இரக்கம் கொள்வோம் விட்டுக்கொடுப்போம்

இரக்கம் கொள்வோம் விட்டுக்கொடுப்போம், மா.ராமச்சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 130ரூ. வாழ்க்கையில் உச்சம் தொட நினைக்கும் இளைஞர்கள் உள்பட அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் படிக்கட்டுகளாக 48 அருமையான கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்டவை என்றாலும், அவை சுவையுடன் தரப்பட்டுள்ளதால் அலுப்புத் தட்டாமல் படிக்க முடிகிறது. எதிர்மறைச் சிந்தனைக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற அவரது கருத்து அனைத்து கட்டுரை தலைப்புகளிலும் அப்படியே இடம் பிடித்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 24/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி.பாலசர்மா, நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விளக்கமான பதில்கள் புராணங்களில் இருந்தும், வேதங்களில் இருந்தும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. கடவுள், கோவில், வழிபாட்டு முறைகள், சம்பிரதாயங்கள், விசேஷங்கள், பாவம், புண்ணியம், தானம், விதி, புணூல் போன்றவை குறித்து எதிர்மறையாக எழுப்பப்படும் கேள்விகளுக்கும் கூட தெளிவாக புரிந்துகொள்ளும் விதமாக விளக்கங்கள் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆன்மிகம் பற்றி இந்துக்கள் அவசியம் அறிந்துகெள்ளவேண்டிய அறிவுப்பூர்வ தகவல்களும் நூலில் விளக்கப்பட்டு இருக்கிறது. பொருள் பொதிந்த பதில்கள் சிந்தனையையும் தூண்டுகின்றன. நூலைப் போலவே […]

Read more

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம், எழில்மதி, மணிமேகலை பிரசுரம், பக்.140, விலை 55ரூ. குறள் பாக்கள் மூலம் குடியின் தீமைகளை விளக்குகிறார் நுாலாசிரியர். முதன் முதலில் இந்நுால் வெளிவந்த போது, ‘மது விலக்கில் முழு மூச்சுடன் இறங்கியுள்ள நம் மாநில அரசு இந்நுாலை வெளியிடுவது, நாட்டு மக்களுக்கு நலம் பயப்பதாக அமையும்’ என, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் சொன்னார். மது பிரச்னைக்குரிய எல்லா அம்சங்களையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ளமை பாராட்டிற்கும், சிறப்பிற்கும் உரியது. குடிகாரர்களை இந்த நுால் திருத்தும்; நல்வழி காட்டும் என்பதில் […]

Read more

அபாகஸ்

அபாகஸ் சுலபமாக கணிதம் கற்கும் இரகசியம், வசந்தி ரங்கராஜன், நர்மதா வெளியீடு, விலை 170ரூ. ‘ஜெல்ஸ்’ அபாகஸ் பயிற்சி நிலையத்தின் இயக்குநரான இந்நூலாசிரியர், அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து, இந்தியாவில் கல்வித் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய சிறந்த கல்வியாளர். தவிர, பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றியவர். இவர் இந்தியாவில் 1997-ஆம் ஆண்டு முதன் முதலாக அபாகஸ் கல்வியை அறிமுகப்படுத்தியவர். இன்று அபாகஸ் பயிற்சி நிறுவனங்கள் பல இடங்களில் பரவி, இக்கல்வி முறையைப் பற்றிப் பலரும் அறிந்துள்ளனர். அபாகஸ் என்பது நான்கு சட்டங்கள் பொருத்தப்பட்ட […]

Read more

மூங்கில் கனவுகள்

மூங்கில் கனவுகள், கி.பத்மநாபன், வாசகன் பதிப்பகம், பக்.112, விலை 80ரூ. ந்நுாலில் வெளியாகியுள்ள கவிதை வரிகள், முற்றிலும் பெண்களின் பெருமையையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகின்றன. ‘அடகு’ என்ற கவிதையில் நடுத்தர குடும்பங்களின் இயலாமைகளை அருமையாகச் சொல்லி, உள்ளத்தை நெகிழ வைக்கிறார். மலைப்பாம்பால் வளைக்கப்பட்ட உயிரினமாய், நடுத்தர குடும்பங்கள் சிக்கி திணறும் அவலத்தை அப்பட்டமாய் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இரைப்பை – கருப்பை – இடைவெளி என்கிற சிந்தனை, இதுவரை நாம் படித்த உலக பெருங்கவிஞர்களின் கவிதைகளில் கூட படித்திராத ஒன்று. நன்றி: தினமலர், 28/10/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

பேட்டை

பேட்டை, தமிழ்ப்பிரியா, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், பக். 352, விலை 390ரூ. கடந்த, 1735ம் ஆண்டு வாக்கில் மதராஸ் ராஜதானியின், 14வது கவர்னர், ‘மாடர்ன் பிட்’ என்பவரது முயற்சியால் பல நெசவாளர் குடும்பங்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு, சென்னை யில் இப்போது சிந்தாதிரிப்பேட்டை என அழைக்கப்படும் பகுதியில் குடியமர்த்தப்பட்டன. இந்த நெசவாளர்கள், ‘காலிகோ பிராண்ட்’ வகை துணிகளை கலை நேர்த்தியுடன் நெசவு செய்து தயாரிப்பதில் நிபுணர்கள். இந்தத் துணிக்கு அப்போது லண்டன் மாநகரில் ஏக டிமாண்டு. இந்த நெசவாளர்கள் முதலில் சின்ன சின்ன தறிகளை […]

Read more

தமிழ்ச் சான்றோர்கள்

தமிழ்ச் சான்றோர்கள், ஆர். குழந்தை அருள், செந்தமிழ் பதிப்பகம், பக். 176, விலை 160ரூ. உலக மனித இனத்திற்கே முதல் இனம் தமிழ் இனம். உலக மொழிகளுக்கெல்லாம் முதல் தொன்மையான மொழி நம் தமிழ் மொழி என பெருமைப்பட்டுக் கொண்டாலும், அந்த மொழி வளர்ச்சிக்கு தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் வலிமை குறைவே என்றால் அது மிகையாகாது. தமிழ்ச் சான்றோர்கள் எனும் இந்த நுாலில், 21 தமிழ் அறிஞர்களின் வரலாறும், தமிழ் வளர்க்க அவர்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மகா வித்வான் […]

Read more

ஒரு மிடறு பச்சைக் குருதி

ஒரு மிடறு பச்சைக் குருதி, கலைச்சித்தன், விஜயா பதிப்பகம், பக். 136, விலை 120ரூ. அடர் காட்டுக்குள் சலசலத்து ஓடும் சிற்றோடை எழில் வாய்ந்தது மட்டுமல்ல, பிரதிபலிக்கும் கண்ணாடி கவிதை என்பர். ‘முற்றிய பாண்டத்தை பிரித்தெடுக்கிறான்… அறுகிறது மண்ணின் தொப்புள்கொடி. வெம்மை தகிக்கும் நாற்சுவருக்குள் சுட்டெடுக்கிறான்… எரிதழல் கொப்பளிக்கும் இசை தின்ற மண் பொதி கடமென்று சமைகிறது’ என்ற கவிதை, இசை தின்ற மண் பொதி கடமென கவிஞரால் உருவாகின்ற அற்புதத்தை விதைக்கிறது. நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026708.html இந்தப் […]

Read more

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல், பேரா. க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 148, விலை 120ரூ. அவ்வையாரின் விநாயகர் அகவல் இசை நயம் மிக்க தோத்திரப் பாடலாகவும், யோக ரகசியங்கள் பொதிந்த சாத்திர நுாலாகவும் உள்ளது. 72 வரிகள் கொண்ட அகவற்பாவுக்கு, ஆசிரியர் பொழிப்புரை, விரிவுரை இரண்டையும் அழகுற அமைத்துள்ளார். அகவுதல் என்றால் அழைத்தல் என்ற பொருளும் உண்டு. இறுதி அடியில், ‘வித்தக விநாயக, உன் மணம் மிக்க திருவடியில் சரண் புகுகிறேன்’ என்று அகவல் முடிகிறது. முதல் இரண்டு வரிகளில் விநாயகரின் திருவடியைச் சிறப்பித்து, இறுதி […]

Read more

தாம்பிரவன்னி மகத்துவம்

தாம்பிரவன்னி மகத்துவம், புலவர் வே.மகாதேவன், இந்து கலாசாரம் மற்றம் இந்தியவியல் ஆய்வு மையம், பக். 121. தாமிரபரணி வரலாற்றை விளக்கும் நுால்களில் இடம்பெறாத சில சிறப்புச் செய்திகள், இந்நுாலாசிரியரால் சொல்லப்பட்டுள்ளது பாராட்டிற்குரியவை. கன்னடியன் கால்வாய் பற்றி கூறியுள்ள வரலாற்று செய்தி (பக்., 50 – 55) முக்கியத்துவம் பெறுகிறது. தோழி தாமிரபரணி என்பதையும், அகத்திய முனிவர் விமானத்தில் பயணித்ததையும், சகலகோடித் தீர்த்தம் தாமிரபரணி என்பதையும் (பக்., 69), இந்த நதியின் மகத்துவத்தை பட்டியலிடுகிறது இந்நுால் நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more
1 261 262 263 264 265 505