வெளிச்சத்தின் நிறம் கருப்பு

வெளிச்சத்தின் நிறம் கருப்பு, முகில், சிக்ஸ்த்சென்ஸ் பக்ளிகேஷன்ஸ், பக். 316, விலை 240ரூ. அறிவியலுக்குள்ளும், பகுத்தறிவுக்குள் அடங்காத மர்மங்கள், இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத, அந்த மர்மங்களின் கதகதப்பை உணர செய்கிறது இப்புத்தகம். ‘திக் திக்’ விரும்புகளுக்கு, நிச்சயம் இந்நு’ல் பிடிக்கும். நன்றி: தினமலர், 16/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000013922.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

குந்தியின் குருசேத்திரம்

குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 352, விலை 275ரூ. தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவனை பெற்றாலும், வரத்தால் குழந்தை பெற்று, கணவன் இறந்தபோது, தன் சக்களத்தியை, உடன்கட்டை ஏற வைத்து, தன் பிள்ளைகளுக்கு, அரசாளும் உரிமை பெற போராடிய, பெண்ணரசியான குந்தியின் ராஜதந்திரங்களை, இந்நூல் விவரிக்கிறது. கர்ணன் இறந்த பின், அவனை அணைத்து கதறும், அவளின் தாய்மையையும் இந்நூல் சிறப்பாக படம் பிடிக்கிறது. நன்றி: தினமலர், 16/1/2018

Read more

அறிவோமா அறிவியல்

அறிவோமா அறிவியல், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், தாமரை பிரதர்ஸ் வெளியீடு, பக். 120, விலை 80ரூ. மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தில், முதுநிலை விஞ்ஞானியாக உள்ள, த.வி.வெங்கடேஸ்வரனின் கேள்வி – பதில் தொகுப்பு. ஏழு தலைப்புகளின் கீழ், பல்வேறு அறிவியல் கேள்விகளுக்கு, எளிமையாக பதில் அளித்திருக்கிறார். குழந்தைகள் இருக்கும் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினமலர், 16/1/2018.

Read more

மந்திரவாதி மன்னர்

மந்திரவாதி மன்னர், தமிழில் சரவணன் பார்த்தசாரதி, புக்ஸ் பார் சில்ரன், பக். 24, விலை 45ரூ. வண்ணப் படங்களால் நிறைந்துள்ள இந்த நூலில், மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி ஆகிய இரண்டு கதைகள் உள்ளன. சோவியத் கதை வரிசையில் இன்னுமொரு நூல். சோவியத் ஓவியர்களால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள், நூலுக்கு கூடுதல் அழகூட்டுகின்றன. குழந்தைகளை கவரும் வடிவமைப்பும் அழகு!. நன்றி: தினமலர், 16/1/2018.

Read more

கண்ணுறங்காக் காவல்

கண்ணுறங்காக் காவல் (ஒரு முடிவின் ஆரம்பம்), ஆங்கிலத்தில் ப.சிதம்பரம், தமிழில் ரமணன், கவிதா பதிப்பகம், விலை 300ரூ. காங்கிரஸ் கட்சியின் மத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூல். அவர் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழி பெயர்த்தவர் ரமணன். அரசியல், பொருளாதாரம், வெளியுறவு, கொள்கை, சட்டம் ஆகியவை பற்றி தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் சிதம்பரம். பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள தகவல்கள் ஜொலிக்கின்றன. ஜனநாயகத்தின் உண்மையான பொருளைக் கூறுவதால், இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க […]

Read more

23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள்

23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. சூரியன், சந்திரன் உள்ளிட்ட 9 கிரகங்களும், மனிதனின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரின் உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால் அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போய்விடும். மேலும் கிரக சுழற்சி காரணமாக கெடுதல்பலன்கள்தான் நடக்கும். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நமது முன்னோர்கள், தோஷ நிவர்த்தி தரும் ஆலயங்கள், பரிகார முறைகளை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருமணத் தடை, குழந்தைப் […]

Read more

மலர்களே கொஞ்சம் மலருங்கள்

மலர்களே கொஞ்சம் மலருங்கள், சிறுவர்களுக்கான அறிவியல் சிறுகதைகள், லூர்து எஸ்.ராஜ், வைகறை பதிப்பகம், விலை 40ரூ. பூக்கள் குறித்த அறிவியல் சார்ந்த விஷயங்கள், வித்தியாசமான கதை பாணியில் சொல்லப்படுகின்றன. மாணவர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து மணம் வீசும். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

வேட்கையில் எரியும் பெருங்காடு

வேட்கையில் எரியும் பெருங்காடு, பச்சியப்பன், இராசகுணா பதிப்பகம், விலை 150ரூ. இதயத்து உணர்வுகளை அனுபவத்தால் சொற்களாகச் செதுக்கி, வார்த்தைகளை வரிகளாக்கி எழுதப்பட்டிருக்கும் அழகான, ஆழமான கவிதைகள். படிக்கும்போது மனம் பறக்கிறது! பரபரக்கிறது! நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

அச்சத்தை அடித்து நொறுக்குவோம்

அச்சத்தை அடித்து நொறுக்குவோம், நந்தவனம் சந்திரசேகரன், இனியநந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. விடியலில் எழும்போதே வெல்வோம் என நினைத்தால் வெற்றிகள் உங்கள் வாசலில் வந்து நிற்கும். அறியாமையால் அச்சத்தை சுமந்து அந்தச் சுமையில் அழுந்திப்போகாமல், துணிந்து போராடி ஜெயித்திட, உள்ளுக்குள் இருக்கும் தன்னம்பிக்கைப் பொறியினை அடையாளம் காட்டும் நூல். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

தி.க.சி. திரைவிமர்சனங்கள்

தி.க.சி. திரைவிமர்சனங்கள், தொகுப்பாசிரியர் வே.முத்துக்குமார், ஆவாரம்பூ, விலை 40ரூ. முற்போக்கு இலக்கியவாதிகளின் வழிகாட்டியான தி.க.சி. தமிழிலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட ஆரம்பகால இதழ்களில் சினிமா விமர்சனங்களும் எழுதியிருக்கிறார். குறை, நிறைகளை கொஞ்சமும் தயங்காமல் சுட்டிக்காட்டி தனக்கே உரிய பாணியில் அவர் எழுதிய 13 விமர்சனங்களின் தொகுப்பு. நன்றி: குமுதம், 28/3/2018.

Read more
1 316 317 318 319 320 505