உலகப் புகழ் பெற்ற நாவல்கள்

உலகப் புகழ் பெற்ற நாவல்கள், முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலைரூ.700 உலகப் புகழ் பெற்ற ஆறு நாவல்களின் தொகுப்பு நுால். ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய அம்மா, லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா, தாஸ்தாவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும், அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஜூனியர் வாடாமல்லிகை, எமிலி ஜோலா எழுதிய நானா, ஜேம்ஸ் ஆஸ்டின் எழுதிய ஐந்து சகோதரிகள் ஆகிய நாவல்கள் ஒரே தொகுப்பில் அடக்கப்பட்டுள்ளன. எளிய நடையில் நாவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய மிகச் […]

Read more

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி, சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 786, விலை 800ரூ. தமிழில் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, வீரமாமுனிவரின் சதுரகராதி எனத் தொடர்ச்சியாக இதுவரை எண்ணற்ற அகராதிகள் வெளிவந்திருக்கின்றன. பின்னர், தமிழகத்திலேயே சில குறிப்பிட்ட வட்டாரங்களுக்கே உரியதான வழக்குச் சொல் அகராதிகளும் வரத் தொடங்கின. இவற்றைத் தொகுப்பது என்பதே பெரும் உழைப்பையும் நேரத்தையும் வேண்டுகிற மிகுந்த அக்கறையுடன் கூடிய பணி. தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி என்ற இந்த நூலில் நாஞ்சில் நாடு, நெல்லை, செட்டிநாடு, நடுநாடு, தஞ்சை, கொங்கு, மதுரை, முகவை, பரதவர் […]

Read more

சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி

சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி (ராஜாஜி 143-ஆவது பிறந்த நாள் வெளியீடு), ரெ.தே.பெ.சுப்ரமணியன், பக்.80, விலை குறிப்பிடப்படவில்லை. ‘இந்தியத் தலைவர்களிலேயே அதிகம் தவறாக அறியப்பட்டவர் ராஜாஜி’ என காந்தியடிகளே கூறுமளவுக்கு ராஜாஜிக்கு எதிரான அவதூறுகள் வலுப்பெற்றிருந்தன. ராஜாஜியின் கல்விக் கொள்கையை ‘குலக் கல்வித் திட்டம்’ என அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரசாரங்கள் வலிமையுடன் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்தக் கல்வித் திட்ட வரைவில் எங்கேயும் அப்படிப்பட்ட உணர்வு இல்லை என்பதே உண்மை. எத்தொழிலும் இழிவானதல்ல என்ற எண்ணத்தை சமுதாயத்தில் விதைக்க வேண்டும் என்று நினைத்த ராஜாஜிக்கு கிடைத்தது […]

Read more

கண்ணதாசன் ஓர் அமுதசுரபி

கண்ணதாசன் ஓர் அமுதசுரபி, தூத்துக்குடி கலைமணி, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், விலைரூ.200 மரபுச்சிந்தனைகளைப் புதுமையாக ஆக்கியதும், புதிய சிந்தனைகளை மரபுகளாக்கியதும், கண்ணதாசனின் இலக்கிய சாதனை. திரைப்பாடல் பின்னணியில் இலக்கண, இலக்கிய அம்சங்களின் நுட்பங்களை, முதலிரவுப் பாடலில் தேனைப் பார்த்தேன், நினைத்தேன், அழைத்தேன், துடித்தேன், ரசித்தேன், அணைத்தேன் என 18 வகைகளில் காட்டும் ஜாலங்கள் இன்றும் ரசனைக்குரியன. அந்த வகையில் 21 பிரிவுகளில் இலக்கிய, இலக்கணத்தை முன்னணியில் கொண்டு வந்து காட்டிஉள்ளது. – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன் நன்றி: தினமலர், 13/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%bf/ […]

Read more

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், சாத்தன்குளம் அ.இராகவன், அழகு பதிப்பகம், பக்.224, விலை ரூ.220. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தமிழர் நாகரிகத்தை எடுத்தியம்பும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த ஆய்வு நூல் இது. திருநெல்வேலி அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் பறம்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வே இந்தியாவின் முதல் அகழாய்வாகக் கருதப்படுகிறது. 1876- ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சாகோர், ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தாழிகள், மனித எலும்புகள், மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் உள்ளிட்டவை பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நாகரிகத்தை […]

Read more

பிரபஞ்சன் சில நினைவுகள்

பிரபஞ்சன் சில நினைவுகள், ராஜ்ஜா, இனிய நந்தவனம் பதிப்பகம், பக்.96, விலை ரூ.100. புதுச்சேரியைச் சேர்ந்த நூலாசிரியர், அதே ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சனுடன் பழகிய அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. புதுச்சேரி செட்டித் தெருவில் முதன்முதலாக பிரபஞ்சனைப் பார்த்தது முதல் பிரபஞ்சன் மறைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் சந்தித்தது வரை இந்நூலில் கூறப்பட்டுள்ளன. ‘எமக்குத் தொழில் எழுத்து’ என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர் பிரபஞ்சன். அதிலும் கூட படைப்பிலக்கியவாதியாக வாழவே அவர் ஆசைப்பட்டிருக்கிறார். எழுத்து தொடர்பான இதழியல் பணிகள்கூட, அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. […]

Read more

வாழ்வரசி

வாழ்வரசி, அப்துற் – றஹீம், யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், விலைரூ.140 சீன எழுத்தாளர் படைத்த நாவலின் தமிழாக்கம் தான் வாழ்வரசி. மூன்று தலைமுறைக்கு உட்பட்ட சீன மருத்துவத்தையும், மக்கள் வாழ்வியலையும் உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கிறது. வாங் – குங் என்னும் மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த சீன மருத்துவருக்கும், அவரது பேத்தியான சியோ – சென் என்னும் மருத்துவருக்கும் இடையே உள்ள இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது. பழைமையும், புதுமையும் கைகோர்த்து நிற்பதாக நாவல் நிறைவடைகிறது. சீனாவில் படைப்பிலக்கியம் எவ்வாறு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. எளிய தமிழ் நடையில் […]

Read more

தமிழ்க் கவிதையியல்

தமிழ்க் கவிதையியல், தொகுப்பாசிரியர்: இரா.சம்பத், சாகித்திய அகாதெமி, பக்.608, விலை ரூ.440. சாகித்திய அகாதெமி சார்பில் “தமிழ்க் கவிதையியலும் யாப்பும்’ என்ற பொருண்மையில் நடந்த இரண்டு நாள் கருத்தரங்கில் வ.ஞானசுந்தரம், தமிழவன், செ.வை.சண்முகம், தி.இராஜரெத்தினம், ப.திருஞானசம்பந்தம் போன்ற ஆய்வறிஞர்களால் முன்வைக்கப்பட்ட 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  செய்யுள் இயற்றுவதற்கு அடிப்படையான யாப்பிலக்கணத்தை தமிழ், கன்னடம் ஆகிய இரு திராவிட மொழிகளுடன் ஒப்பிடுகிறது ஒரு கட்டுரை. யாப்பின் அடிப்படையில் கவிதை எழுதுவதற்கு சொல் வளம் அவசியம். அந்தச் சொல் வளத்தைப் பெருக்குவதற்கு நிகண்டுகளைக் கற்பதும் அவசியம். […]

Read more

பாரதியின் தசாவதாரம்

பாரதியின் தசாவதாரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு-2021), நெல்லை சு.முத்து, கங்கை புத்தக நிலையம், பக்.212, விலை ரூ.160. பாரதியாரை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அதற்குக் காரணம் பாரதியின் பன்முகத்தன்மை. ஆன்மிக வாதிகளுக்கு அவர் எழுதிய கவிதைகள் பிடிக்கும். தேசபக்தி உடையவர்களுக்கும் பாரதி ஒரு முன்மாதிரி. புரட்சிகர சிந்தனை உடையவர்களுக்கும் பிடித்தமான கவிதைகளைப் பாரதி படைத்திருக்கிறார். பாரதியின் வழித்தோன்றல்களாக பல படைப்பாளிகள் தமிழில் தோன்றி தடம் பதித்துச் சென்றிருக்கின்றனர். புரட்சிகர சிந்தனைக்கு பாரதிதாசன், தேசபக்திக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, சக்தி வழிபாட்டுக்கு ச.து.சுப்ரமணிய யோகியார், […]

Read more

யானைகளின் வருகை பாகம் – 2

யானைகளின் வருகை பாகம் – 2, கா.சு.வேலாயுதம், வெளியீடு: கதை வட்டம், விலைரூ.220 யானை – மனித மோதலை பரிவுடன் ஆராய்ந்து தகவல்களைத் திரட்டித் தந்திருக்கும் நுால். யானைகளின் வாழ்விடம் மற்றும் வாழ்வியல் சார்ந்து ஏற்பட்டுள்ள இடர்களை, களையும் நோக்கில் முனைப்புடன் எழுதப்பட்டுள்ளது. இந்து தமிழ் திசை இணைய இதழில், தொடராக வெளிவந்தது. யானைகள் வாழ்வியல் குறித்து ஏற்கனவே வெளியான நுாலின் இரண்டாம் பாகமாக மலர்ந்துள்ளது. நுாலில், ‘இளைப்பாறுதலுக்கு ஒரு வைதேகி’ எனத் துவங்கி, ‘கதி கலங்க வைக்கும் பவானிசாகர் புதைசேறு’ என்பது வரை, […]

Read more
1 6 7 8