108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள், இரா. இளையபெருமாள், சகுந்தலை நிலையம், விலை 300ரூ. தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான வைணவத் தலங்கள் உள்ளன. இவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த 108 தலங்கள் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. ஒவ்வொரு கோவிலும் எந்த இடத்தில் அமைந்துள்ளது, எந்த வழியாகப் போகலாம் என்ற விவரங்களுடன், அந்த கோவிலின் சிறப்புகள் பற்றி தெளிந்த நீரோடை போன்ற நடையில் எழுதியுள்ளார் இரா. இளையபெருமாள். கோவில் மூலவர்கள் படங்கள், ஆர்ட் காகிதத்தில் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சிறந்த கட்டமைப்புடன் உயரிய பதிப்பாக வெளிவந்துள்ளது இந்த நூல். […]

Read more

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு, கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 225ரூ. ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் ஈடு இணையற்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா எல்லாம் அவருக்கு தண்ணீர்பட்டபாடு. இடையிடையே நகைச்சுவையை கலந்து சிரிக்கவும் வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார். அவர் மறைவு, ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத ஒரு சூனியத்தை ஏற்படுத்திவிட்டது. பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் தமது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதுவே இந்தப் புத்தகம். தலைப்பைப் பார்த்தால், வாரியார் வரலாற்றை வேறு ஒருவர் […]

Read more

ஸ்ரீராமநுஜர் நூற்றெட்டு அந்தாதி

ஸ்ரீராமநுஜர் நூற்றெட்டு அந்தாதி, துரை மலையமான், துரை மலையமான் பதிப்பகம், விலை 22ரூ. மூங்கிற்குடி திருவரங்க அமுதனார் அருளிய ராமாநுஜரின் 108 அந்தாதி அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.   —-   ஆய்வுக்குரிய ஜோதிட நியதிகள், கி.கந்தசுப்பு, மனோன்மணி பதிப்பகம், விலை 240ரூ. ஜோதிடம் என்பது பலிக்கக் கூடியதுதானா, அது அவசியமானதா என்ற கேள்விகளை எழுப்புவோர் பலர். அதற்கெல்லாம் விடையளிக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

வேத வரிகளும் தூதர் மொழிகளும்

  வேத வரிகளும் தூதர் மொழிகளும், டாக்டர் கே.வி.எஸ். ஹவீப் முகம்மத், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 200ரூ. திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் ‘ஹதீஸ்’ எனப்படும். நபிகளாரின் பொன்மொழிகளும்,திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட நன்னெறிக் கருத்துகளும் சில ஆயிரம் பக்கங்கள் கொண்டவை. அத்தகைய இஸ்லாமிய கருத்துகளை அனைவரும் அறிந்திடும் வகையில் சுருக்கமாக டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித் தனித்தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவு ஆற்றுவோருக்கும், […]

Read more

இராமாயண ரகசியம்

இராமாயண ரகசியம், தமிழருவி மணியன்,கற்பகம் புத்தகாலயம், பக்.208, விலை ரூ.140. வால்மீகி இயற்றிய ராமாயண காவியத்தை தமிழில் வழங்கிய கம்பன் அதை தமிழ்ப் பண்புகளுக்கு ஏற்ப எவ்வாறு சீராக்கி வழங்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். தமிழருவி மணியனின் இந்த நூல், வால்மீகி மற்றும் கம்பனின் விவரிப்புகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை மிக நன்றாகவே எடுத்துக் கூறுகிறது. அது மட்டுமின்றி, நூலாசிரியரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், மொழி ஆளுமையும் வாசகர்களை ஈர்க்கும் வகையில் நன்கு வெளிப்பட்டுள்ளன. பொதுவாக இலக்கியங்களில் எதிர்நாயகனின் நற்பண்புகளைப் […]

Read more

கோமணம்

கோமணம், சுப்ரபாரதி மணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ. பூசாரி ஜெகந்நாதன் தலைமையில் நாலு தீர்த்த கலசத்தையும் ஐந்து நாள் நடையில் காலை ஒருவர், மாலை ஒருவர் என தலையில் சுமந்து கோமணாண்டி முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் ஒரு குழுவினரின் அனுபவங்களை மிக இயல்பாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். பாதயாத்திரை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர, ராவணன் என்ற புனைப்பெயர் பூண்ட மணி என்னும் நாஸ்திகரும் இந்த குழுவை நைசாகத் தொடர்கிறார்! குழுவினரின் கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், தொன்மக் […]

Read more

சைவ சித்தாந்த நன்னெறி

சைவ சித்தாந்த நன்னெறி, ச.சௌரிராசன், மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை, பக்.528, விலை ரூ. 350. ‘சைவ சமயமே சமயம்39’ என்று கூறிய தாயுமானவர் பாடலில் தொடங்கி, சைவ சமயத்தின் அடிப்படைச் செய்திகள், குரு மரபு, சைவ சித்தாந்த சாத்திரங்கள், மும்மல இயல்பு, பாச நீக்கம், சிவப்பேறு உள்ளிட்ட பல்வேறு செய்திகளையும் பதினைந்து பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளார் ஆசிரியர். சைவ சித்தாந்தம் குறித்து ஏற்கெனவே அதிகம் சொல்லப்பட்ட செய்திகளை ஓரளவுக்குத் தொட்டுக் காட்டிவிட்டு தாதான்மிய சம்பந்தம், பஞ்ச சக்திகள், அருவ, உருவ, அருவுருவ வடிவங்கள், சுத்தாத்துவிதம், […]

Read more

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம், தொகுப்பாசிரியர் பி. மகாதேவ அய்யர், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 320, விலை 400ரூ. 1946-ல் ‘நர்மதா ரஹஸ்யம்’ என்று ஹிந்தியில் வெளியான நூலில், வடநாட்டில் உருவான நர்மதா நதியின் மகிமை குறித்த பல்வேறு விஷயங்கள் தொகுக்கப்பட்டு பலரது கவனத்தைக் கவர்ந்தது. மகிமைகளை தொகுத்து ஒரு நூல் வெளியாக வேண்டும் என்ற ஆவல், காஞ்சி மடத்தின் மஹா பெரியவராக இருந்த மறைந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்குத் தோன்ற, அதன் அடிப்படையில் இந்நூல் உருவானது. ஸ்ரீ காஞ்சி மஹாஸ்மிகளின் ஆசியுடன் 1962-ல் […]

Read more

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணக் கதைகள், ஆதிரையார், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமான் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழப் பேரரசின் முதல் அமைச்சராக இருந்தவர். அவரால் அருளப்பெற்றது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநீலகண்டர், கண்ணப்பர், குலச்சிறையார், திருமூலர், காரைக்கால் அம்மையார் உள்பட 72 சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் புத்தகத்தை எழுதியுள்ளார், ஆதிரையார். அழகிய அட்டைப்படம், அருமையான வடிவமைப்பு. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

செஞ்சொல் உரைக்கோவை

செஞ்சொல் உரைக்கோவை, கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 86ரூ. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலக்கிய இன்பம், முத்தமிழ், திருப்புகழ் இன்பம், தேவார இன்பம் என்ற 8 தலைப்புகளில் கிருபானந்த வாரியார் பேசிய பேச்சுக்களின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more
1 45 46 47 48 49 128