சிகண்டி

சிகண்டி, ம.நவீன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை: ரூ.640 மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர் ம.நவீன். இவருடைய முதல் நாவலான ‘பேய்ச்சி’யைப் போலவே இந்த நாவலும் முழுக்கவே கோயில் பின்னணியில் நடைபெறும் கதை. தீபன் என்னும் சிறுவனின் பதின்ம வயதிலிருந்து 20 வயது வரையிலான கதையே இந்த நாவல். எதிர்பாராத ஒரு நிகழ்வால் திடீரென ஆண்மைக் குறைவுக்கு ஆளாகும் தீபன், ஆண்மையை மீட்டெடுக்கச் சகலவிதமான முயற்சியையும் எடுக்கிறான். பதின்ம வயதின் பாலியல் பற்றாக்குறையிலிருந்து பாலியல் உறவுகள் அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்துக்குப் போய்ச்சேர்ந்தது, அவனது […]

Read more

அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள்

அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள், தொகுப்பு ஆசிரியர் முனைவர் பெ.விஜயகுமார், பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், விலை 150ரூ. அயோத்திதாச பண்டிதர் 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட விமர்சனத்துடக்குள்ளான சொற்பொழிவுகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 8/8/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிஞ்சு மலர்கள்

பிஞ்சு மலர்கள், சி. வீராகு, சத்யா பதிப்பகம், விலை 120ரூ. இந்த நூலில் கதை வடிவில் 40 கட்டுரைகள் இடம்பெற்று இருக்கின்றன. அவை அனைத்தும் சிறுவர்கள் ஆர்வத்துடன் படிக்கும்வகையில் உள்ளன. அந்தக் கட்டுரைகள் சொல்லும் நீதி என்ன என்பது விளக்கப்பட்டு இருப்பதோடு, பொது அறிவுத் தகவல்களும் தந்து இருப்பதால் சிறுவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 12/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கொரோனா விளைவுகளும் விபரீதங்களும்

கொரோனா விளைவுகளும் விபரீதங்களும், என்.எஸ்.பிரதாப் சந்திரன், இன்சுவை பதிப்பகம், விலை 70ரூ. ஏற்கெனவே உலகில் பேரழிவை ஏற்படுத்திய தொற்றுநோய்கள் பற்றிய விளக்கங்களுடன், தற்போது உலகை உலுக்கிக் கொண்டு இருக்கும் கொரோனா நோய் எவ்வாறு பரவியது? அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன? கொரோனாவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?  இதை அரசியல்வாதிகள் கையாண்ட விதம், அரசுகள் செய்யத் தவறியவை ஆகிய அனைத்தும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 12/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

வாழ்வே ஒரு மந்திரம்

வாழ்வே ஒரு மந்திரம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.280, விலை ரூ.260. ஒரு நூறு சமயக் கிரந்தங்களையும், அவற்றிற்கான ஓராயிரம் வியாக்கியானங்களையும் வாசிக்கவும் யோசிக்கவும் எங்களுக்கு நேரமில்லை; ஆனால் அவற்றிலிருந்து வடித்தெடுத்த சாரத்தை யாராவது கொடுத்தால் பருகத் தயார் என்ற நிலையில்தான் இன்று பெரும்பாலானவர்கள் உள்ளனர். அத்தகையோரின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளிவந்துள்ள தகவல் திரட்டுதான், இந்த நூல். திருமந்திர கருத்துகளை மையமாகக் கொண்டு இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.  எட்டு தலைப்புகளில் ஏராளமான […]

Read more

அசோகர்

அசோகர், ஒரு பேரரசின் வாழ்வும் பண்டைய இந்தியாவின் வரலாறும், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.272, விலை ரூ.300. பேரரசர் அசோகரின் வரலாறு, ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது.   ‘அரியணை என்னுடையது என்றால் கடவுள்கள் அதை எனக்கு எப்படியாவது சொந்தமாக்கட்டும்’ என்று அறிவித்த அசோகர், பின்னாளில் தனது சகோதரர்களைக் கொன்று விட்டுதான் அரியணை ஏறினார் என்பதை பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அரச பதவிக்கு வந்தவுடனேயே தனது வன்முறை ஆட்டத்தை அசோகர் தொடங்கிவிட்டதாக அசோகாவதனம் குறிப்பிடுகிறது. கையில் அகப்பட்ட அப்பாவிகளை விதவிதமாக வதைத்துக் கொல்வதற்காக கிரிகா என்பவனையும் […]

Read more

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம்

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.664, விலை ரூ.560. ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய நூல். ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் எவ்வாறு செயல்படுகின்றன? செயல்பாடுகளுக்கு யார் பொறுப்பு? அதற்கான விதிமுறைகள் எவை? ஒரு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு செலவழிக்க வேண்டும்? என்பன போன்ற பல விவரங்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.  உதாரணமாக ஒரு பணிக்கான ஒப்பந்தம் எவ்வாறு போடப்படுகிறது? என்பதை விளக்க அதற்கான […]

Read more

இராம காவியம்

இராம காவியம், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக்.368, விலை ரூ. 113. தமிழின் பெருங்காவியமான கம்ப ராமாயணத்தை சற்று சுருக்கமாக, உரைநடை வடிவில் எழுதியுள்ளார் கிருபானந்த வாரியார்.  அயோத்தி மாநகரை ஆண்டு வந்த தசரத சக்கரவர்த்தி, தமது குலகுருவான வசிஷ்ட முனிவரிடம், தனக்கு மகப்பேறு இல்லாத குறையைக் கூறி வருந்த, வசிஷ்டர் அவர் புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும் என்று கூற, அவ்வாறே தசரதர் யாகம் செய்ய, தசரதருக்குக் குமாரராக இராமர் பிறந்தார் என்று இராமரின்பிறப்பை […]

Read more

பண்டைத் தடயம்

பண்டைத் தடயம், பதிப்பாசிரியர்கள்: நடன.காசிநாதன், மா.சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், பக்.320, விலை ரூ275. தமிழகத்தின் வடபகுதியும், ஆந்திர மாநிலத்தின் சிறு பகுதியும் இணைந்த பகுதிதான் தொண்டை நாடு. ஜவ்வாது மலை, வேங்கடமலை, வங்கக்கடல், பெண்ணையாறு ஆகிய நான்கும் தொண்டை நாட்டின் எல்லைகள். அப்பர், சுந்தரர், வள்ளலார் மற்றும் முதல் மூன்று ஆழ்வார்கள் முதலிய அருளாளர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் தோன்றிய பெருமைக்குரியது இந்நாடு. அத்தகைய தொண்டை மண்டலத்தின் தொன்மைச் சிறப்புகளையும், வரலாற்று உண்மைகளையும், அங்கு கிடைத்த தடயங்களையும் இந்நூல் பறை சாற்றுகிறது.  அதுமட்டுமல்ல, திருமாணிக்குழி-சோழர்கால அளவுகோல், […]

Read more

தியாகம் விளைந்த செம்புலம்

தியாகம் விளைந்த செம்புலம், பொன்முடி. சி.சுப்பையன், விஜயா பதிப்பகம், பக். 320, விலை ரூ.250. கோவைக்கு கிழக்கே இருபது கல் தொலைவில் நெடுஞ்சாலைகளின் தீண்டல் எதற்கும் சிக்காமல், உள் ஒதுங்கியிருக்கும் ஊர் அது. அங்கு பழமையும், புதுமையும் கலந்த ஒரு பண்பாடு உயிர்த் துடிப்போடு இன்றும் இருக்கிறது. கம்பும், நெல்லும், தானியங்களும் மட்டுமல்லாது, உழைப்பும் விளைந்த பூமி கண்ணம்பாளையம் என்பதை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அறிய முடிகிறது. பெரியவர்கள் பலரும் தந்த தகவல்களோடு ஊரில் தனது அனுபவங்களையும் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.  ஊரின் வரலாற்றை காலவரையறையோடு […]

Read more
1 2 3 8