சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

சட்ட வல்லுநர் திருவள்ளுவர், டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி வெளியீடு, பக். 275, விலை 220ரூ. மேல் நாட்டவர்கள் தான் நம் நாட்டின் சட்டங்களை வடிவமைத்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன்… 1980 – 83ம் ஆண்டுவாக்கில், நம் சட்டக் கல்லூரிகளில் ரோமன், ஆங்கிலேய, லத்தீன், அமெரிக்கர்கள் மட்டுமே சட்ட அறிஞர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர். இந்தியாவிலிருந்து சட்ட அறிஞர்களாக ஏனோதானோவென்று அறிமுகம் செய்யப் பட்டவர்கள் மனுவும், சாணக்கியரும் (கவுடில்லியர்) மட்டுமே. தமிழில் நீதி நூல்கள் அதிகம் இருக்கின்றன என்ற உண்மையோ, தமிழ்மொழி சட்டக் கருத்துக்கள் […]

Read more

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2, எஸ்.எஸ். பரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், பக். 328, விலை 275ரூ. முறையான இசைப் பயில விரும்புவோர், ஒரு சாகித்தியத்தை யார் எழுதியது என்பதையும், அந்த சாகித்தியத்தின் முழு அர்த்தத்தையும் முற்றிலும் புரிந்து கொள்ள முனைவர். இதெல்லாம், இசைக் கல்லூரிகளில் பயின்றால் மட்டுமே சாத்தியம். இப்போதைய அவசர உலகில், சங்கீதம் கற்றுக் கொடுப்பவர்களே, வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் காட்டுவதில்லை. ஆனால், வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் கொண்டோர், அவர்களைப் பற்றி மேம்போக்காக எழுதப்பட்டுள்ள […]

Read more

உங்களுக்கான 24 போர் விதிகள்

உங்களுக்கான 24 போர் விதிகள், செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., சுரா பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. இப்போதைய நேர்மையற்ற சில அதிகாரிகளை மனதில் நிழலாட விட்டு, இந்தப் புத்தகத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம். எடுத்தாலும் தவறில்லை. படித்து முடித்து இறுதியில், இப்படிப்பட்ட சிந்தனையைத் தூண்டும் அதிகாரியை நாம் பெற்றிருக்கிறோமே என, ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம். தனக்கு நேர்ந்த அவமானங்களைத் தாண்டி, எப்படி ஒரு அதிகாரியாகச் செயல்படுவது என்பதற்கு, தன் அனுபவத்தின் மூலமும், தான் படித்த அரிய புத்தகங்களின் மூலமும் மனதைப் பதப்படுத்தித் […]

Read more

இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள்

இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள், யசோதரை கருணாகரன், ஆனந்த விகடன், விலை 165ரூ. இதயத்தைக் காக்கும் உணவுகள் என்ற தலைப்பில், பல்வேறு உணவுகள் பாரம்பரிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் வகைகளை இதில் காணலாம். கொள்ளு ரசப்பொடி, முடக்கத்தான் இட்லி, இலந்தை வடை என்று பல ரெசிபிகள் இதில் அடக்கம். இந்த மூன்று நூல்களையும் வெளியிட்டு உணவுத் தயாரிப்பின் சிறப்பை ஆனந்த விகடன் பிரசுரம் வெளிப்படுத்தியிருக்கிறது. நன்றி: தினமலர், 9/4/2017.

Read more

மருந்தென வேண்டாவாம்

மருந்தென வேண்டாவாம், மருத்துவர் சி.எஸ். சிவராமன், ஆனந்த விகடன், விலை 115ரூ. சுக்கு, வெந்தயம், மஞ்சள், சீரகம் உட்பட நமது பண்டைய கால சமையல் உணவுக்கான பொருட்கள் எந்த அளவு உடலின் சமநிலைக்கு உதவுகிறது என்பதை விளக்கும் நூல். அறுசுவை உணவு வாழ்வைச் சிறக்க வைக்கும் என்பதும் இந்த நூலில் கூறப்படும் கருத்தாகும். நன்றி: தினமலர், 9/4/2017.

Read more

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை, seed அறக்கட்டளை, ஆனந்த விகடன், விலை 185ரூ. திருநெல்வேலியில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் சமையல் கலையில் தேர்ந்தவர்கள் தயாரித்த உணவு வகைகள் தயாரிப்புகள் தரப்பட்டுள்ளன. வழுவழு தாளில், வண்ண உணவுகள் தயாரிப்பும் இந்த நூலின் தனிச்சிறப்பு. நன்றி: தினமலர், 9/4/2017.

Read more

கோமணம்

கோமணம், சுப்ரபாரதிமணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ. முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில், பக்தர்கள் அனுபவித்த அனுபவங்களை சமகால நிகழ்வுகளுடன் பேசும் நாவல் இது. கடவுள் நம்பிக்கை, சடங்குகள், பழங்கதைகள், நாத்திகம் என்று எல்லாமே அலசப்பட்டுள்ளன. பொதுமக்களின் மனதைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்னைகளை அலசி, சமூகம் சார்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறார் நாவலாசிரியர். நன்றி: குமுதம், 5/4/2017.

Read more

காலத்தால் அழியாத சுதந்திரம்

காலத்தால் அழியாத சுதந்திரம், எல்லை. சிவக்குமார், மேன்மை வெளியீடு, பக். 128, விலை 100ரூ. புதுச்சேரி வரலாற்றில் வ. சப்பையாவுக்கும் அவர் தொடங்கிய ‘சுதந்திரம்’ இதழுக்கம் ஒரு சிறப்பான இடமுண்டு. அத்தகைய சிறப்பான ‘சுதந்திரம்’ பத்திரிகையின் ஆரம்பகால இதழ்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள், அரசியல், போராட்டம், தொழிலாளர்கள், இலக்கியம், சமூகம் என்று அனைத்தையும் இவ்விதழ் வழி ஆராயப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 5/4/017.

Read more

மாணவனே உன்னை உலகம் கவனிக்க

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 124, விலை 45ரூ. மாணவர்களின் படிப்பு, திறன், ஆர்வம் முயற்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் கேள்விகளுக்குப் பதில்க எழுதப்பட்ட நூல். எல்லா நிலையில் உள்ள மாணவர்களுக்கும் படிப்பதற்கு தேவையான பல்வேறு டிப்ஸ்கள் இந்நூலில் உள்ளன. மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அதற்குத் தீர்வு காணவும் உதவும் நூல். நன்றி: குமுதம், 5/4/017.

Read more

மறுதாம்பு

மறுதாம்பு, தோழன் மபா., மேய்ச்சல் நிலம் பதிப்பகம், பக். 104, விலை 90ரூ. வெட்டப்பட்ட பின்னரும் துளிர்விடும் எந்த ஒன்றும் ‘மறுதாம்பு’தான். ‘சாமிதானே நானு என்னை ஏன்டா சமுத்திரத்தில் கரைக்கிற?’ என்று கேட்டும் சாமிக்கும் ஒரு ‘மறுதாம்பு’ உண்டு என்பதை உணர்த்தும் சமூகப்பதிவுகள் மபாவின் ஆக்கங்கள். விளிம்பு நிலை மாந்தர் மட்டுமன்று, பெரும் வலியை தினந்தோறும சுமந்து நகரும் நாட்களும் கால்களும்கூட தனக்கான செய்தியை கவிதைகளாகப் பதிந்துவிட்டுச் செல்லும் நிகழ்வு இதில் உண்டு. நன்றி: குமுதம், 5/4/017.

Read more
1 412 413 414 415 416 505