எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 100ரூ. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும்போது குடும்பம் எனும் கூடு கலையாமல் இருக்கும். கலகலப்பாகவும் இருக்கும். அப்படியின்றி புரிதல் கோளாறினால் பிரிதல் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், இல்லறம் நல்லறமாக இருப்பதற்கான எளிய வழிகளை இதமுறச் சொல்லும் நூல். மணவாழ்க்கை மணக்க விரும்புவோர் படிக்க வேண்டிய பாடம். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026367.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பாரதி  யார்?

பாரதி  யார்?, தொகுப்பாசிரியர்: டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், பக்.320, விலை ரூ.80. பாரதி – யார்? என்ற இந்தப் புத்தகம் ஓர் அரிய புத்தகம் என்றால் அது மிகையே அல்ல. பாரதி பற்றி அவருடன் மிக நெருக்கமாகப் பழகியவர்கள் முதல், அவருடைய சம காலத்தவர், பிற்கால அறிஞர்கள், நண்பர்கள், பாரதி அன்பர்கள், மகாகவி பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பாரதியை நேரில் அறிந்தவர்களின் கூற்றுகளும், அவரது எழுத்து வாயிலாக தரிசித்தோரின் உணர்ச்சியும் எழுச்சியும் அளிக்கத் தக்க […]

Read more

அங்கீகாரம் (எனது வாழ்க்கை வரலாறு)

அங்கீகாரம் (எனது வாழ்க்கை வரலாறு), பி.ஆர்.துரை, சந்திரிகா பதிப்பகம், பக்-240, விலை ரூ.150. ஏழை பிராமணக் குடும்பத்தில் 12-ஆவது குழந்தையாகப் பிறந்து, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, ஒன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி, 7-ஆம் வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, தன் குரல் வளம், நகைச்சுவைத் திறன், கடின உழைப்பு ஆகியவற்றால் வாழ்வில் உயர்ந்த நாடகக் கலைஞரான நூலாசிரியரின் வாழ்க்கை வரலாற்று நூல் இது. இந்நூலின் மூலம், இவரது வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி, 60 ஆண்டுகளுக்கு முன் ஊர் ஊராகச் சென்று நாடகங்கள் நடத்திய […]

Read more

சட்டத்தால் யுத்தம் செய்

சட்டத்தால் யுத்தம் செய்,  நீதிபதி கே.சந்துரு, விகடன் பிரசுரம், பக்.167, விலை ரூ.115. ஜனநாயக நாட்டின் முக்கிய அங்கமாக நீதிமன்றங்கள் விளங்குகின்றன. அந்த நீதிமன்றங்களின் கதவுகளை தங்கள் தரப்பு நியாயங்களுக்காகத் தட்டி போராடி வென்ற பெண்களின் வழக்குகள் குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த வழக்குகளைத் தொடுத்த பெண்களின் முயற்சி மற்றும் அவர்கள் தொடர்ந்த வழக்கின் மூலம் கிடைத்த தீர்ப்புகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஆணாதிக்கச் சிந்தனை பரவிக் கிடக்கும் இந்த சமூகச் சூழலில் உயர்பதவியில் இருக்கும் பெண்கள் தொடங்கி, விளிம்பு நிலையில் […]

Read more

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி (கல்வியில் சீர்திருத்தங்களும் சீனக் கிராமப்புற வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்),  டாங்பிங் ஹான்,  தமிழில்: நிழல்வண்ணன், அலைகள் வெளியீட்டகம், பக்.264, விலை ரூ.210. 1966 ஆம் ஆண்டு தொடங்கி பத்தாண்டுகள் நீடித்த சீன கலாசாரப் புரட்சியில் பலர் கொல்லப்பட்டனர். சீன பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டன என்பன போன்ற விமர்சனங்கள் உலகெங்கும் கூறப்படுகின்றன. கலாசாரப் புரட்சியால் சீனாவின் அரசியல், பொருளாதார, கலாசார வாழ்க்கை பின்னடைவைச் சந்தித்தது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியே 1981 இல் அறிவித்தது. கலாசாரப் புரட்சியைத் தொடங்கி நடத்தியவரான மா […]

Read more

சங்க இலக்கியங்களில் சமய நோக்கு

சங்க இலக்கியங்களில் சமய நோக்கு, கு.சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி,பக்.496, விலை ரூ.150. சென்னையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாட்டில் (மார்ச், 8-11) வெளியிடப்பட்ட நூல் இது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் காதல், வீரம், மக்கள் வாழ்வியல், நெறிமுறைகள், தொழில், வாணிகம், கலை முதலியவற்றை எடுத்துரைக்கின்றன. என்றாலும், அவற்றினூடே இறைவன் பற்றியும், இறை இயல்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. பிறவா யாக்கைப் பெரியோன்; (சிலம்பு),கறைமிடற்று அண்ணல் (புறம்), ஆதிரை முதல்வன்(பரிபாடல்), மழுவோன் நெடியோன் தலைவனாக(மதுரைக் காஞ்சி), "மறைமுது முதல்வன் (சிலம்பு), பிறங்கு […]

Read more

வெற்றி வாகை

வெற்றி வாகை(உங்கள் தொடர் வெற்றியின் திறவுகோல்), பரமன் பச்சைமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 150ரூ. வெற்றியை தக்க வைத்துக்கொள்ள ஏதேனும் விதிகள் உள்ளனவா? அப்படி வெற்றி விதிகள் எதுவும் இருந்தால், அவற்றை நம் வாழ்வில் சரியாகச் செலுத்தி வெற்றியாளனாக உச்சியில் நிற்கலாமே என்று நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக நிற்கும் இந்நூல். நன்றி: தினமணி, 13/1/2018.

Read more

குட்டி ஆகாயம்

குட்டி ஆகாயம் (சிறார் இதழ்), நிழல்,காந்தி, வானம் அமைப்பு, விலை 40ரூ. குழந்தைகள் உருவாக்கிய புத்தகம். இது குழந்தைகளுக்கான சிறுகதை தொகுப்புப் புத்தகம். இந்த புத்தகத்தை உருவாக்கியது முழுக்க முழுக்க குழந்தைகளே. ஒருவர் ஒரு வரி சொல்ல, அடுத்தவர் அடுத்த வரி சொல்ல குட்டி குட்டி சிறுகதைகளை உருவாக்கி, அதற்கான ஓவியங்களையும் அழகாக தீட்டி, இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது இதன் சிறப்பு. நன்றி: தினமணி, 13/1/2018.

Read more

மறவாதிரு மனமே

மறவாதிரு மனமே, தி.நெ.வள்ளிநாயகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. நீதிபதி, கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர் தி.நெ.வள்ளிநாயகம். அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “கனிந்தால் தானே கனி? துணிந்தால் தானே வழி! இருந்தால் தானே உயிர்! விளைந்தால் தானே பயிர்! “சுடச்சுடச் சங்கு வெண்மை தரும் உண்மை! தொடத் தொடக் கல்லும் சிலையாகும் தன்மை” என்பன போன்ற சுவையான கவிதைகள். “நரம்பு ஓடிந்தால் வீணை பாடாது” “சூரியனை ஒரே விரல் மறைத்திடுமே! காரிருளை ஒரே அகல் குறைத்திடுமே” […]

Read more

கல்கியின் யுகப்புரட்சி

கல்கியின் யுகப்புரட்சி, வானதி பதிப்பகம், விலை 140ரூ. “கல்கி” பத்திரிகையை 1942-ம் ஆண்டில் கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தியும், அவர் நண்பர் டி.சதாசிவமும் தொடங்கினார்கள். அதற்குமுன், “ஆனந்த விகடன்” பத்திரிகையின் பொறுப்பாசிரியராக “கல்கி” பணியாற்றினார். அப்போது, ஆனந்த விகடனில் அவர் எழுதிய பல கட்டுரைகள் இதுவரை நூல் வடிவம் பெறாமல் இருந்தன. அவற்றை “யுகப்புரட்சி” என்ற பெயரில் வானதி பதிப்பகத்தார் இப்போது புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. புன்சிரிப்புடன் வாசகர்களைப் படிக்கச் செய்வது கல்கியின் பாணி. அந்த பாணியை […]

Read more
1 314 315 316 317 318 505