ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, சைலேந்திர சர்மா, கிரி டிரேடிங் ஏஜென்ஸி, பக். 304, விலை 150ரூ. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ள பண்டைய யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், கிருஷ்ணரை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017.   —-   ஆங்கில மருத்துவம், சா. அனந்தகுமார், நிவேதிதா பதிப்பகம்,  பக். 96, விலை 80ரூ. உடல் மருத்துவம், நோய்கள், மருந்து முறைகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள், முதல்மருத்துவத் தகவல்கள், மருத்துவ நோபல் பரிசு உள்ளிட்டவை அடங்கிய […]

Read more

பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீ பாலகங்கா பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 90ரூ. பாரத நாடு பாருக்கெல்லாம் அளித்த ஞானக் கொடை பகவத் கீதை. உள்ளம் தெளிவுற உலகோர் கீதையை படிக்கின்றனர். கீழைக்கு ஆதிசங்கரர் முதல் பலரும் வடமொழியில் விளக்கம் எழுதியுள்ளனர். பகவத் கீதை வெண்பா, பாரதியார் விளக்கம், கண்ணதாசன் விளக்கம், சுவாமி சித்பவானந்தர் ஆராய்ச்சி விளக்கம் எனப் பல நூல்கள் கீதைக்கு தமிழாக்கமாக வந்துள்ளன. இந்நூலில், 18 அத்தியாயங்களும் தெளிவுரையாக விளக்கம் தரப்பட்டுள்ளன. சுலோகங்களே இல்லாமல் கருத்துக்களைத் தொகுத்துள்ளார். அன்றாட […]

Read more

ஸ்ரீராமஜயம்

ஸ்ரீராமஜயம், அபூர்வ ராமாயணம், தொகுதி 3, திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், பக். 248, விலை 240ரூ. பலமுறை படித்தாலும் சலிக்காத- அலுக்காத- நூலாகத் திகழ்வது ராமாயணம் எனலாம். எத்தனை விதமான ராமாயணக் கதைகள் இருந்தாலும் அத்தனையும் கற்கண்டு தான். இந்நூலில், அபூர்வ ராமாயணத்திலிருந்து சில கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஊர்மிளை கேட்ட வரம் குறித்தும் (பக்.74), சீதைக்குப் பறவைகளின் மொழி தெரியும் என்பதும் (பக்.98), காக்கையாக வந்த ஜெயந்தன் செயலை நியாயப்படுத்துவதும் (பக்.102), ஊனமுற்றோரைக் கேலி செய்யக்கூடாது என்பதை, கபந்தன் நிகழ்ச்சி மூலம் […]

Read more

ஆன்மிக முத்துக்கள்(அறுநூறு)

ஆன்மிக முத்துக்கள்(அறுநூறு), ஆரூர் ஆர்.சுப்பிரமணியன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 180ரூ. இந்து மதம் குறித்த ஆன்மிகம் தொடர்பாக அறுநூறு கேள்விகளுக்கு இந்த நூலில் ஆரூர் ஆர்.சுப்பிரமணியன் பதில்களைத் தருகிறார். ஆன்மிகம் சம்பந்தமாக ஒவ்வொருவருக்கும் எழக்கூடிய சந்தேகங்களை அவர் தீர்த்து வைக்கிறார். இந்துக்களின் பூஜை முறைகள், பண்டிகை முறைகள், நல்ல புண்ணிய திதிகள், கோவில்களின் கட்டமைப்பு, புராண, வரலாற்றுப் பின்னணிகள் என எல்லாக் கேள்விகளுக்கும் சிறப்பான விளக்கமான பதில்கள், நம்மை வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

பெரிய புராணம் எளிய நடையில்

பெரிய புராணம் எளிய நடையில், பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம். சேக்கிழார், காவிய வடிவில் இந்தப் பெருநூலைப் பாடித் தந்தார். அதை எளிய உரைநடையில் தரும் முயற்சி நீண்ட காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு உரைநடையில் பெரியபுராணத்தை வழங்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது இந்நூல். எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியச் சுவையுடன் இதை எழுதியுள்ள பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

பொலிக பொலிக!

பொலிக பொலிக!, பா.ராகவன்,கிழக்கு பதிப்பகம்,  பக்.464, விலை ரூ.325. ‘பொலிக பொலிக பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம் 39’ என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. அதினின்றும் கிடைத்தது இந்தப் புத்தகத்தின் பெயர். ஸ்ரீவைஷ்ணவத்தை ஆயிரமாண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக நிறுவிய ராமானுஜரின் ஜீவசரிதத்தை விவரிக்கிறது நூல். பாரத ஆன்மிக மரபின் ஜெயக்கொடியை நாட்டிய மனித நேய வள்ளலின் வாழ்க்கைக் கதை, சம்பவ வடிவில் அமைந்திருப்பது இதன் சிறப்பு. எனினும் கற்பனை கட்டற்றுப் போகவிடாமல், வரலாற்று விவரங்களின் அடிப்படையில் இதனைப் படைத்திருக்கிறார் பா.ராகவன். காட்சி வர்ணனைகள் நம்மை அந்தக் […]

Read more

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், பக். 365, விலை 300ரூ. எத்தகைய நல்ல செயல்களைச் செய்தாலும், அதில் சிறிதளவாவது தீமை கலந்தே இருக்கும். தெய்வங்களின் செயல்கள் அனைத்தும் அதர்மத்தை அழிக்கக்கூடியவையாக இருக்கும். அந்தச் செயல்களின் காரணமாகவே அந்தத் தெய்வங்களை தோஷங்கள் பற்றி இருக்கின்றன. தம்மைப் பற்றிய தோஷங்களை நீக்குவதற்காகவும், ‘பேரானந்த நிலை’ என்பது செயலற்ற ஆன்ம தரிசனத்தில் தான் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும், தெய்வங்கள் மற்றொரு தெய்வத்தை வணங்கி நமக்கு வழிகாட்டி இருக்கின்றன எனக் கூறுகிறார் நூலாசிரியர். […]

Read more

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்,

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 145ரூ. திருமந்திர பாடல்களில் சிலவற்றுக்கு எளிய விளக்கமும், நடைமுறை உதாரணங்கள் அடங்கிய கட்டுரைகள் இடம் பெற்ற நூல். குறிப்பாக அன்பும் சிவனும், யான் பெற்ற இன்பம், ஒன்றே குலம் ஒருவனே தேவன், இனிய இல்லறம் போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், ராதா நடராஜன், கற்பகம் புத்தகாலயம், விலை 150ரூ. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோர் வரலாற்றில் நடந்த அதிசய நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது பின்னணியில் தான் திருமுறைகள் அமைந்துள்ளன. அந்த வகையில் திருமுறைகளில் உள்ள சில வரிகளை மட்டும் விளக்கி எப்படி திருமுறைகள் நால்வர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக, சாட்சியாக அமைந்துள்ளன என்பதை இந்த நூலில் ராதா நடராஜன் அழகுற எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.‘

Read more

சமணர் கோவில் சிறப்பு

சமணர் கோவில் சிறப்பு, திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை வெளியீடு, விலை 140ரூ. காஞ்சீபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. “கரந்தை” என்றும் “முனிகிரி” என்றும் அழைக்கப்படும் சமணர் கோவில். இதந் சிறப்புகள் பற்றி பேராசிரியர் எஸ்.பரதன் எழுதியுள்ள நூல். “அமவு புகழ் கரந்தை”. “தமிழ்நாட்டில் இதுவரை 535-க்கு மேற்பட்ட சமண சமயத்தைச் சார்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் நூல்கள் பலவற்றை சமணர்கள் படைத்துள்ளனர்” என்பன போன்ற பல தகவல்கள் இந்நூலில் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more
1 49 50 51 52 53 128