தம்மபதம் – புத்தரின் வழி

தம்மபதம் – புத்தரின் வழி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் உலகப்புகழ் பெற்றவர் ஓஷோ. புத்தரைப் பற்றியும், புத்த மதத்தின் சிறப்புகள் பற்றியும் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் கொண்டது இந்த நூல். ஓஷோ ஆங்கிலத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளை, உணர்ச்சிமயமான தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர் டாக்டர் என். ரமணி. சிந்தனைக்கு விருந்தாகும் நூல். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

உள்ளுர் சிவசுப்பிரமணியர் சதகம்

உள்ளுர் சிவசுப்பிரமணியர் சதகம், பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்த பெருமன்றம், விலை 120ரூ. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6 ஆயிரத்து 666 பாடல்களை அருளி உள்ளார். அவை ஆறு மண்டலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் முதல் மண்டலத்தில் உள்ள பாடல் உள்ளூர்ச் சிவசுப்பிரமணியர் சதகம். இதனை தத்துவ -அனுபவ மரபில் பாடியுள்ளார். இந்த பாடல்களை அனைவரும் படித்து பயன்பெறுவதற்காக நக்கீரன் வழியடிமை புலவர் பி.மா. சோமசுந்தரனார உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

நபிமார்கள் வரலாறு

நபிமார்கள் வரலாறு, அப்துற் – றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 680, விலை 300ரூ. குர்ஆனில் கூறப்பட்டுள்ள இருபத்தி நான்கு நபிமார்களின் வரலாறுகளையும், திருத்தூதர்கள் செய்த இறை பணியையும், நல்வழிகளையும் குறிப்பிட்டு சிறப்பு சேர்க்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 25/6/2017.

Read more

கருணை மிகுந்தவள் ஸ்ரீ காளி மாதா

கருணை மிகுந்தவள் ஸ்ரீ காளி மாதா, வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 256, விலை 225ரூ. இந்நூல் சார்ந்த மார்க்கத்தின் செய்திகளுள் சில, பலவற்றை எளிய நடையில் எடுத்துரைக்கும் நூலாகும். இறைவியின் நாம ரூப பேதங்களில் காளிகாதேவி என்பதும் ஒன்று. இந்நூலாசிரியர் தேவிபாகவதம், புராணங்கள், தல வரலாறுகள் போன்றவற்றை திரட்டி கற்று இந்நூலை படைத்துள்ளார். மொத்தம், 47 தலைப்புகளில் வழங்கியுள்ள இவரின் அரிய முயற்சி பாராட்டுக்குரியது. அனுக்ரகத் தாயான அவள் வடிவம் கோர வடிவம்; உபாசகர்களுக்கு வரம் கோர உரிய ஆனந்த சொரூபம். […]

Read more

சிவனுக்குகந்த மலர்கள்

சிவனுக்குகந்த மலர்கள், கு. சேது சுப்ரமணியன், செங்கைப் பதிப்பகம், பக். 184, வி9லை 120ரூ. திருமூலர் திருமந்திரத்தில் ‘புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு, அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும்…’ என்று பாடியுள்ளார். பூவினால் செய்யும் பூசையால் வரும் புண்ணியங்களையும், பூவின் புகழ் வாசத்தையும் இந்த நூலில் மிக சிறப்பாக நுகரலாம். தருமை குரு முதல்வர் குரு ஞானசம்பந்தர் ஞானகுரு கமலை ஞானப்பிரகாசர் புட்பவிதி நூலும், ஸ்ரீ சிதம்பரநாத முனிவரின் நடராச சதகமும் நூலும், பாண்டி அரவிந்த அன்னையின் மலர்களின் தெய்வீக விளக்கமும் கொண்டு […]

Read more

மகா பெரியவா எனும் தெய்வத்தின் அருள்

மகா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பரமாச்சாரியாரைப் பற்றிய பக்தர்களின் பரவச அனுபவங்கள்), தொகுப்பு: கார்த்திகேயன், தங்கத் தாமரை பதிப்பகம், 10 தொகுதிகள் ஒவ்வொரு தொகுதியும், பக்.144, விலை ரூ.60. ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, நடமாடும் தெய்வமாக, பேசும் தெய்வமாகத் திகழ்ந்தவர் காஞ்சி மகா பெரியவர். கடவுள் பக்தியை மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாற்றிய கருணா சாகரம். தமது அருளாசியினாலும், அன்பாலும், தாய் போன்ற கருணை உள்ளத்தாலும் தம்மை நாடி வந்தவர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். மக்களின் ஒவ்வொரு பிரச்னைகளையும் […]

Read more

திருவாசகம்

திருவாசகம் – மூலமும் உரையும், உரையாசிரியர்: தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.552, விலை ரூ.200. திருவாசகத்திற்கு தற்போது வெளிவரும் உரை நூல்கள் பாட்டின் பொருள் உணர்ந்த விளக்கவுரைகளாக இல்லை. நுட்பமான விளக்கவுரைகள் ஏற்கெனவே பல உள்ள ஒரு ஞான நூலுக்கு, மேன்மேலும் விளக்கவுரை எழுதுவது தேவையில்லாதது. இதனால், பாடல்களில் பிழை, பொருட்பிழை, அச்சுப்பிழை, ‘பா39’ வகைகளில் பிழை எனப் பல பிழைகள் மலிந்தே வெளிவருகின்றன. இந்நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. அதாவது, பத்தோடு பதினொன்றுதான் இந்நூல். சிவபுராணத்தில்,‘மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை 39’ என்பது திருத்தமான […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம்,  பக்.136, விலை ரூ.80. அக்காலத்தில் பாலி ஆறு எனப்படும் பாலாற்றின் இரு கரைகளிலும் சைவ, வைணவ புண்ணிய திருத்தலங்கள் பல இருந்துள்ளன. அவற்றில் எத்தனையோ ஆலயங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இருப்பினும் இன்றைக்கும் நிமிர்ந்து நின்று தலப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருத்தலங்கள் அநேகம்! நவக்கிரகங்களில் அமைந்துள்ள புதன் பகவான், நவக்கிரகங்களில் ஒருவராக தம்மை மேம்படுத்திக்கொள்ள காஞ்சியில் உள்ள திருநெறிக்கரைக்காடு ஈசனை வேண்டிப் பெற்றுள்ளார். மற்றொரு அதிசயச் செய்தி, காஞ்சி, கோனேரிக்குப்பத்தில் அருள்புரியும் வீரட்டானேஸ்வரர் […]

Read more

மன்னார்குடி இறைபணி வரலாறு

மன்னார்குடி இறைபணி வரலாறு, தந்தை எம்.எல். சார்லஸ், புனித யோசேப்பு ஆலயம் வெளியீடு. பல்வேறு மதங்களும் ஒன்றுக்கொன்று நட்புறவுடன் தழைத்து வளர்ந்திருக்கும் கலாச்சாரத்தைக் கொண்ட ஊர் மன்னார்குடி கொண்டிருப்பது பலருக்கும் தெரியாது. மன்னார்குடிக்கு கிறிஸ்தவம் வந்து 350 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல் மன்னார்குடி பாமணி ஆற்றங்கரையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்டு 175 ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சிறப்புகளை வரலாறாக, தனது சீரிய முயற்சியின் பலனாக, எல்லோர் முன்னும் வைத்திருக்கிறார் பங்குத் தந்தை எம்.எல். சார்லஸ். நன்றி: தி இந்து, 24/6/2017.

Read more

ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்

ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம், மோஹன் ஜகந்நாத் யாதவ், தமிழில்: சிவசங்கரி, ஷீரடி சாயி டிரஸ்ட், பக். 384. ஸ்ரீ சாயி சரித்திர தரிசனத்தை தமிழில் பக்திபூர்வமாக மொழி பெயர்த்துத் தந்துள்ளார் எழுத்தாளர் சிவசங்கரி. இந்நூலில் மகான் சாயி பாபாவின் அருமை பெருமைகளை, அவரின் அருள் திறத்தை ஆன்மிகக் கருவூலத்தை தனித்தனி அத்தியாயங்களில் தனிச் சிறப்போடு தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சாயிபாபா உள்ளிட்ட மகான்களும் அவதார புருஷர்களும் ஏன் யாசகம் பெறுகின்றனர் என்பதற்கான அருமையான, அரிதான விளக்கம் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஞானிகளின் கதைகளைக் கேட்க வேண்டுமென்ற […]

Read more
1 48 49 50 51 52 128