குறள் இனிது

குறள் இனிது, சோமவீரப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 225ரூ. சிங்கத்துடன் நடப்பது எப்படி? தமிழின் மகத்தான நூலான திருக்குறள் காட்டும் வழியைப் பலரும் பலவிதங்களில் எழுதினாலும் இன்னும் பல வாசல்களை அது திறந்துகொண்டே இருக்கும். திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறார் சோம வீரப்பன். ‘இந்து தமிழ்’ நாளிதழின் வணிக வீதி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் நன்றி: தி இந்து,20/10/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027269.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வீழ்வேன் என்று நினைத்தாயோ?, மாலன், கவிதா பதிப்பகம், விலை 100ரூ. சிங்கப்பூர் குடிசைகள் எப்படி அடுக்குமாடி வீடுகள் ஆயின? சிங்கப்பூரை லீ குவான் யூ கட்டியமைத்த கதையை 128 பக்கங்களில் ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்ற நூலில் சுருக்கமாக எழுதியிருக்கிறார் மூத்தப் பத்திரிகையாளரான மாலன். குடிசைகளில் இருந்த பெரும்பான்மை சிங்கப்பூர்வாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள் எப்படி சொந்தமாயின எனும் அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதி இது. ‘‘லீ குவான் யூவின் கனவுதான் என்ன? ஒரு தேசம் உறுதியாக நிற்க வேண்டுமானால் அதில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக […]

Read more

புதர் மூடிய ஒருவன்

புதர் மூடிய ஒருவன், ஜி.காசிராஜன், நூல் வனம் பதிப்பகம், விலை 380ரூ. பரணிவாசம்: நினைவில் கரிசல் மண் காசிராஜன், தாமிரபரணி தொடங்கும் பாபநாசத்திலுள்ள கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியர். அவருக்குள் இருப்பதோ கரிசல்பட்டி கிராம விவசாயி. வண்ணதாசன் முன்னுரையில் சொல்வதுபோல கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்துவிட்ட, மீண்டும் கிராமத்துக்குத் திரும்ப நினைக்கிற ஆனால், திரும்ப முடியாத ஒருவனின் குரலாகக் காசிராஜனின் குரல் இருக்கிறது. கிராமத்து விவசாயிகளான தனது பெற்றோர்களின் ஆசைக்கிணங்கி படித்து அரசு வேலைக்கு வந்ததாகச் சொல்லும் காசிராஜனின் எழுத்துகள் சாத்தூர் அருகே உள்ள கிராமத்தையே […]

Read more

முன்னத்தி ஏர்

முன்னத்தி ஏர், பாமயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 130ரூ. வேளாண் வழிகாட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘நிலமும் வளமும்’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. இயற்கை வேளாண்மையைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பாமயனின் இக்கட்டுரைகள், முன்னோடிகள் உருவாக்கிய இயற்கை வேளாண் நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது. முன்னோடிகளின் கடும் உழைப்பையும் தியாகத்தையும் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் பாமயன். நன்றி: தி இந்து,24/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027150.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

அகமும் முகமும்

அகமும் முகமும், வே.தி.அரசு, திலகவதி பதிப்பகம், பக். 132, விலை 100ரூ. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற பழைய பாடல், கணவன் – மனைவி இருவரும் ஒத்தக் கருத்துடன் வாழ வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறது. அகமும், முகமும் என்ற நுால், வே.தி.அரசு தன் சொந்த அனுபவத்தைக் கடிதம் மூலம் நுால் வடிவம் கொடுத்துள்ளார். பிரிந்து வாழும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார். இரு மனம் இணைவது தான் திருமணம். ஒரு மனதில் விரிசல் ஏற்பட்டால், […]

Read more

தீந்தமிழ்த் திறவுகோல்

தீந்தமிழ்த் திறவுகோல், தி.மு.அப்துல்காதர்,வே.பதுமனார், எல்.சி.குப்புசாமி, வேலூர் தமிழ்ச் சங்கம் அறக்கட்டளை, பக். 60, விலை 50ரூ- எல்லா மொழிகளுக்கும் முதன்மையாக அகரம் உள்ளது. அந்த அகர எழுத்தின் அமைப்பே, எல்லா மொழிகளின் அமைப்புக்கும் மூலமாகும். தமிழ் எழுத்து வரிசை அறிதல், எழுத்து வகைகள், ‘ண – ந – ன’ பயன்பாடு அறிதல், ‘ல – ழ – ள, ர – ற’ வேறுபாடு அறிதல், வல்லினம் மிகும் – வல்லினம் மிகா இடங்கள் அறிதல். சொற்பிழை திருத்தம், மரபுப் பெயர்கள் அறிதல், […]

Read more

உனக்கும் ஓர் இடம் உண்டு

உனக்கும் ஓர் இடம் உண்டு. கவி.முருகபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 80, விலை 100ரூ. தனி மனித முன்னேற்றத்திற்கும், சமூக மேம்பாட்டிற்கும், மனித வளம் மிக முக்கியம் என்பதை எடுத்துரைத்துள்ள ஆசிரியர், அந்த வளத்தை சரியாக பயன்படுத்த உரிய பயிற்சிகள் தேவை என்கிறார். பயிற்சித் துறையில், பல ஆண்டு அனுபவம் உள்ள இந்நுாலின் ஆசிரியர், தனக்கே உரிய பாணியில், தன்னம்பிக்கை பற்றியும், வித்தியாசமான சிந்தனை பற்றியும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். வெறும் கட்டுரையாக இல்லாமல், பல உதாரணங்கள், மெய் […]

Read more

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரும், சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவருமான மனோன்மணியம் சுந்தரனாரை பற்றிய நூல் இது. அவரது இளமைக்காலம் மற்றும் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளுடன், சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் கவிதை நாடகம் குறித்தும் சிறப்பாக விவரித்துள்ளார் ஆசிரியர். தனது அறிவுத்திறமையால் சுவாமி விவேகானந்தருடன் விவாதம் நடத்தி அவரை தனது நண்பராக்கிய சுந்தரனாரின் திறமையும், தமிழை அன்னையாக கருதிய அவரது மாண்பும் வியக்க வைக்கிறது. பாரதிதாசன், கவிமணி, […]

Read more

ஓடு பையா ஓடு

ஓடு பையா ஓடு, எஸ்.இளங்கோ, மேன்மை பதிப்பகம், விலை 100ரூ. இன்றைய குழந்தைகள்தான் நாளைய உலகின் தூண்கள். அந்த குழந்தைகள் இன்று அனுபவித்து வரும் போராட்டங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட, உலக சினிமாக்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. இந்த புத்தகம் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழந்தைகளின் போராட்டங்களை கண்முன் நிறுத்துகின்றார் ஆசிரியர். தொகுக்கப்பட்டுள்ள 20 சினிமாக்களும் நம்மிடம் எழுப்பும் கேள்விகள் பல. புத்தகத்தை படிக்கும்போதே, அந்தந்த சினிமாக்களை நேரல் பார்க்கும் உணர்வு ஏற்படுவது நிஜம். நன்றி: தினத்தந்தி, 24/10/2018. இந்தப் […]

Read more

பேரிடர்களை எதிர்கொள்வோம்

பேரிடர்களை எதிர்கொள்வோம், ச.வைரவராஜன், சங்கமித்ரா பதிப்பகம், விலை 250ரூ. அறிவியல் துணையுடன் மனிதன் உலகையே ஆண்டு வந்தாலும் இயற்கையை மட்டும் அவனால் வெல்ல முடியவில்லை. மானுட சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே அவ்வப்போது நேரிடும் இயற்கை பேரிடர்கள் இந்த உண்மையை உரக்கச்சொல்லிவிடுகின்றன. நிலநடுக்கம், புயல், சூறாவளி, சுனாமி, காட்டுத்தீ என மனிதனை சோதிக்கும் இடர்பாடுகள் ஏராளம். இத்தகைய பேரிடர்கள் நேரிடுவதை தடுக்க முடியாவிட்டாலும், அவற்றில் இருந்து சமயோஜிதமாக தப்பிக்க முடியும். அதற்கான வழிகாட்டிதான் இந்த நூல். மனிதனை அச்சுறுத்தும் ஒவ்வொரு பேரிடருக்குமான காரணம், அவற்றின் […]

Read more
1 260 261 262 263 264 505