நட்சத்திரப் பெண்

நட்சத்திரப் பெண் – விஞ்ஞான சிறுகதைகள், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200 நிஜமா, கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞானத்துடன் கதை பேசி வடிவம் கொடுத்துள்ளார் ஆர்னிகா நாசர். இளமை துள்ளும் எழுத்துக்கு காதலும், அறிவியலும் கைகோர்த்து வெற்றி மகுடம் சூட்டுகின்றன. காலக் கடிகாரத்தை கொண்டு நல்லதை முடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போது, முடிவிலும் நிஜத்தைப் போலவே சோகத்தை தருகிறார். ரோபோ குழந்தையை பேச வைத்து அதிரச் செய்கிறார். பூனையும், எலியுமான ‘டாம் அண்டு ஜெர்ரி’ கதை […]

Read more

பயம்

பயம், ஹிப்னோ ராஜராஜன், ராரா புக்ஸ், விலைரூ.350 மனநல மருத்துவர் எழுதியுள்ள நுால். குற்றவாளியிடம் உண்மை கண்டறியும் சோதனையில் காவல் துறைக்கும் உதவுகிறார். திக்குவாய், பேச்சுத் தடைகளையும் நீக்குகிறார். இவர் அனுபவங்கள் நீண்டு நுாலாகி, வானில் பட்டமாக உயர்த்துகின்றன. பயம் எப்படி உடலையும், மனதையும் பாதிக்கிறது என்பதை 20 தலைப்புகளில் விளக்குகிறார். எண்ணங்களின் குவியல் மனம். அது ஆத்மாவில் அடங்கிவிட்டால் ஆன்ம சுகம் வந்துவிடுகிறது என்ற பகவான் ரமணரின் தவமொழியுடன் துவங்குகிறார். ஆழ்மனதில் பயத்தை அழித்துவிட்டால், நோயிலிருந்து விடுதலை பெற்றுவிடலாம். பயத்தைப் போக்கும் பயனுள்ள […]

Read more

பொற்றைக்காடு

பொற்றைக்காடு,  முள்ளஞ்சேரி மு.வேலையன், காவ்யா, பக்.361, விலை  ரூ.360. குமரி மாவட்டத்தில் உள்ள முள்ளஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிவாழ்க்கை இருந்தது என்பதை அசைபோடும் நூல். அந்தப் பகுதிகளில் இருந்த உணவுமுறைகள், விளைபொருள்கள், மக்களின் பழக்க, வழக்கங்கள், தொழில்கள், கடைகள், சந்தைகள், கள், சாராயப் பழக்கங்கள் என அன்றைய வாழ்வைப் பற்றிய தகவல்கள் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன. ‘நுனி வீட்டுக்கு; நடு மாட்டுக்கு; அடி வயலுக்கு என பயன்பட்டு வந்த நெல் விவசாயம் 1970 ஆம் ஆண்டில் பசுமைப்புரட்சி வந்தவுடன் […]

Read more

ஊன் உடம்பு

ஊன் உடம்பு, மருத்துவர் A.B. ஃப்ரூக் அப்துல்லா, துருவம் வெளியீடு, விலை 120ரூ. கரோனா காலத்தில் பரவிய வதந்திகளைத் தன்னுடைய எளிமையான எழுத்தின் மூலம் ஃபரூக் அப்துல்லா எதிர்கொண்ட விதம் மக்களுக்கு நம்பிக்கை அளித்தது. அதன் நீட்சியாக அவர் எழுதியிருக்கும் இந்த நூலில், பொதுநல சிகிச்சைகள், சந்தேகங்கள் குறித்து சாமானியர்களுக்குப் புரியும் மொழியில் விளக்கியுள்ளார். புற்றுநோய், நீரிழிவு, பேலியோ சீருணவு, டயாலிசிஸ், பக்கவாதம், முடக்கு வாதம், சிறுநீர்ப் பாதைத் தொற்று உள்ளிட்ட நோய்கள் குறித்து அவர் அளித்துள்ள விளக்கங்கள் பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். […]

Read more

ஆட்டிசம் ஒரு பார்வை

ஆட்டிசம் ஒரு பார்வை, டாக்டர் ராதா பாலசந்தர், சென்டர் ஃபார் டெவலப்மென்ட் எஜுகேஷன் அண்ட் கம்யுனிகேஷன்,  பக்,160, விலை 150ரூ. ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்குத் தான் அளித்த சிகிச்சை அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆட்டிசத்துக்குத் தனியொரு நிபுணரின் வழிகாட்டல் மட்டும் போதாது. மனநல ஆலோசகர், நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர், பேச்சுப் பயிற்சி சிகிச்சையாளர் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழு மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். இசை, நடனம், யோகா போன்றவை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் கவனக்குவிப்பை அதிகரிக்கும் என்பன […]

Read more

மாப்ளா புரட்சி

மாப்ளா புரட்சி – மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்,  ஜெகாதா, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. நிலச்சுவான்தார்களிடமிருந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க மலபார் மாப்ளா சமூகத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் அரசு இருந்ததால் மாப்ளா சமூகத்தினர் காலனியாதிக்கத்தையும் எதிர்த்தனர். ஆனால் இந்துக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதே “மாப்ளா புரட்சி’ என்று பல்வேறு தரப்பினர் பதிவு செய்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கும்விதமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மலபாரின் ஜென்மி சமூகத்துக்கு வரைமுறையற்ற நில உடைமை அதிகாரங்களை வழங்கியதை எதிர்த்து மாப்ளா குத்தகை விவசாயிகள் போராட்டத்தில் […]

Read more

இணையச் சிறையின் பணயக் கைதிகள்

இணையச் சிறையின் பணயக் கைதிகள், டாக்டர் மோகன வெங்கடாசலபதி, இந்து தமிழ் திசை, விலை 160ரூ. இணையமும் ஸ்மார்ட்போன்களும் நம்முடைய வாழ்க்கையை எளிதாக்கி இருப்பதோடு, மனநலத்தையும் சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இணையத்தால் மனத்துக்கு ஏற்படும் சிக்கலைப் புரிந்துகொள்ளும் விதமாக ‘சைபர் சைகாலஜி’ எனும் உளவியல் பிரிவே உருவாகியிருக்கிறது. மனிதனும் கணினியும் தொடர்புகொள்ளும் விதத்தில் மனித மனம் அதற்கு எப்படி எதிர் வினையாற்றுகிறது என்பதைப் பற்றியும், அதன் நன்மை தீமைகள் பற்றியும் விளக்கும் ‘சைபர் சைகாலஜி’ பற்றியும் டாக்டர் மோகன வெங்கடாசலபதி எழுதியுள்ளார். நன்றி: தமிழ் […]

Read more

சங்ககால சமையல்

சங்ககால சமையல், இரா.கீதா, சரண் புக்ஸ், விலைரூ.110 உணவுகளின் செய்முறையை விளக்கும் சமையல் வழிகாட்டி நுால். நல்வழி கடவுள் வாழ்த்தான, ‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்…’ என துவங்கும் பாடலுடன் புத்தகம் துவங்குகிறது. தொடர்ந்து சுவையான சமையல் செய்முறை குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 32 வகை உணவுகளின் செய்முறை விளக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு உணவு தயாரிப்பு முறையை அடுத்து, அதன் பலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகை உணவை உண்பதால் ஏற்படும் விளைவு பற்றிய விபரம் சிறப்பாக உள்ளது. பல வித்தியாசமான உணவு செய்முறைகளும் […]

Read more

எல்லாம் மெய்

எல்லாம் மெய், எனது வாழ்க்கைப் பயணம், டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன், சஞ்சீவியார் பதிப்பகம், பக்.528, விலை ரூ.450. டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன் எழுதிய வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் கொண்ட நூல்.நூலை வாசிக்கும்போது, நூலாசிரியர் பத்திரிகையாளரா, எழுத்தாளரா, மருத்துவரா, அரசியல்வாதியா? இவர் எதில் முதன்மை வகிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. என்றாலும் எழுத்தும் பத்திரிகையும் இவரது நேசிப்புக்கு உரியவை என்று தெரிகிறது. மருத்துவக் கல்லூரிகளில் பயின்றபோதே தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளிலும் எழுதி இருக்கிறார். “மாணவம்’ இதழுக்கு உதவி ஆசிரியராக, ஓவியராகப் பணி புரிந்திருக்கிறார். அரசியலைப் பொருத்தவரை, […]

Read more

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள், டாக்டர்.எம்.ஜி.அண்ணாதுரை, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. வாசனை தைலத்தால் செய்யப்படும் சிகிச்சை முறை பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நுால். இந்த சிகிச்சை முறை தோன்றியதன் வரலாற்று செய்திகள் முதல் இயலில் தொகுக்கப்பட்டு உள்ளன. அடுத்து வாசனை தைல தயாரிப்பு, ‘மசாஜ்’ செய்யும் முறைகள் என, 17 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. எந்தந்த இயற்கை பொருட்களில் இருந்து வாசனை தைலங்கள் தயாரிக்கப்படுகிறது என்பது உட்பட தகவல்கள் உள்ளன. மிக எளிய நடையில், அரோமா தெரபி பற்றிய அறிமுக நுால். – […]

Read more
1 4 5 6 7 8