அந்த ஏழு நாட்கள்

அந்த ஏழு நாட்கள், எஸ். ரங்கராஜன், அகநாழிகை பதிப்பகம், பக். 100, விலை 100ரூ. மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். கணக்குத் தணிக்கையோடு இணைத்து, மனிதாபிமானத்துடன், ஒரு விஷயத்தை எப்படி அணுக முடியும் என்பதை, இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார். ஒவ்வொரு பாத்திரமும், நல்ல குணங்களின் அற்புத வார்ப்புகள். இலக்கியம், இத்தகைய அற்புத குணநலர்களை முன்னிலைப்படுத்தும்போது, மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படுகிறது. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

மச்ச புராணம்

மச்ச புராணம், வேணு சீனிவாசன், கிழக்கு பதிப்பகம், பக்.312, விலை 290ரூ. திருமாலின், 10 அவதாரங்களில், முதன்மையானது மச்ச அவதாரம். வியாச முனிவரால் எழுதப்பட்ட, 18 புராணங்களுள், மச்ச புராணத்திற்கு, தனி சிறப்பு உண்டு. மீன் வடிவெடுத்து, நீர்ப்பிரளயத்தில் இருந்து, இவ்வுலகை காத்தார் என்ற புராணத்தை, எளிய நடையில் ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆன்மிகம் நாட்டம் கொண்டோர், இந்நுால் வாசித்தால், மகிழ்ச்சி அடைவர். நன்றி: தினமலர், 10/1/2018

Read more

புலி – ஆடு, புல்லுக்கட்டு

புலி – ஆடு, புல்லுக்கட்டு, டாக்டர் ஆர். கார்த்திகேயன், தாமரை பிரதர்ஸ் மீடியா, பக். 80, விலை 60ரூ. இந்த புத்தகத்தைப் பார்த்ததும், ‘இதெல்லாம் ஒரு புத்தகமா?’ என்று நினைக்க தோன்றுகிறதா? ‘ஆம்’ என்பது உங்கள் பதில் எனில், அதை வாங்க வேண்டிய இரண்டாம் நபர் நீங்கள். ‘இல்லை’ என்பது உங்கள் பதில் என்றால், முதல் நபர் நீங்கள் தான். ஏன் என்றால்… இதில் நீங்கள் விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஆயிரம், ‘ஏன்’களுக்கு இதில் விடை இருக்கிறது. ‘அதிகம் செல்பி எடுப்பவர்கள் ஆண்களா, […]

Read more

அந்தர மனிதர்கள்

அந்தர மனிதர்கள், வெ.நீலகண்டன், சந்தியா பதிப்பகம், பக்.112, விலை 105ரூ. பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாக கொண்டவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு இது. முகம் தெரியாத யாரோ ஒருவரின் விந்தணுவை சுமக்கும் பெண் முதல், ஆழ்கடலுக்குள் சென்று பாசி பறிக்கும் நபர் வரை, அனைவரையும், பசி துரத்துகிறது. அதைதான், இந்நுால் பதிவு செய்திருக்கிறது. நன்றி: தினமலர், 12/1/2018

Read more

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, விலை 280ரூ. பாலியல் வன்புணர்வு, காதல் என சீனாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை குறித்து வானொலி தொகுப்பாளினியான சின்ரன் தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சீனப் பெண்களின் நிலை குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

மார்க்ஸ் எப்படி இருப்பார்?

மார்க்ஸ் எப்படி இருப்பார்?, எஸ்.தோதாத்ரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.140, விலை ரூ.120. 2013 இலிருந்து 2016 வரை மூன்றாண்டுகளில் நூலாசிரியர் எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கட்டுரைகளும் காரல் மார்க்ஸுடனும், மார்க்சியத்துடனும் தொடர்புடையவை. மார்க்ஸ் என்ற மனிதரின் தோற்றம், உழைப்பு, பழக்க, வழக்கங்கள், பண்புகள், அவருக்குப் பிடித்தமான நூல்கள், அவருடைய மனைவி ஜென்னியிடம் அவர் கொண்டிருந்த ஆழமான காதல் என முதல் நான்கு கட்டுரைகள் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றியவையாக உள்ளன. மார்க்ஸ் காலத்தில் வாழ்ந்த அவருடைய […]

Read more

கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை, ஆனி பிளாரன்ஸ் (எ) பிரியசகி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 160ரூ. குழந்தைகளிடம் இயற்கையாகவே இருக்கும் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஒருங்கிணைந்த மகிழ்ச்சியான சூழ்நிலை அவர்களிடம் உருவாக்குவது குறித்து அறிமுகம் செய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

பெரியாழ்வார்

பெரியாழ்வார், ம.பெ.சீனிவாசன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. தமிழ் மொழியில் தோன்றியது போல் வேறு எந்த மொழியிலும் இவ்வளவு அதிகமான பக்தி இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. பக்தி இலக்கியத்தின் தொடக்கம் சங்ககாலத்திலேயே அறியப்பட்டாலும் நாயன்மார், ஆழ்வார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது. அதிலும் பன்னிரு ஆழ்வார்களின் படைப்புகள் திருமாலின் பெருமையைப் பாடிச் செல்வதால் ஆழ்வார்களை மால் உகந்த ஆசிரியர் என்று அழைப்பர். அவர்களுள் பெரியாழ்வாரின் படைப்புகளையும் அதன் தனிச் சிறப்புகளையும் பற்றிப் பேசுவதுதான் இந்நூல். அறிமுகம் , வாழ்க்கையும் படைப்பும், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் […]

Read more

அகக்கண்களால் இறைவனை தரிசித்த சித்தர்கள்

அகக்கண்களால் இறைவனை தரிசித்த சித்தர்கள், ஞானத் திருக்கோவில், விலை 125ரூ. அகத்தியர், போகர், இடைக்காடர், திருமூலர் முதலான 18 சித்தர்கள் பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததாக புராணங்களிலும், வரலாறுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில், காகபுகண்டர், சிவவாக்கியர் ஆகியோர் பற்றி இந்த நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது. அவர்களின் வரலாற்றையும், ஆசிரியர் முனைவர் சிவ.ஜ.வேழவேந்தன் சுவாமிகள் சுவையான பல தகவல்களை விவரித்துள்ளார். எந்த நாளில் உருவாகும் குழந்தை எப்படிப்பட்ட பண்புகளை கொண்டதாக இருக்கும் என்பது, ‘குழந்தை வரம் வேண்டி சித்தர்கள் அருளிய குறிப்பு’ என்ற அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, […]

Read more

ஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள்

ஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், பக்.320, விலை ரூ.190. சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவர் நாதபிரம்மமான தியாகராஜர். இவர் ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை உருவாக்கி இருக்கிறார். இக்கீர்த்தனைகள் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. தியாகய்யாவின் நாதோபாசனையானது தம்பூராவை மீட்டி கைத்தாளம் போட்டு இக்கீர்த்தனை, இந்த ராகம், அந்த தாளம் என்று பகுப்பாய்வு செய்து பாடும் முறையன்று. மாறாக, தெய்வீக கீர்த்தனைகள் மூலம் பஞ்ச பூதங்களும் மற்றும் பிராகிருதியின் செயல்களை அடக்கி வைக்கும் முறையே நாதோபாசனை ஆகும். இந்த நாதோபாசனை முறையில் இறைவனை வழிபட்டவரே […]

Read more
1 326 327 328 329 330 505