தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!, மருத்துவர் பி. மைக்கேல் செயராசு, விகடன் பிரசுரம், விலை 220ரூ. நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு நம் முன்னோர் மூலிகைகளையே நம்பி இருந்தனர். மூலிகைகள் நோயைக் குணமாக்கியதோடு, நோய் மீண்டும் தாக்காமலும் தடுத்தாட்கொண்டன! நீரிழிவை நீக்கும் விளா, வாத நோயைத் தீர்க்கும் நொச்சி, காமாலையை விரட்டும் கீழாநெல்லி என நம்மைச் சுற்றியுள்ள செடிகொடிகளின் மருத்துவ மகத்துவத்தை விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். நன்றி: தமிழ் இந்து, 26/2/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

நலம் நம் கையில்

நலம் நம் கையில் (இரண்டு பாகங்கள்), டாக்டர் கு.கணேசன், தாமரை பிரதர்ஸ் மீடியா, விலை 190ரூ. இன்றைய நவீன வாழ்க்கை முறையின் கேடுகளைச் சுட்டிக்காட்டும் டாக்டர் கணேசன் அதற்கான தீர்வுகளையும் இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். உடற்பயிற்சி, சரியான உணவு முறை போன்றவற்றை மட்டுமல்ல சிரிப்பையும்கூட மருந்தாக முன் வைக்கிறார். தனிப்பட்ட உடலுறுப்புகள் மட்டுமன்றி, மூட்டுவலி, மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம், உணவு ஒவ்வாமை, மூப்புமறதி, தூக்கக் கோளாறு, பெண்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி விரிவான வகையில் அலசியிருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 26/2/22. […]

Read more

நானும் நீதிபதி ஆனேன்

நானும் நீதிபதி ஆனேன், சுயசரிதை, கே. சந்துரு, அருஞ்சொல் வெளியீடு, பக்.480, விலை ரூ. 500. முப்பதாண்டுகள் வழக்கறிஞராகவும் சுமார் ஏழு ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துருவின் தன் வரலாறெனக் குறிப்பிடப்பட்ட வரலாற்றுப் பதிவுகளின் தொகுதி இது. நூலில் 22 தலைப்புகளில் தாம் எடுத்துக் கொண்ட பொருள்களின்வழி தன்னுடைய வரலாற்றை மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலகட்டத்தின் அல்லது பிரச்னையின் வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்கிறார் சந்துரு. எண்ணற்ற மனித உரிமை வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர்; மக்கள் கொண்டாடிய எண்ணற்ற தீர்ப்புகளை […]

Read more

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு,  பெ.சுப்பிரமணியன், காவ்யா, பக்.170, விலைரூ.160. ஒரு சமூகத்தின் புவிச் சூழலியல், குடியிருப்புகள், பொருளாதாரம், குடும்ப அமைப்பு, திருமணம் உள்ளிட்ட சடங்குகளைத் தொகுத்துக் கூறுவது இனவரைவியல் ஆகும். சிலப்பதிகார காப்பியத்தை இனவரைவியல் கோட்பாடு முறையில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை ஆகிய 3 காதைகளும் தொல்குடிகளின் வாழ்வியலைக் காட்டும் பகுதிகளாக உள்ளன. வேட்டுவ வரி இயலில் வேட்டுவ இனமக்களின் கூத்துகள், ஆடல்- பாடல், இசை, கொற்றவை வழிபாடு, பலியிடல் முதலிய பல்வேறு செய்திகள் […]

Read more

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. இந்தியப் பகுதியில்தான் பூர்வ குடிகள் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன. தொல் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, பெருகியதும் இந்தியாவில்தான்; மனிதனும் அங்குதான் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கி.மு. நான்காயிரம் ஆண்டுகள் வரை இந்தியா முதல் பாரசீகம், எகிப்து, சைப்ரஸ், கிரேத்தா வரையில் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்தனர்; தென் பகுதியில் வாழ்ந்த மக்களே வடக்கிலும் இன்ன பிற இடங்களிலும் சென்று குடியேறினர். இந்த உலகில் இல்லாத ஒரு நிலப்பரப்பு […]

Read more

காதலுக்கு எண் 143-ஐ அழுத்தவும்

காதலுக்கு எண் 143-ஐ அழுத்தவும், நவ்ஷாத் கான்.லி, காகிதம் பதிப்பகம், விலை 60ரூ. காதல், சமூகம், குடும்ப உறவுகள் ஆகியவை தொடர்பாக எழுதப்பட்ட புதுக்கவிதைகள் இந்த நூலில் காணப்படுகின்றன. நீ வாசித்த புத்ககங்களில்கூட நீங்காத உன் வாசனை என்பது போன்ற காதல் தொடர்பானவை படிக்க சுவையாகவும், கிருஷ்ணர் வேடம் அழகாய் இருந்தது பாய் வீட்டு குழந்தைக்கு என்பது போன்றவை சிந்தனைக்கு விருந்தாகவும் உள்ளன. நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

அன்பே அமிழ்தம்

அன்பே அமிழ்தம், ஞா.சிவகாமி, முல்லை பதிப்பகம், விலை 120ரூ. நேரில் பார்த்து படித்தது, அவற்றில் மனைதப் பாதித்தது ஆகிய உணர்ச்சிகளை 23 சிறுகதைகளாகக் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். மாமனாரை வெறுக்கும் மருமகள், குடிக்கு எதிராகப் போராடும் பெண்கள், கொரோனாவின் தாக்கம் போன்ற சிறுகதைகள் மனதைத் தொடும் வகையில் இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031626_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஜீவன் லீலா

ஜீவன் லீலா: அருவிகளின் லீலைகள், காகா கலேல்கர், தமிழில்: பி.எம்.கிருஷ்ணசாமி, சாகித்ய அகாடமி, விலை: ரூ.385. இந்திய நீர்நிலைகளின் அழகும் ஆழமும் காந்தியுடன் நெருங்கிப் பழகியவரும் குஜராத்தி, மராத்தி, இந்தி மொழிகளில் புகழ்பெற்ற எழுத்தாளரும் இந்தியா முழுவதும் ஓயாமல் பயணித்த சஞ்சாரியுமான காகா கலேல்கர் தன் பயண அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் முக்கியமான நதிகள், ஆறுகள், அருவிகள், ஏரிகள், கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பற்றி காலேல்கர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘ஜீவன் லீலா’ என்னும் நூலாக குஜராத்தி மொழியில் சாகித்ய […]

Read more

வரம் தரும் அன்னை

வரம் தரும் அன்னை, பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.190. இந்து கடவுள் என்றால் இந்தியாவிலிருந்து தான் வரமுடியுமா… பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம்; மகாகாளி உருவெடுக்கலாம்; சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால். பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, அன்னையாக மகான் அரவிந்தர் அடியொற்றி, தத்துவங்களை பின்பற்றி நடந்தவர். நீ நீயாய் இரு என்பது தான் அன்னை சொல்லும் வேதம். உண்மை, அன்பு, பாசம் என நற்பண்புகளுடன் விளங்குவது தான் நீயாக இருப்பதன் அவசியம். […]

Read more

பாபாயணம்

பாபாயணம், ஜி.ஏ. பிரபா, விகடன் பிரசுரம், விலைரூ.350. ஷீரடி சாய்பாபா பற்றி ஏராளமான நுால்கள் வந்த வண்ணமாக உள்ளன. பாபா பற்றி, ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். பாபாவின் அற்புதமான நிகழ்வுகள், அருட்செயல்கள் அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷீரடியில் காலை ஆரத்தியில் துவங்கும் இதில், ‘பாபாவும் நானும்’ என்ற தலைப்பில் பிரபலமானவர்களின் அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பாக உள்ளன. பக்கம் பக்கமாக பாபாவின் படங்கள் பரவசம் ஊட்டுகின்றன. பாபாவின் பக்தர்களுக்கு நல்ல படைப்பு. – பின்னலுாரான் நன்றி: […]

Read more
1 2 3 4 5 6 8