசுமை நிறைந்த நினைவுகளே, எல்.முருகராஜ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 450ரூ. பிரிக்க முடியாதது வாரமலரும் வாசகர்களும் என்பதற்கேற்ப, 25 ஆண்டுகளாக வாசகர்களை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்லும் மாபெரும் பணியை செய்து வருகிறது, ‘தினமலர்’ வாரமலர். மூலிகைகளுடன் நம்மை தொட்டு விளையாடும் குற்றாலம் அருவிக்கு மட்டும் கூடுதல் வரம் கொடுக்கப்பட்டிருக்கிறது போல. மழையின் சாரலுடன் அருவியின் சாரலும் இணைந்து ஏற்படுத்தும் அனுபவம், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரவசம். அந்த குற்றாலத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்லும், ‘தினமலர்’ குழுவுடன் இணைந்து பயணித்து வரும் […]

Read more

மனத்தின் குரலும் மக்கள் குரலும்

மனத்தின் குரலும் மக்கள் குரலும், பெ.சிதம்பரம், வானதி பதிப்பகம், விலை 150ரூ. பல்வேறு காலக்கட்டத்திற்கு தகுந்தபடி அவ்வப்போது எழுதி வெளியான 35 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. அயோத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எவ்வாறு, சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, நதிகள் இணைப்பு, கல்வியில் தாய்மொரீ உள்பட பல ஆக்கபூர்வமான கட்டுரைகள் சிந்தனைக்கும் விருந்தாக உள்ளன. நன்றி: தினத்தந்தி, 7/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மலேசிய மண்ணின் வாசம்

மலேசிய மண்ணின் வாசம், மா.சண்முகசிவா சிறுகதைகள், தொகுப்பு ம. நவீன், விலை 100ரூ. மலேசிய எழுத்தாளரான மா.சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பைத் தொகுத்திருக்கிறார் ம.நவீன். ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலைச் சுமந்தவண்ணம் அறிமுகம்கொள்கிறது. வெவ்வேறு காலகட்ட சமூகத்தையும், மலேசியத் தமிழ் மக்கள் மையப்படுத்திய அரசியலையும், அதன் வழியே அவர்களின் சிக்குண்ட வாழ்க்கையையும் நுண்மையாக விவரிக்கிறார். நெருக்கடிகளையெல்லாம் கடந்து, மனிதர்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் மானுடம் வெளிப்படும் இடங்கள் வாசிப்பிலும், வாழ்க்கை குறித்த புரிதலிலும் ஓர் ஆசுவாசத்தை […]

Read more

நெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்

நெமிலி ஸ்ரீ பாலா குருபீடம், நெமிலி ஸ்ரீ பாபாஜி பாலா, வானதி பதிப்பகம், விலை 200ரூ. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. அருணகிரியாருக்கு முருகனே குருவாய் வர வேண்டும் என்ற ஆசையால், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றார். நெமிலி ஜி.பாபாவிற்கு, பாலாவே குருவாக ஆட்கொண்டார் என்ற தகவல் உள்ளது. குருவருளும் திருவருளும் துவங்கி, குருவின் ஆற்றல் வரை, 10 தலைப்புகளில் இந்த நுால் பேசுகிறது. படிப்போருக்குக் கிடைக்கும் பாக்கியம் எனலாம். இந்த நுாலின் தனி சிறப்பே நாமாவளிகள் தான். […]

Read more
1 2 3 4 5 6 9