சிவயோகி மா.இரத்தின சபாபதிப்பிள்ளை படைப்புகள்

சிவயோகி மா.இரத்தின சபாபதிப்பிள்ளை படைப்புகள், பேராசிரியர் முனைவர் நல்லூர் சா. சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலை 450ரூ. விநாயக புராணத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ நூலுக்கு யோகத் தெளிவு தந்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமந்திரத்திற்கு எழுதிய முன்னுரை, திருமந்திரத்தின் அனுபவ முறை, திருமந்திரத்தின் மூலமான மரணமிலாத் தன்மை எனத் திருமந்திரத்தை விளக்கும் சிவயோகியின் பிற நூல்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கடவுளை அடைய உடலைப் பயன்படுத்தும் நெறிமுறைகளை தெளிவாக விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more

பலன் தரும் பாரம்பரிய பண்டிகைகள்

பலன் தரும் பாரம்பரிய பண்டிகைகள், கா. சுந்தரமூர்த்தி, விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. தென்னகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல், மகாசிவராத்திரி, மாசிமகம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்பட 21 பண்டிகைகள் பற்றிய புத்தகம். இந்தப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதன் நோக்கம், அதன் புராணப் பின்னணி, பலன்கள் முதலியவை பற்றி தெளிவாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார் கா. சுந்தரமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

பொலிக பொலிக

பொலிக பொலிக, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. ஸ்ரீராமானுஜரின் சரிதம் ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை “பொலிக பொலிக” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் பா. ராகவன். ஒரு நாவல் போல விறுவிறுப்புடன் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும் (இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள்)

ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும் (இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள்), டாக்டர் மா. ஷிவகுமார், அழகு பதிப்பகம், பக். 224, விலை 180ரூ. தென்னக ரயில்வேயில் இன்ஜீனியராக 33 ஆண்டுகள் பணியாற்றிய இந்நூலாசிரியர், ஜோதிடத் துறையிலும் 25 வருட அனுபவங்களைப் பெற்று, இது குறித்து பல பாடங்களையும் கற்று பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். ஜோதிடம் பார்க்க வருபவர்கள் தங்கள் மனதில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இவர் அளித்துள்ள பதில்கள், கேட்பவர்களுக்குப் பெரும் திருப்தி அளித்துள்ளன. அவற்றின் தொகுப்பே, இந்நூல். சந்தேகங்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் […]

Read more

அவன் தாள் வணங்கி… (அறுபத்து மூவர் வரலாறு)

அவன் தாள் வணங்கி… (அறுபத்து மூவர் வரலாறு), செ. சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக். 206, விலை 150ரூ. பழைமை இலக்கியம் (புராணம்) புதுமைப் பொலிவு பெற்றுள்ளது. பெரிய புராணம் எனப் போற்றப்படும் திருத்தொண்டர் புராணத்தை, பலர், அறுபத்து மூவர் கதைகளாக உரைநடையில் எழுதியுள்ளனர். ஆனால், இந்நூலில், ஒவ்வொரு நாயன்மார் பற்றியும் சுருக்கமாக, உரைநடையில், 10 வரியளவில் ஒரு குறிப்பை முதலில் வைத்து, அவ்வடியார் வரலாற்றை விரிவாக உரைப்பா (புதுக்கவிதை) பாங்கில், சிறிய சொற்களால் சீரிய கருத்துகளைச் செதுக்கியுள்ளார். இவர் தொழில் முறைக் கவிஞர் […]

Read more

63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள், ஆலயப் பிரியர் சிவ. சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக். 496, விலை 300ரூ. சிவநெறி பரப்பிய, 63 நாயன்மார்களின் பணி மிகப் பெரிய சாதனை. சுந்தரமூர்த்தி நாயனார் சுருக்கமாக கூறியதை, சேக்கிழார் சுவாமிகள் ‘திருத்தொண்டர் புராணம்’ என்று விரிவாகச் சொன்னார். அக்காவியம் பின்னர் பெரியபுராணம் என வழங்குகிறது. அப்புராணச் செய்யுள்களுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க., கோவை சி.கே.சி., போன்றோர் விரிவுரை எழுதினர். அவற்றை எல்லாம் இக்கணினியுலகில் படிக்க வாய்ப்பில்லாதோர், மிக எளிய தமிழில் படிக்கத் தக்க முறையில் இந்நூல் வெளிவந்துள்ளது. சிவனடியார்களுக்குத் […]

Read more

பொலிக பொலிக

பொலிக பொலிக, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. நெகிழ்க, நெகிழ்க! ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு இது என்பதை ஒட்டி தினமலரில் 108 நாட்கள் தொடர்ந்து எழுதப்பட்ட தொடர், நூல் வடிவில் வெளியாகி உள்ளது. எந்த விஷயமாக இருந்தாலும் அதைத் தேனில் குழைத்து தருவதில் வல்லவர் பா.ராகவன். ராமானுஜர் குறித்த இந்த நூலும் அதற்கு எந்த விதத்திலும் குறையாமல் படுசுவாரசியமாக அமைந்துள்ளது. ராமானுஜர் பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆழ்வார்ப் பாசுரங்களைத் தொகுக்கிறார் நாதமுனி. அவரது கரங்களில் ராமானுஜரின் சிலை அதிசயமான முறையில் […]

Read more

தமிழகத்தில் எமதர்மன் வழிபாடு

தமிழகத்தில் எமதர்மன் வழிபாடு, மு.செல்லன், அன்னம், பக்.153, விலை ரூ.150. உயிரைப் படைப்பதற்கு ஒரு கடவுள் இருந்தால், உயிரை எடுப்பதற்கும் ஒருவர் வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்தான் எமன். மேலும், எமன் பற்றிய தொன்மைக் கதைகள், கர்ணபரம்பரைக் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், ரிக் வேதம், அதர்வண வேதம், விஷ்ணுதர்மோத்ர புராணம், மகாபாரதம், கருட புராணம், பெளத்தம், கடோபநிஷத் முதலிய பலவற்றிலும் எமன் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. எமன் உலகத்தை இயக்குபவன் என்றும், சூரியக் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது. சீனர்கள் எமனை ‘பின்இன்&39’ என்கின்றனர். அவர்தான் […]

Read more

சித்தர்கள் கூறும் இரகசியங்கள்

சித்தர்கள் கூறும் இரகசியங்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியன், கல்வியாளர் சாந்தா பாண்டியன், ஆர்.கே.எஸ். பதிப்பகம், விலை 200ரூ. சித்தர்களின் தத்துவங்கள், நெறி, பாதை போன்றவற்றைப் பற்றி இந்த நூல் விளக்குகிறது. அதேபோல் சித்தர் நெறிக்கு அடிப்படையான யோகப் பயிற்சி முறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் அருளிய நோய்தீர்க்கும் மருந்துகள் பற்றியும், தமிழகத்தில் சித்தர்கள் ஜீவசமாதியான இடங்களைப் பற்றிய பட்டியலும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 265ரூ. “அபிராமி” என்றால் பேரழகி என்று பொருள். அபிராமியின் அழகை, வேறு எவருடனும் ஒப்பிட முடியாது. அபிராமி பற்றிய 101 பாடல்களும், அவற்றின் விளக்கங்களும் கொண்ட நூல் இது. விளக்கங்களை இலக்கியச் சுவையுடன் விரிவாக வி.ஏ.ராமசுப்பிரமணியன் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more
1 47 48 49 50 51 128