வாக்கிங் த ரோட்லெஸ் ரோட் எக்ஸ்ப்ளோரிங் தி ட்ரைப்ஸ் ஆஃப் நாகாலாந்த்

வாக்கிங் த ரோட்லெஸ் ரோட் எக்ஸ்ப்ளோரிங் தி ட்ரைப்ஸ் ஆஃப் நாகாலாந்த், ஈஸ்தரீன் கைர், அலெப் புக் கம்பெனி, விலை 699ரூ. நாகாக்கள் கடந்து வந்த பாதை மங்கோலியாவிலிருந்து சீனா, பர்மா வழியாக இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்குக் குடிபெயர்ந்த நாகா இன மக்களின் வரலாற்றைப் பேசும் புத்தகம் இது. கிராமங்களில் வழங்கும் எழுதப்படாத வரலாற்றுத் தொன்மங்கள், நாகா இனத்தின் தனித்துவத்தை நிலைநாட்டும் சம்பவங்கள் ஆகியவற்றைத் தொகுத்த வகையில், நாகா இன மக்கள் கடந்துவந்த பாதையை எடுத்துரைக்கும் புத்தகமாகவும் இருக்கிறது. அவர்கள் இந்தியாவை வந்தடைந்த பிறகு […]

Read more

ஆங்கில ஆசான்

ஆங்கில ஆசான், நலங்கிள்ளி, கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.600 துணை வினைகளில் எதை, எங்கே பயன்படுத்த வேண்டும் என்பது ஆங்கிலத்தில் கரைகண்டுவிட்டதாகப் பெயர்பெற்றவர்களே தடுமாறும் இடம். குறிப்பாக can-could, may-might, will-would-shall, போன்ற சொற்களெல்லாம் ஒரே பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் நடைமுறை இருந்துவருகிறது. இவற்றில் சில சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. இந்த ஒவ்வொரு சொல்லுக்கும் தனிப் பயன்பாடுகளும் இருக்கின்றன. காலத்தைப் பொறுத்தும் நாம் யாரிடம் பேசுகிறோம் என்பதைப் பொறுத்தும் இந்தச் சொற்களின் பயன்பாடு மாறும். இவை ஒவ்வொன்றும் எளிய உதாரணங்களுடன் […]

Read more

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும், ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், பக். 200, விலை 190ரூ. தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு உள்ளாகும் என்பதை முன்னதாகவே அறிந்து, நீர் நிலைகளை வளமாக்கும் திட்டங்களை கட்டுரை வடிவில் கொண்டு சென்ற மூத்த அரசியலாளர் இவர். உழவர்களின் தோழர் என்ற போற்றுதலுக்கு உரியவர். தமிழகத்தின் வறட்சியைப் போக்கும் வழி, கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, நெஞ்சம் குளிரும் நீர் வழிகள் உள்ளிட்டவை, நீர்வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விதைப்பதாக உள்ளன. காவிரி உரிமையைக் காப்போம், தாமிரபரணியின் […]

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன்,  டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம்,  பக்.304, விலை ரூ.200. மருத்துவம் சார்ந்த நூல்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நூலாக இது விளங்குகிறது.கண்ணுக்குப் புலப்படாத உள்ளுறுப்புகள் எப்படி உயிரைத் தாங்கிப் பிடிக்கும் உன்னத வலிமையுடன் விளங்குகின்றன என்பதை ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதயத்தின் அடிப்படை செயல்பாடுகளில் ஆரம்பித்து இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அதி நவீன சிகிச்சைகள் வரை அலசப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமன்றி, உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள், அதற்கான காரணங்கள், அதன் விளைவுகள் என அனைத்து விஷயங்களும் […]

Read more

அழகு ஏன் அழகாயிருக்கிறது?

அழகு ஏன் அழகாயிருக்கிறது?, அழகின் நரம்பியல், உளவியல் விளக்கம், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.106, விலை ரூ.50. மனித வாழ்க்கையின் அடிப்படையாகத் தன்னைப் பேணுவதும், தன்னைப் போல் இன்னொன்றைப் பிறப்பிப்பதும் இருக்கின்றன.  இந்த இரண்டும் எல்லா மிருகங்களுக்கும் பொதுவானவை என்றாலும், மனிதனிடம் விளையாட்டும், கலை உணர்வும் இருப்பதுதான் மிருகங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் காட்டுகிறது. கலையின் மேற்பூச்சுக்குப் பின் காமம் மறைந்திருக்கிறது. பரதநாட்டியம், நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்றவற்றில் மெலிதாகக் காமம் இழையோடுவதைப் பார்க்க முடியும். அவை காம இச்சையின் வடிகால்கள்தானே என்கிறார் நூலாசிரியர். கலையோடு […]

Read more

ரசூலின் மனைவியாகிய நான்

ரசூலின் மனைவியாகிய நான்,  புதியமாதவி, காவ்யா, பக்.139, விலை ரூ.140 ஏழு கதைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கதையான "ரசூலின் மனைவியாகிய நான் ஒரு குறுநாவல். மும்பை ரயில் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த ரசூல் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறான். அவனுடைய மனைவி கவுரி, மருத்துவமனைக்கு வந்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள். அதே குண்டுவெடிப்பில் கவுரியின் வீட்டருகே உள்ள பணக்காரரான மங்கத்ராமின் மகன் கபில் இறந்துவிடுகிறான். ரசூல் இருக்கும் மருத்துவமனையில் அவனைப் போலவே குண்டுவெடிப்பில் காயமடைந்த ஹேமா இருக்கிறாள். ரசூலுடன் குண்டுவெடித்த ரயிலில் பயணம் […]

Read more

தமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம்  சமகால எதிர்வினைகள் (இதழ்கள்)

தமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம்  சமகால எதிர்வினைகள் (இதழ்கள்), மு.வையாபுரி, பல்லவி பதிப்பகம்,பக்.229, விலை ரூ.170. ஐரோப்பியத் தாக்கத்தினால் நமது சமூக, அரசியல், பொருளாதார இயங்கு தளங்களில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தாம் தமிழில் புனைகதை என்றொரு இலக்கிய வகை உருவாகக் காரணமாக இருந்தது என்று கூறும் நூலாசிரியர், அப்படி உருவான புனைகதை வடிவமானது தமிழ்மொழியின் பாரம்பரியங்களுக்கு ஊடாகத்தான் இங்கே தோற்றம் பெற்றது என்கிறார். ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகளை வெளியிடுவதற்காகவே முதலில் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன என்றாலும், சமயம், கல்வி, அன்றாட நிகழ்வுகள், நாட்டு வரலாறுகளையும் அக்காலப் […]

Read more

குழந்தை வரைந்த காகிதம்

குழந்தை வரைந்த காகிதம், கவிஞர் இளவல் ஹரிஹரன், ஓவியா பதிப்பகம், வலை 100ரூ. தெலுங்கில் சமீப காலமாக நானிலு என்னும் நான்கு வரிக் கவிதை வடிவம், கொடி கட்டிப் பறக்கிறது. இதற்குத் தமிழில் தன் முனைக் கவிதைகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது குழந்தை வளர்ந்த காகிதம் என்ற தலைப்பில் தன் முனைக் கவிதை நூலை முதன்முறையாகப் படைத்து வெளியிட்டு இருக்கிறார் கவிஞர் இளவல் ஹரிஹரன். பத்திரப் பதிவுத்துறையில் மிக உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற இவர், வாழ்வில் தான் கண்டதையும், உணர்ந்ததையும் […]

Read more

அழகு ஏன் அழகாயிருக்கிறது?

அழகு ஏன் அழகாயிருக்கிறது?, அழகின் நரம்பியல், உளவியல் விளக்கம் – க.மணி;  அபயம் பப்ளிஷர்ஸ்,பக்.106, விலை ரூ.50 மனித வாழ்க்கையின் அடிப்படையாகத் தன்னைப் பேணுவதும், தன்னைப் போல் இன்னொன்றைப் பிறப்பிப்பதும் இருக்கின்றன.  இந்த இரண்டும் எல்லா மிருகங்களுக்கும் பொதுவானவை என்றாலும், மனிதனிடம் விளையாட்டும், கலை உணர்வும் இருப்பதுதான் மிருகங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் காட்டுகிறது. கலையின் மேற்பூச்சுக்குப் பின் காமம் மறைந்திருக்கிறது.பரதநாட்டியம், நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்றவற்றில் மெலிதாகக் காமம் இழையோடுவதைப் பார்க்க முடியும். அவை காம இச்சையின் வடிகால்கள்தானே என்கிறார் நூலாசிரியர். கலையோடு தொடர்புபடுத்தி […]

Read more

பவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள்

பவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள், கனி விமலநாதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. இயற்பியல் என்னும் பவுதிகவியல், விஞ்ஞானத்தின் அத்தனைப் பிரிவுகளுக்கும் அடிபப்டையாக இருக்கிறது என்பதை பல்வேறு தலைப்புகளில் இந்த நூல் விளக்கமாகத் தந்து இருக்கிறது. ஒளி என்பதில் அடங்கியுள்ள ரகசியம், சார்பியல், அணு பற்றிய பாடப்பிரிவில் ஒரு பிரிவான குவாண்டம் என்பது போன்ற கனமான விஷயங்கள் சாதாரணமானவர்களும் புரிந்து கொள்ளும் வகையில், அன்றாட உதாரணங்களுடனும் தரப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இலங்கைத் தமிழ் வார்த்தைகள் பல இடங்களில் இடம்பெற்று இருக்கின்றன. […]

Read more
1 3 4 5 6 7 9