மாவலி பதில்கள்

மாவலி பதில்கள், நக்கீரன் பதிப்பகம், விலை 125ரூ. ‘நக்கீரன்’ இதழில் வெளியான கேள்வி – பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாவலி என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கோவி. லெனின். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் சுவையாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

தர்ம அதர்ம சரித்திரம்

தர்ம அதர்ம சரித்திரம், ச. காடப்பன், யாழினி பதிப்பகம், பக். 96, விலை 90ரூ. மகாபாரதம் ஒரு வாழ்வியல் நூல். மனிதன் தர்மத்தின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டும் நூல். இதில் அப்பழுக்கற்றவர் என்று எவரும் இல்லை. முழுக்க முழுக்க அதர்மிகள் என்றும் அவருமில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் தத்துவத்தைச் சுட்டிக் காட்டும்படி படைக்கப்பட்டுள்ளன. இதில் 21 கதாபாத்திரங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயும் நூல் இது. நன்றி: குமுதம், 5/4/2017.

Read more

மனச்சிறையில் சில மர்மங்கள்

மனச்சிறையில் சில மர்மங்கள், ஷாலினி, விகடன் பிரசுரம், பக்.96, விலை ரூ.90. சென்னை-2. வெளியே பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத உடல், மனநலப் பிரச்னைகள் உள்ளவர்கள், அதைப் பற்றிக் கூறப்படும் பல்வேறு தவறான கருத்துகளின் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். மருத்துவ வியாபாரிகள் மனிதர்களின் இம்மாதிரியான அந்தரங்கமான பிரச்னைகளைப் பற்றி தவறாகப் பிரசாரம் செய்து, மக்களிடம் இருந்து பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தவறான கருத்துகளுக்கு மாற்றாக சரியான கருத்துகளை உளநலவியல் நிபுணரான நூலாசிரியர், இந்நூலில் முன் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். தோலில் பரு, […]

Read more

சைவ சமையல் அசைவ உணவு வகைக

சைவ சமையல் அசைவ உணவு வகைகள், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. குழம்பு  வகைகள், கூட்டு, பொரியல் என பல வகையான சைவ சமையல் செய்முறைகளை ராணி எஸ். மதுரவல்லி இந்த நூலில் விளக்கியுள்ளார். இது தவிர அசைவ வணவு வகைகள் குறித்து எஸ். விஜிலா சுவைபட எழுதியுள்ளார். இரண்டும் தனித்தனியே விலை 50ரூ. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

ஏவுகணை தந்தை அப்துல் கலாம்

ஏவுகணை தந்தை அப்துல் கலாம், தொகுப்பு  சிவரஞ்சன், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. கடந்த சில ஆண்டுகளில் யாரைப் பற்றிய புத்தகம் இந்தியாவில் அதிக அளவில் வந்துள்ளது என்று கேட்டால் தயக்கமின்றி கூறலாம் “அப்துல்கலாம் அவர்களைப் பற்றிய புத்தகங்கள்தான்” என்று. புத்தக ஆசிரியர்கள் அவரவர் கோணத்தில் அப்துல் கலாம் சிறப்புகளைக்கண்டு மகிழ்ந்து எழுத்தில் வடிக்கிறார்கள். சிவரஞ்சன் தொகுத்துள்ள இந்த நூல், சிறப்பாக அமைந்துள்ளது. அப்துல் கலாம் வரலாறு, அவருடைய சாதனைகள், அவர் எழுதிய புத்தகங்கள், அவருக்குப் பிடித்தமான புத்தகங்கள்… இப்படி அப்துல் கலாம் பற்றி […]

Read more

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு (அறிவியல் சிறு கதைகள்), க.மண, அபயம் பதிப்பகம், பக்.177, விலை ரூ.120. “மனித உணர்ச்சிகளுக்கு இடமில்லாத அறிவியல் தொழில்நுட்பத் தகவல்கள், காய்ந்த ரொட்டிகள் 39” என்று நூலின் முன்னுரையில் கூறும் நூலாசிரியர், இந்நூலில் உள்ள சிறுகதைகளை காய்ந்த ரொட்டித் தகவல்களாக உருவாக்காமல், சுவை மிக்கதாக உருவாக்கியிருக்கிறார். கடந்தகாலத்துக்குச் சென்று, விருப்பப்பட்ட மிருகத்தை வேட்டையாடலாம் என்று சென்ற ஏகாம்பரம், கடந்த காலத்துக்குச் சென்ற பின்பு, “அதில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அந்தக் கடந்த காலத்துக்குப் பின்பு, பலதலைமுறைகளில் ஏற்கெனவே […]

Read more

தமிழ் திரைப்பட நூற்றாண்டு – 2018

தமிழ் திரைப்பட நூற்றாண்டு – 2018, பெ. வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீடு, பக். 104, விலை 100ரூ. தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டதன் விளைவாக, தமிழ்த் திரைப்படங்களின் நூற்றாண்டு எந்த ஆண்டாக இருக்க முடியும் என்ற விவாதங்கள் உருவாகியுள்ளன. அந்தக் குறையை இந்நூல் தீர்த்து வைக்கிறது. 2018 ஆம் நூற்றாண்டுதான் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது இந்நூல். தமிழ்த் திரைப்படங்கள் குறித்த ஆய்விற்கு வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

அருகர்களின் பாதை

அருகர்களின் பாதை, ஜெயமோகன், கிழக்குப் பதிப்பகம், பக். 272, விலை 250ரூ. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத் தலங்களை தேடிச் செல்லும் ஒரு பயணம் இது. ஜெயமோகன் தனது நண்பர்கள் ஆறுபேருடன் ஈரோடு முதல் ராஜஸ்தான் வரை ஆறு மாநிலங்கள் வழியாக இதற்காகப் பயணப்பட்டிருக்கிறார். அறநிலைகளை சமணர்கள், இந்தியாவில்அமைத்திருந்தனர். அந்த சங்கிலி இன்றும் அறுபடாமல் அப்படியே இருப்பதை ஜெயமோகன் இப்பயணத்தின் வழி கண்டறிந்துள்ளார். பயணத்தின்போது தினமும் அவர் இணைய தளத்தில் எழுதியதன் தொகுப்பு இந்நூல். நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.184, விலை ரூ.140. தமிழ் இலக்கியத் திறனாய்வுகள், திறனாய்வு செய்பவரின் வாழ்க்கைப் பார்வையிலிருந்து பலவிதமாக வெளிவந்திருக்கின்றன. இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமர்சிப்பவர்களும், இலக்கியத்தின் வெளிப்பாட்டு அம்சத்தைப் பிரதானப்படுத்தி அழகியல் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும், இலக்கியம் எந்தக் கருத்தைச் சொல்கிறது என்ற அடிப்படையில் சமூகக் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களே. ஆனால் இந்நூலின் விமர்சனப் பார்வை சற்றே வித்தியாசமானது. உளவியல் அறிஞர்களான ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகியோரின் உளவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான […]

Read more

நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம், வரலாற்று நாவல், அ. ரெங்கசாமி, தமிழோசை பதிப்பகம், பக். 464, விலை 400ரூ. சயாம் – பர்மா மரண ரயில் பாதைத் திட்டத்தின் போது, ஜப்பான் இழைத்த கொடுமைகளால், 2.5 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்த சம்பவத்தை ஒட்டி மலேயத் தமிழர்களுக்காக, போர் நினைவுச் சின்னம் ஒன்றைப் போல எழுப்ப முடியாததால், இந்நாவலுக்கு பேனா முனை கொண்டு ‘நினைவுச் சின்னம்’ எழுப்பியுள்ளதாகக் கூறும் இந்நாவலாசிரியரின் எழுத்தோவியம், இன்றைய தலைமுறையினர் மூதாதையர்களின் அவல வரலாற்றைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. மலேஷியத் தமிழ்த் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி […]

Read more
1 413 414 415 416 417 505