கடல் தாவிய கதாநாயகன்

கடல் தாவிய கதாநாயகன், முனைவர் கு. ஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், விலை 80ரூ. ராமதூதனாக கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றவர் அனுமார். சிரஞ்சீவி வரம் பெற்றவர். ராமாயணம், மகாபாரம் இரண்டிலும் இடம் பெற்ற ஒரே கதாபாத்திரம். அத்தகைய சிறப்பு பெற்ற ஆஞ்சநேயரின் பெருமைகளைக் கூறுகிறார் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

பெரியபுராணக் கதைகள்

பெரியபுராணக் கதைகள், ஆதிரையார், குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.150. சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த "திருத்தொண்டர் புராணம்' சிவனடியார்களான 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் வரலாறுகளை விரித்துரைக்கும் புராணம். அதனால், அது பெரியபுராணமாயிற்று. சிவனடியார்களின் பெருமைகள், வரலாறுகள் மட்டும் இதில் கூறப்படவில்லை. மனித நேயம், உயிர்களிடத்தில் அன்பு, அன்னதானத்தின் சிறப்பு, சிவத்தொண்டின் மகிமை, திருநீற்றின் மேன்மை, அடியார்க்கு இரங்கும் பரமனின் எளிவந்த தன்மை, அம்மையப்பரின் கருணை, அறவுரைகள், மன்னர்களின் ஆட்சிமுறை, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், பண்பாடு, கோயிற்கலைகள், வாணிகம், பொருளாதாரம், பழக்க வழக்கங்கள் […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம், பக்.136, விலை ரூ.80. அக்காலத்தில் பாலி ஆறு எனப்படும் பாலாற்றின் இரு கரைகளிலும் சைவ, வைணவ புண்ணிய திருத்தலங்கள் பல இருந்துள்ளன. அவற்றில் எத்தனையோ ஆலயங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இருப்பினும் இன்றைக்கும் நிமிர்ந்து நின்று தலப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருத்தலங்கள் அநேகம்! நவக்கிரகங்களில் அமைந்துள்ள புதன் பகவான், நவக்கிரகங்களில் ஒருவராக தம்மை மேம்படுத்திக்கொள்ள காஞ்சியில் உள்ள திருநெறிக்கரைக்காடு ஈசனை வேண்டிப் பெற்றுள்ளார். மற்றொரு அதிசயச் செய்தி, காஞ்சி, கோனேரிக்குப்பத்தில் அருள்புரியும் வீரட்டானேஸ்வரர் […]

Read more

ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்

ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம், மோஹன் ஜகந்நாத் யாதவ்-தமிழில்: சிவசங்கரி, ஷீரடி சாயி டிரஸ்ட், பக். 384, விலை: குறிப்பிடப்படவில்லை. ஸ்ரீ சாயி சரித்திர தரிசனத்தை தமிழில் பக்திபூர்வமாக மொழி பெயர்த்துத் தந்துள்ளார் எழுத்தாளர் சிவசங்கரி. இந்நூலில் மகான் சாயி பாபாவின் அருமை பெருமைகளை, அவரின் அருள் திறத்தை ஆன்மிகக் கருவூலத்தை தனித்தனி அத்தியாயங்களில் தனிச் சிறப்போடு தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சாயிபாபா உள்ளிட்ட மகான்களும் அவதார புருஷர்களும் ஏன் யாசகம் பெறுகின்றனர் என்பதற்கான அருமையான, அரிதான விளக்கம் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஞானிகளின் கதைகளைக் கேட்க […]

Read more

ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்கள்!,

ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்கள்!, கா.சே. மணவாளன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 206, விலை 160ரூ. சான்றோர்களின் வாழ்க்கை அனுபவங்கள் நாம் நன்கு வாழ நம் வாழ்க்கையை மாண்பு உடையதாக செய்து கொள்ள பெரிதும் உதவும். ஸ்ரீமத் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள், தியாக சீலர் கூரேசர், முதலியாண்டான் எம்பாரும், ராமாநுசமும், பட்டரும்,ந ச்சீயரும், நஞ்சீயரும் நம்பிள்ளையும் போன்ற தலைப்புகளில் ராமானுஜர் மற்றும் வைணவ சமய சான்றோர் பற்றி பக்தி மணம் கமழ சொல்லி சொல்கிறார் மணவாளன். […]

Read more

ரமலான் சிந்தனைகள்

ரமலான் சிந்தனைகள், எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஜலாலி, அஸீலா பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில் எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஜலாலி முப்பது நாட்கள் நிகழ்த்திய சொற்பொழிவு புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. நோன்பைத் தொடங்குவோம், வாரிசுரிமைச் சட்டங்கள், இறை நம்பிக்கை, ஈகைப் பண்பு, மகத்தான இரவு போன்ற 27 தலைப்புகளில் இஸ்லாம் பற்றிய கருத்துகளை எடுத்துரைக்கிறார். அதோடு சொற்பொழிவு உருவான விதத்தையும், அதற்குக் கிடைக்கும் விமர்சனங்களையும் சேர்த்து பதிவு செய்துள்ளார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

அஷ்டபதி (கீதகோவிந்தம்)

அஷ்டபதி (கீதகோவிந்தம்), அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 100ரூ. கிருஷ்ண பகவான் மீது ஜயதேவ சுவாமிகள் பாடிய பாடல்களே “கீதகோவிந்தம்” ஆகும். கீத கோவிந்தம் காவியத்துக்கு, “அஷ்டபதி” என்ற பெயரும் உண்டு. அஷ்டபதியை பாராயணம் செய்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்தப் புத்தகத்தில், ஐயதேவ சுவாமிகள் வரலாறு முதலில் இடம்பெற்றுள்ளது. அதையடுத்து, அஷ்டபதி பாடல்களுக்கு விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

இராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம்,

இராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம், த.வ.சிவசுப்பிரமணியன், கல்வி உலகம் பதிப்பகம், விலை 200ரூ. இது ஒரு அருமையான புத்தகம். ராமாயணத்தில் வருகிற எண்ணற்ற கதாபாத்திரங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இதை த.வ. சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார். இதில் உள்ள சில தகவல்கள்: அக்க குமாரன் (அட்சய குமாரன்); இலங்கை வேந்தன் ராவணனின் இரண்டாம் மகன். அக்கயன்: முப்பதினாயிரம் கோடி வானர சேனைக்குத் தலைவன். அகத்திய முனிவர்: பிரம தேவரின் மகனான புலத்தியரின் மகன். விதரபர்கோன் மகளாகிய உலோப முத்திரையை மணந்து சித்தன் என்னும் […]

Read more

அறிவோமா பிரம்ம சூத்திரம்

அறிவோமா பிரம்ம சூத்திரம், வ.ந.கோபால தேசிகாசாரியார், வானதி பதிப்பகம், பக். 216, விலை150ரூ. இந்திய நாட்டில், ஆன்மிக பொக்கிஷங்களாக இருப்பவை உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்று பெரியோர் கூறுவர். இம்மும்மணிகளில் பிரம்ம சூத்திரம் வியாச முனிவரால் எழுதபட்டு, பின் ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், மத்வர் ஆகிய மூவரால் உரை விளக்கங்கள் எழுதப்பட்டன. இந்நூல், ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய வடமொழி உரையை, மிக எளிய தமிழில், யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளிவந்து உள்ளது. வேதங்கள் கர்ம காண்டம், பிரம்ம காண்டம் என்று […]

Read more

விநாயகர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

விநாயகர் பற்றிய அற்புதமான விஷயங்கள், சிந்தனையருவி இரா.ரெங்கசாமி, மணிமேகலைப்பிரசுரம், விலை 110ரூ. விநாயகர் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டுள்ள சகல விவரங்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. அத்துடன் விநாயகரின் ஜாதகமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more
1 46 47 48 49 50 128