கோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும்

கோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும், ஆர். தங்கப்பாண்டியன், அகநி வெளியீடு, பக்.112, விலை 70ரூ. ஒரு நுாற்றாண்டு காலம் ஜீவித்திருந்த ஒரு கலையைப் பற்றியும், அதை இயக்கிய கலைஞர்கள் பற்றியும் ஆய்வு செய்து தமிழர்களுக்குத் தந்திருக்கிறார் ஆர்.தங்கபாண்டியன். கோமாளிப் பாத்திரம் நாடகத்திலும், தெருக்கூத்திலும் ஒரு முக்கியப் பாத்திரம். சிவபெருமானைச் சனி பிடிக்கும்போது, ஒரு கபால ஓடு, சிவபெருமானின் கையைப் கவ்விக் கொண்டது. சிவனுக்காகப் படைக்கப்பட்ட எல்லா உணவையும் அந்தக் கபால ஓடு சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். சிவபெருமானின் உணவை கபால ஓடு சாப்பிட்டதால், அவரால் எழுந்து […]

Read more

சொல்லடி சிவசக்தி

சொல்லடி சிவசக்தி, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 272, விலை 200ரூ. இது ஒரு வித்தியாசமான பக்தி நுால். அம்பிகையோடு நுாலாசிரியரே உரையாடுவது போன்று அமைந்திருப்பது புதுமையானது. அம்மன் மீது அளவிலாப் பக்தியைக் கொண்டிருப்பவர்களைப் பரவசப்படுத்தும்படியான நுால். தாயினும் சாலப்பரிந்து, கோலக்கிளியே சரணம், பாலா திரிபுரசுந்தரி, யாதுமாகி நின்றாய், நீயும் நானும் வேறில்லை ஆகிய ஐந்து தலைப்புகளைக் கொண்டிருக்கும் இந்நுால். அம்பிகையை வினாவுவதாகவும், அவளே நேரடியாகப் பச்சைப் புடவைக் காரியாகக் காட்சி தந்து, நுாலாசிரியரின் ஐயங்களைத் தடை விடைகளால் விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது. அம்பிகையின் […]

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், பக். 366, விலை 200ரூ. இந்த உலகில், இரண்டு வகையான துன்பப்படுகிற மக்கள் உள்ளனர். ஒரு வகை, மத தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுவோர்; மறு வகை, அவர்களைப் பின்பற்றி நடக்காதோர். ஆனால், கொஞ்சம் கூட கவலைப்படாத, என்னைப் போன்ற ஒரு மூன்றாவது வகையைச் சேர்ந்த ஒரு மனிதனைக் காண்பது மிகவும் கடினம்’ (பக். 15). இப்படி சுயதரிசனம் தரும், ஓஷோவின், ‘போலியான மதம்’ என்னும் முதல் கட்டுரை துவங்கி, ‘கடவுள் நம் எல்லாருக்கும் தெரிந்த யாருமாகவும் இல்லாதவர்’ முடிய, […]

Read more

பிசி டாக்டர்

பிசி டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.130. கணினி இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது. இந்நூல் கணினியின் வரலாறு, அவற்றில் உள்ள பல வகைகள், கணினியின் இன்றைய வளர்ச்சி நிலை பற்றி கூறுகிறது. நாம் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் கணினி சார்ந்த பல சொற்களைப் பற்றிய விளக்கங்கள் இந்நூலில் கிடைக்கின்றன. மதர்போர்ட், சிப்செட், போர்ட்ஸ், புராசெசர், ஹார்ட் டிஸ்ஸ் டிரைவ், சிடி, டிவிடி, ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ், RAM, இன்புட் டிவைஸஸ், யுபிஎஸ், லைட் பென் என கணினியில் உள்ள பல பாகங்களைப் […]

Read more

தமிழ் யாப்பியல் – பன்முக வாசிப்பு

தமிழ் யாப்பியல் – பன்முக வாசிப்பு, சந்தியா பதிப்பகம், மு.கஸ்தூரி, பக்.200, விலை ரூ.180. சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிற்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் எனப் பலவற்றிலும் யாப்பியல் தொடர்பான பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன- மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அவ்வரிசையில் இந்நூலையும் சேர்க்கலாம். இதிலுள்ள ஒன்பது கட்டுரைகளும் யாப்பியல் தொடர்பானவை. செய்யுளில் அமைந்த ஓசை நயத்துக்கு யாப்பமைப்பு எந்த விதத்தில் உதவுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது இந்நூல். தமிழில் உள்ள இலக்கியங்களின் யாப்பியலை ஆராய்வதன் மூலம் அந்தந்த கால யாப்பியல் வளர்ச்சிகளை வரலாற்று நோக்கில் […]

Read more

இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம், சசிதரூர்; தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்; கிழக்கு பதிப்பகம், பக்.384; விலை ரூ.350/ முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சமஸ்தானங்களாகச் சிதறுண்டு கிடந்த பல பகுதிகளை பிரிட்டிஷார் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய பகுதிகளின் பொருளாதாரத்தைச் சுரண்டி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்தினர். இந்திய பருத்தியைக் கைப்பற்றிக் கொண்டு சென்று, முழுமை அடைந்த உடைகளாகத் திரும்பவும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தனர்'. ரயில் போக்குவரத்து வந்த பிறகு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இருந்த உபரிகள் சுரண்டப்பட்டன. நகர்ப்புற பெரும் வணிகர்கள், ஏற்றுமதியாளர்களுடன் இந்திய […]

Read more

தோள் சாயும் பொழுது

தோள் சாயும் பொழுது, இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 80,விலை 60ரூ. ஆணும், பெண்ணும் நண்பர்களாகவே எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்… பள்ளி வரை அல்லது கல்லூரி வரை… அதற்கும் மேல் திருமணம் வரை… அதிகபட்சம் பேரால் இவ்வளவு தான் கடந்திருக்க முடியும்… ஆனால், ‘தோள் சாயும் பொழுது’ நாவல், மேற்சொன்ன எல்லாவற்றையும் கடந்த ஆண், பெண் நட்பை நம் மனக் கண்ணில் பிரதிபலிக்கிறது. இளமை காலத்தில், ‘புரியாத உறவு’ உணர்வுடன் இருந்ததை, இருவருக்குமான உறவின் முரண்களை பேசுகிறது. திருமணத்திற்கு […]

Read more

பெண்களும் சோஷலிஸமும்

பெண்களும் சோஷலிஸமும், ஆகஸ்டு பேபல், தமிழில் பேரா.ஹேமா, பாரதி புத்தகாலயம், விலை 380ரூ. நம் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடந்தபடி இருக்கின்றன. இத்தகைய பிரச்சினைகளில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது, பெண்கள் குறித்த விவாதம். பாலினச் சமத்துவம் இல்லாமல் மனித குலத்துககான விடுதலை சாத்தியமில்லை என இந்தப் புத்தகம் உரக்கச் சொல்கிறது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

மெய்ப்பொய்கை

மெய்ப்பொய்கை, ருச்சிரா குப்தா, தமிழில் சத்தியப் பிரியன், கிழக்கு, விலை 300ரூ. இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளரான பிரேம்சந்த், மன்ட்டோ, புதுமைப்பித்தன், அம்ருதா ப்ரீதம், இஸ்மத் சுக்தாய், கமலா தாஸ் எனப் பலருடைய சிறுகதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுடைய துயர்மிகு வாழ்வையும் இந்நூல் பதிவு செய்கிறது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

ஜெர்மனி

ஜெர்மனி, முனைவர் சொ.சேதுபதி, டாக்டர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், பக். 206, விலை 200ரூ. வரலாற்று சுவடு நிறைந்த ஜெர்மனியின் இலக்கிய வளம், சுற்றுலா பகுதிகள், பண்பாடு, நோபல் பரிசு பெற்றவர்கள் என, வார்த்தைகள் வழியே, வாசகர்களுக்கு, ஜெர்மனியை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். தமிழகத்திற்கு வந்த ஜெர்மானிய கிறிஸ்தவர்கள்; ஜெர்மனிக்குப் போய் வந்த தமிழர்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. தேசங்களின் வரலாறு அறிய விரும்புவோருக்கு, இந்நுால் பயனளிக்கும். நன்றி: தினமலர், 10/1/2018

Read more
1 324 325 326 327 328 505