கொம்மை

கொம்மை, பூமணி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 555ரூ. கரிசல் வட்டார இலக்கிய ஆளுமைகளுள் மிக முக்கியமானவர், எழுத்தாளர் பூமணி. பிறகு, வெக்கை ஆகிய நாவல்களுக்குப் பின், அவர் எழுதிய, அஞ்ஞாடி நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்று, இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றது. இந்த ஆண்டு, அவருடைய, கொம்மை என்ற புதிய நாவல் வெளிவந்திருக்கிறது. படத்திற்கான அட்டை ஓவியமே, வாசகர்கள் இடையே நாவலுக்கான எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைக் களஞ்சியம், தொகுப்பாசிரியர்கள் இரா.காமராசு, சேதுபதி, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 160ரூ. கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும். சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், […]

Read more

குடியேற்றம்

குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக். 237, விலை 275ரூ. ஆசிரியரின், ஆறாவது நாவல் இது. கிழக்கு – மேற்கு கடற்கரைகளில், பறங்கியர்களுக்கும், கடலோர மரைக்காயர்களுக்கும் இடையே, 150 ஆண்டுகள் கடும்போர் நடைபெற்றது. இந்தப் பின்னணியில், ‘குடியேற்றம்’ எழுதப்பட்டுள்ளது. தோப்பிலாரின் நாவல்களுக்கேயுரிய வரலாற்றுத் தரவுகள், மொழிநடை, காட்சி ரூப உருவாக்கம் ஆகியவை, இந்நாவலிலும் உள்ளன. நாவலின் பலமாக இவை இருந்து குன்றாத வாசிப்புச் சுவையை ஊட்டுகின்றன. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

என் இதயமே நீ நலமா?

என் இதயமே நீ நலமா?, டாக்டர் ஒய். ஆர். மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 128, விலை 80ரூ. உடல் நலனில், இதயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதய நலனுக்கான, சித்தா மருத்துவ நுால். இதயத்தின் இயக்கம், இதய நோய் வகை, உணவில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை, உடற்பயிற்சி, தியானம் என, பல்வேறு தகவல்கள், இந்நுால் நிரம்பியுள்ளன. இதய நோய்க்கான, சித்தா மருத்துவமுறைகளும், அதை தயாரிக்கும் வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன. சித்தா மருத்துவமுறைகளை பின்பற்றுவோருக்கு, இந்நுால் முக்கியமானது. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

வலி

வலி, அமரந்த்தா, சந்தியா பதிப்பகம், விலை 110ரூ. பல்வேறு பெண்களின் வாழ்க்கையைச் சொல்கிறது இந்நூல். இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதைகள், நம்முடன் சக பயணியாக வரும் வெவ்வேறு தளங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையை மிக நுட்பமாகச் சொல்கின்றன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

எங்கிருந்து தொடங்குவது

எங்கிருந்து தொடங்குவது, வெண்ணிலா, அகநி, விலை 100ரூ. ஆணும் பெண்ணும் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்கும் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளை வளர்க்கும் விதம், குடும்பத்துக்குள் சாதியின் நிலை, பாலின வேலைப் பாகுபாடுகள், உறவினர்களுக்காக வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளும் இயலாமை ஆகியவை தனித்தனி அம்சங்களாக இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

தடைகள் தாண்டிப் பாயும் நதி

தடைகள் தாண்டிப் பாயும் நதி, பிருந்தா சீனிவாசன், தி இந்து, விலை 120ரூ. இந்தச் சமூகம் பெண்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தகர்த்து வெளியேறும் பெண்கள் குறித்தும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

சங்கப் பெண் கவிதைகள்

சங்கப் பெண் கவிதைகள், சக்தி ஜோதி, சந்தியா பதிப்பகம், விலை 400ரூ. சங்கப் பெண் புலவர்கள் 45 பேர் எழுதிய கவிதைகளை வரலாற்றுப் பின்புலத்தோடும் இன்றைய நோக்கிலிருந்தும் ஆராய்ந்து பார்க்க உதவுகிறது இந்நூல். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

சகோதரி நிவேதிதை விரிவான வாழ்க்கை வரலாறு

சகோதரி நிவேதிதை விரிவான வாழ்க்கை வரலாறு, சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், பக். 625, விலை 275ரூ. அன்பினுக்கு ஓர் கோவிலாய், எமதுயிர் நாடாம் பயிருக்கு மழையாய் வாழ்ந்த அன்னை’ என்று, பாரதியார் புகழ்ந்த சகோதரி நிவேதிதையின் 151ம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் வெளியாகி உள்ள சிறந்த நுால். குருநாதர் விவேகானந்தர் காட்டிய ஆன்மிப் பாதையில் வாழ்ந்த இவரை ஐரோப்பியப் பெண் என்பது மடமை. தியாகமும், தொண்டும் லட்சியமாகக் கொண்டவர். அதன் அடையாளமாக நிவேதிதை அன்னையின் பெருமை, புனிதம், ஆற்றல் ஆகிய […]

Read more

வேளாண்மையில் மேலாண்மை

வேளாண்மையில் மேலாண்மை, நா. ரங்கராமானுஜம், தமிழ்நாடு மத்த வேளாண் வல்லுனர் பேரவை, பக். 448, விலை 350ரூ. வேளாண்மையில் முதல் பணியான, நில சீர்திருத்தம் முதல், விதை நுட்பம், அறுவடைக்கு பிந்தைய நுட்பம் வரை, அனைத்து தொழில் நுட்பங்களும், இந்நுாலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தானிய பயிர்கள், நறுமணப்பயிர்கள், தீவனப்பயிர்கள் என, 78 பயிர்களின் சாகுபடி முறைகள், இந்நுாலில் விளக்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மை மற்றும் மூலிகை வேளாண்மை குறித்தும், பல்வேறு செய்திகள் உள்ளன. நன்றி: தினமலர், 10/1/2018

Read more
1 325 326 327 328 329 505