ராபின்சன் குருசோ

ராபின்சன் குருசோ, டேனியல் டெபோ, தமிழில் லதா வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ. கடற்பயண ஆசையால் கப்பல் ஏறி பயணித்து, விபத்தில் சிக்கி ஆள் இல்லாத தீவில் தனி ஆளாக ஒதுங்கி, சவால்களைச் சந்தித்து வாழ்ந்த இளைஞன் ராபின்சன் குருசோவின் கதை. பல ஆண்டுகளாக ஏராளமான மக்களின் பெரு விருப்பமாக இருக்கிறது. இந்தக் கதை எளிமையான தமிழில் மொழிபெயர்த்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. நீரோட்டம் போன்ற நடை அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மண் வாசனை

மண் வாசனை,  ஜ.பாரத்,  ஜீவா படைப்பகம், பக்.150, விலை ரூ.150. மண் வாசனை – ஜ.பாரத்; பக்.150; ரூ.150; ஜீவா படைப்பகம், 214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர், வேளச்சேரி, சென்னை-42.நூலாசிரியரின் இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகளில் நனவோடை உத்தி கையாளப்பட்டுள்ளது. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதைச் சுருங்கச் சொல்லும் சொர்க்கவாசல் கதையும், அளப்பரிய பாசத்தையும், சிக்கல்களையும் சொல்லும் அசரீரி, உறவுகள், மாயகிருஷ்ணன் கதைகளும் கச்சிதம்.சபாஷ் சந்திரபோஸூம், சே குவேராவும் சந்தித்ததாகக் காட்டப்படும் நாடோடிப் புரட்சிக்காரன் வித்தியாசமான […]

Read more

கல்வி ஏற்பாட்டில் மொழி

கல்வி ஏற்பாட்டில் மொழி, பி.இரத்தினசபாபதி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.280, விலை ரூ.180 மொழியும் சமுதாயமும் வகுப்பறையில் மொழிப் பன்முகம் வகுப்பறை கற்பிப்பில் தாய்மொழி பெறுமிடம் கல்வி ஏற்பாட்டில் மொழி மொழிசார்ந்த எதிர்கோள்கள் ஆகிய தலைப்புகளில் கல்வி கற்பிப்பதில் மொழியின் பங்கு குறித்துப் பேசும் நூல். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.எட் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் வேண்டும். பல்வேறு தன்மைகளுள்ள சூழலில் அனைத்து மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. […]

Read more

இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

இந்தியக் கல்வியின் இருண்டகாலம், தொகுப்பு ஆசிரியர் நா.மணி, பாரதி புத்தகாலயம், விலை 80ரூ. தேசியக் கல்விக்கொள்கை (வரைவு) 2019 வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நேரத்தில், அவசிய தேவையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்கள் பலர் தெரிவித்து இருக்கும் ஆணித்தரமான கருத்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029654.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம்

தமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம், சமகால எதிர்வினைகள் (இதழ்கள்), மு.வையாபுரி, பல்லவி பதிப்பகம், பக்.229, விலை ரூ.170. ஐரோப்பியத் தாக்கத்தினால் நமது சமூக, அரசியல், பொருளாதார இயங்கு தளங்களில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தாம் தமிழில் புனைகதை என்றொரு இலக்கிய வகை உருவாகக் காரணமாக இருந்தது என்று கூறும் நூலாசிரியர், அப்படி உருவான புனைகதை வடிவமானது தமிழ்மொழியின் பாரம்பரியங்களுக்கு ஊடாகத்தான் இங்கே தோற்றம் பெற்றது என்கிறார். ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகளை வெளியிடுவதற்காகவே முதலில் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன என்றாலும், சமயம், கல்வி, அன்றாட நிகழ்வுகள், நாட்டு வரலாறுகளையும் […]

Read more

பிறவி என்பது?

பிறவி என்பது?, சம்பத்குமார், கங்கை புத்தக நிலையம், விலை 180ரூ. அமானுஷ்யமான விஷயங்களைப் படிப்பது போன்ற உணர்வு, இந்த நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. நாம் பூமியில் பிறந்தது எதற்காக? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் போகிறோம்? என்பது போன்ற பல விஷயங்களை இந்த நூல் அலசுகிறது. மறு பிறப்பு உண்டா, சொர்க்கம் நரகம் என்பவை உண்டா போன்ற விஷயங்களும் 103 சிறு சிறு கட்டுரைகளில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 7/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, புதுயுகன், வானதி பதிப்பகம், பக். 232, விலை 200ரூ. லண்டன் கல்வியாளர், எழுத்தாளர் புதுயுகனின் தன்னம்பிக்கை நுால் இது. வித்தியாசமான பார்வையில், வித்தியாசமான சிந்தனையில், வாழ்வியல் நெறிமுறைகளை மையப்படுத்துவதில் தமிழ் தன்னம்பிக்கை நுால்களில் தனித்துவம் பெறுகிறது இந்நுால். ‘நல்ல மனப்பான்மை இருந்தால் வாழ்க்கையின் உள்ளேயே ஒரு புதிய வாழ்க்கை புலப்படும்,-3டி போல, தனது தனித்துவத்தை துல்லியமாக புரிந்து கொண்ட நொடியில் ஒரு உலகச்சாம்பியன் உருவாகிறான்’ என்பது போன்ற தத்துவரீதியான தன்னம்பிக்கை சிந்தனைகள் ஏராளம். ‘கல்வியை பொறுத்தவரை நமக்கு யானைப்பசி வேண்டும்’ […]

Read more

இராகவம் 2

இராகவம் 2, முனைவர் கா.அய்யப்பன், காவ்யா பதிப்பகம், பக். 912, விலை 900ரூ. இராகவம் – 2 ரா.இராகவையங்காரின் சங்க இலக்கிய உரைகள்’ என்ற இந்த நுால், தமிழறிஞர்களுக்கு அரிய கருவூலமாய் விளங்குகிற நுால். மகாவித்வான், ரா.இரா., மிகப் பெரிய ஆராய்ச்சி அறிஞர், கவிஞர், ஆசுகவி. நுால்கள் பல யாத்தவர். அவருடைய பெரும் புலமை இந்த நுாலில் வெளிப்படுவதை, நுாலைப் படிப்போர் உணர்வர். நுண்ணறிவால் பாட வேறுபாடுகளை குறிப்பிட்டு, மிகப் பொருத்தமான பாட பேதத்தை ஏற்று, விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தமிழறிஞரின் புலமைத் திறம் […]

Read more

ஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள்

ஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள்,  சி.எஸ்.தேவநாதன், சுரா பதிப்பகம்,  பக்.120, விலை ரூ.60. ஒரு விற்பனையாளர் வெற்றிகரமான விற்பனையாளராக மாற வேண்டுமானால் எந்த எந்தவிதங்களில் எல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் நூல். வாடிக்கையாளர்களிடம் பேசும்முறை, விற்பனைப் பொருள்களை அவர்களுக்கு காட்டும் முறை, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் கூறுவது, வாடிக்கையாளரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி எந்த முன் முடிவுக்கும் வராதிருப்பது, பொறுமையாக இருப்பது, வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி உரையாடல்களை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்வது என வாடிக்கையாளர்களைக் […]

Read more

பறவையியல்

பறவையியல்,  வ.கோகுலா, சி.காந்தி,  ஜாஸிம் பப்ளிகேஷன், பக்.200, விலை ரூ.300. நம் மனதைக் கவரும் பறவைகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான பல உண்மைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது இந்நூல். நூலின் முதற்பகுதியில் இந்த உலகம் தோன்றிய முறை, உயிரினங்கள் தோன்றியது, கண்டங்கள் இடம் பெயர்ந்தது, பறவையினங்களின் தோற்றம் ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன. அரிஸ்டாட்டில் பறவைகளைப் பற்றிய குறிப்புகளை தனது விலங்குகளின் வரலாறு நூலில் சேர்த்ததை பறவையியல் ஆய்வின் தொடக்கமாக கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் நடந்த ஆய்வுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். பறவைகளின் இறகுகள் எம்மாதிரி அமைந்துள்ளன? […]

Read more
1 4 5 6 7 8 9