திராவிடரின் இந்தியா

திராவிடரின் இந்தியா – டி.ஆர்.சேஷ ஐயங்கார்; தமிழில்: க.ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம்,  பக்.192, விலை ரூ.125. திராவிட நாகரிகம் குறித்தும் இந்து நாகரிக வரலாற்றில் அதற்குரிய இடத்தை வரையறை செய்யும் முயற்சியாகவும் எழுதப்பட்டுள்ள நூல். திராவிடர்களின் தோற்றம், திராவிட மொழிகள், திராவிடர்களின் இலக்கியம், இசை, சமய நம்பிக்கை, கட்டடக்கலை, வணிகம் போன்ற பல்வேறு கூறுகளையும் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர். கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பே பாண்டியர்கள் அரசு நாகரிகத்தில் சிறந்து விளங்கியதை மெகஸ்தனிஸ் எழுதியுள்ள குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. தொல்காப்பியத்திற்கு முன்னரே பல தமிழ்நூல்கள் […]

Read more

தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும்

தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும், மு.சண்முகம்பிள்ளை, பக்.192, விலை ரூ.120. இன்றைக்கும் பலராலும் அறியப்படாதவர் பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை. 15க்கும் மேற்பட்ட நூல்களையும், அச்சுக்கு வராத காப்பியம், சிற்றிலக்கியம், சங்க இலக்கியம் முதலிய 25க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளையும் பதிப்பித்தவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1941-42 களில் எழுதப்பட்ட இந்த ஆராய்ச்சி நூல், அவரது குடும்பத்தினரால் இத்தனை காலமும் பாதுகாக்கப்பட்டு, தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. இந்நூலில் காணப்படும் பல்வேறு கருத்துகளும் செய்திகளும் சுமார் 70 ஆண்டுக்கு முன் நூலாசிரியரால் ஆராய்ந்து எழுதப்பட்டவை என்பதை மறக்காமல் நூலைப் […]

Read more

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5, எஸ் – வேதா, டி.ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம்,  பக்.352, விலை ரூ.500. ஜப்பானில் பெரிய தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் உள்ள பொருட்களையும், செயல்முறைகளையும் எளிமையாகவும், முறைப்படியும், சிறப்பாகவும் கையாள, அவற்றை முறைப்படுத்துவதற்காக ஏற்பட்டதுதான் இந்த 5 எஸ். இதற்குப் பின் தொடர் முன்னேற்றமாக கெய்சன் என்ற முறையும் ஜப்பானில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு தொழிற்சாலையில் குவிந்து கிடக்கும் பல பொருள்களில் தேவையானவற்றையும், தேவையற்றவற்றையும் முதலில் பிரிக்க வேண்டும் (செய்ரி), அவ்வாறு பிரித்தவற்றில் எந்தப் பொருள், எந்த இடத்தில், எவ்வளவு, எப்படி வைக்கப்பட வேண்டும் […]

Read more

மாஸ்தி சிறுகதைகள்

மாஸ்தி சிறுகதைகள், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், தமிழில்: சேஷநாராயணா, சாகித்திய அகாதெமி, பக்.144, விலை ரூ. 120. சாகித்திய அகாதெமி விருதுபெற்ற, தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் கன்னடச் சிறுகதைகளின் எளிமையான, சிறப்பான மொழி பெயர்ப்பு இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளும் சுவாரஸ்யமானவையே. ‘எறும்புகளின் உலகம்39‘ சிறுகதை எறும்புகளின் வாழ்க்கை குறித்த வியக்கத்தக்க செய்திகளைக் கொண்டுள்ளது. ‘மண வாழ்க்கையில் புதுமை39‘ சிறுகதையில் பெண் சுதந்திரத்தின் கசப்பான மறுபக்கம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. ‘இதற்கு முன் சில காலம் […]

Read more

சுமையா

சுமையா, கனவுப் பிரியன், நூல்வனம் வெளியீடு, பக். 216, விலை 160ரூ. சர்வதேச அளவிலான மனிதர்களை தமிழ்க் கதைப் பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுகதைகள் வாயிலாக புதிய கதைக்களன்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்துள்ளார். வாழ்வின் விசித்திரங்கள் கதைகளின் வழி காட்சிப்படுத்தும் விதம் சுவாரஸ்யம். சமூகம், அறிவியல் புனைவுகளும் கலந்து உற்சாகப்படுத்துகிறது. நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

இலை உதிர்வதைப் போல

இலை உதிர்வதைப் போல, இரா.நாறும்பூநாதன், நூல் வனம், பக்.192, விலை ரூ.150. வாழ்க்கை முழுக்க மனிதன், சக மனிதர்களுடன், இடங்கள், மரங்கள், செடி, கொடிகளுடன், வளர்ப்பு பிராணிகளுடன் எல்லாம் தொடர்புடையவனாக இருக்கிறான். வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளினால் சில தொடர்புகளை மனிதர்கள் விட்டுப் பிரிகிறார்கள். புதிய தொடர்புகள் வாழ்க்கையில் ஏற்படுகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள 26 சிறுகதைகளில் வரும் மனிதர்கள் எல்லாரும் இந்தத் தொடர்புகளின் அருமையை உணர்ந்தவர்கள். தொடர்புகளைவிட்டுப் பிரிய மனமில்லாதவர்கள். சக மனிதர்களை மட்டுமல்ல, செடியை, மரத்தை, ஆடு, மாடுகளை, இடங்களைப் பிரிய நேர்ந்தால், […]

Read more

ஆர். சூடாமணி

ஆர். சூடாமணி, கே. பாரதி,  சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. கருத்து வேறுபாட்டால் தனித்தனியே பிரிந்து வாழ நினைக்கும் ஓர் இளம் தம்பதி, ஆதரவற்ற ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றும் நற்செயலில் ஈடுபடும்போது தங்களின் பிரிவும் கோபமும் பொருளற்றவை என்பதை உணர்ந்து மனம் மாறுகின்றனர் (பூமியினும் பெரிது), தன் வயதே உடைய சின்னப்பொண்ணு கழிவறை சுத்தம் செய்வதைப் பார்த்து மனம் கசியும் விஜயா அவளின் உண்மையான பெயரைக் கேட்க அவள் விஜயா என்று கூறுகிறாள். விஜயாவின் மனதில் ஒரு நிம்மதி (விஜயா), காரில் தனியே […]

Read more

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ.மணி, சங்கர் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் சிறப்பு பெற்றவை ஆகும். ஆலயங்களுக்கு தெய்வங்களே வந்து வழிபாடு நடத்தி இருக்கின்றன என்பது ஐதீகம். அவ்வாறு எந்த கோவிலில் எந்த தெய்வம் வழிபாடு நடத்தியது என்பதையும், அந்த கோவிலின் வரலாறு உள்பட வேறு பல சிறப்புகள், அந்த கோவில்கள் அமைந்துள்ள ஊர், அங்கே செல்வது எப்படி என்பது போன்ற ஆன்மிக வாசகர்களைக் கவரும் பல்வேறு அம்சங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.174, விலை ரூ.155. சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார். குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, ‘இந்த;டிசைன்&#39‘ சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய […]

Read more

வர்க்கப் புரட்சி

வர்க்கப் புரட்சி, புலவர் தி. குலோத்துங்கன், பிரசாந்த் நூலகம், பக். 120, விலை 80ரூ. பாமர மக்களின் அடிமை நிலை நீங்க, புரட்சியை ஆழப்படுத்தி, மக்களுக்கு அறிவு புகட்டி, போராடினால்தான் நாட்டில் சமத்துவத்தை உருவாக்க முடியும். பாட்டாளி வர்க்கம் ஆட்சியை அமைக்க முடியும். இத்தகைய கருத்துக்களை முன் வைக்கும் நூல் இது. நன்றி: குமுதம், 29/3/2017.

Read more
1 410 411 412 413 414 505