மறைந்து வரும் மரங்கள்

மறைந்து வரும் மரங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.116, விலை ரூ.100. உலக அளவில் வெப்பநிலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்று, மரங்களை வெட்டுவதும். நமதுநாட்டில் பல பாரம்பரிய மரங்கள் பல அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் மரங்களில் இலுப்பை, இலந்தை, மாவிலங்கம், சந்தன வேங்கை, தான்றி, மகிழம், கோங்கு, விளா, சரக்கொன்றை, கடுக்காய், மகாவில்வம், திருவோடு, பூவரசு, வெட்டிவேர், சந்தனம், நாவல், உருத்திராட்சம் உள்ளிட்ட 30 மரங்களைப் பற்றி நாம் அறியாத பல செய்திகள் இந்நூலில் இடம் […]

Read more

பெண் கல்விப் போராளி மலாலா

பெண் கல்விப் போராளி மலாலா, ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.208, விலை ரூ.180. மலாலா யூசப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரைச் சேர்ந்தவர். பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று தாலிபான் விதித்த தடையை மீறி பள்ளிக்குச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்யும் கொடூரச் செயல்களை குல்மகை என்ற புனைபெயரில் பிபிசியின் உருது வலைப்பதிவில் துணிச்சலாக எழுதினார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதினார். பள்ளிகளை தாலிபான்கள் தடை செய்த போதிலும், பள்ளி மாணவிகளை நச்சுப்புகையால் தாலிபான்கள் கொல்ல […]

Read more

உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?

உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?, உருவாக்கம் பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம், தமிழில் டி.கே.ரகுநாதன், அடையாளம் பதிப்பகம், விலை 40ரூ. நாம் அன்றாடம் விரும்பி அருந்தும் பானம் காபி. அதைக் குடிப்பது பொதுப் பழக்கமாகவும் நிர்பந்தமாகவும் ஆகியிருக்கிறது. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த நூல் நீங்கள் அருந்தும் ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு இருக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாக விவரிக்கிறது.‘ நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன்

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன், த.வி.வெங்கடேஸ்வரன், சி.இ.கருணாகரன், வ.சேதுராமன், ப.கு.ராஜன், அறிவியல் வெளியீடு, விலை 35ரூ. அறிவியல் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது இப்புத்தகம். ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் பற்றிய பல்வேறு அம்சங்களை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், அறிவியலாளர்களைக் கொண்டு, அறிவியல் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். அரசியல் கலக்காமல், கேள்வி பதில் வடிவத்தில், உள்ளதை உள்ளபடி தெரிவிப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பட்டினிப் புரட்சி

பட்டினிப் புரட்சி, பரிதி, விடியல் பதிப்பகம், விலை 450ரூ. புத்தகத்தின் பெயரைப் பார்த்தால் பட்டினியால் வாடும் மனிதர்களைப் பற்றியது என்ற எண்ணம் வருவது இயல்பு. ஆனால், உண்மையில் சமூகம், சுற்றுச்சூழல், உயிரியல் எனப் பல துறைகளில் இன்றிருக்கும் பிரச்சினைகளையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபத்தங்களையும் பற்றிப் பேசுகிறது இந்நூல். நம்முடன் வாழும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் முறையான உணவின்றித் தவிப்பதற்குக் காரணம், தாம் வாழும் சமூக அமைப்புதான் என்பதை அதிரும்படி உணர வைக்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

நான் உங்கள் ரசிகன்

நான் உங்கள் ரசிகன், மனோபாலா, சூரியன் பதிப்பகம், விலை 180ரூ. ‘குங்குமம்’ வார இதழில் வெளிவந்த இந்த சூப்பர் ஹிட் தொடர், திரையுலகில் கால் பதிக்க முற்படும் / பாடுபடும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை 200ரூ. எதை நம்புவது என்று தெரியாமல் எல்லா தரப்பையும் நம்பி, அனைத்து மருத்துவர்களையும் சந்தித்து சகல மருந்துகளையும் உட்கொண்டு மக்கள் வாழ்கின்றனர். இந்த அறியாமையை இந்நூல் போக்குகிறது. நன்றி: குங்குமம், 12/1/2018.  

Read more

தமிழ்நாட்டு நீதிமான்கள்

தமிழ்நாட்டு நீதிமான்கள், கோமல் அன்பரசன், சூரியன் பதிப்பகம், விலை 190ரூ. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறை வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பாக உள்ளது இந்த நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம்

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், காவ்யா பதிப்பகம், பக். 340, விலை 330ரூ. திருநெல்வேலியில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, புதுவையில் நாடகத் தமிழ் வளர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவரின் எழுத்து, இயக்கம், பேச்சு, மூச்சு என அனைத்து செயல்களும் நாடகத்தமிழில்தான் இருந்தன. அவரால், நாடகத்தமிழ் புத்துயிர் பெற்றது. அவரை தற்கால தலைமுறை புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 10/1/2018.

Read more

பன்முக நோக்கில் புறநாநூறு

பன்முக நோக்கில் புறநாநூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக்.252, விலை 160ரூ. மு.வ.,வின் செல்லப்பிள்ளை எனத்தகும் இரா.மோகன் எழுதியுள்ள இவ்வாய்வு நுால், புறநானுாற்றைப் பல்வேறு கோணங்களில் காட்டியுள்ளது. ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்நுாலில், 40 தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. சங்கச் சான்றோர்களின் ஆளுமைப் பண்புகள், புறநானுாற்றில் புதுமை, நீராதாரத்தின் அருமை, பண்டைத்தமிழர் மெய்யியல் திறம் எனப் பல்வேறு திசைகளில் ஆய்வு பரந்து விரிந்து செல்கிறது. மாசாத்தியார் காட்டும் மறக்குடி மங்கையர் மாண்பு, சான்றாண்மைக்கு ஆழி பெருஞ்சித்திரனார், உலகின் ஒப்பற்ற கவிஞர் அவ்வையார், […]

Read more
1 323 324 325 326 327 505