தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்
தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பூம்புகார் பதிப்பகம், பக். 461, விலைரூ.290. தமிழ் மொழியின் இலக்கணத்தையும், தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைக்கும் தொல்காப்பியத்தை உள்ளது உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டுமானால், நூலாசிரியர் வாழ்ந்த காலம், இந்நூல் இயற்றப்பட்டதன் நோக்கம், நூலின் அமைப்பு, சமயச்சார்பு முதலியவற்றை அறிந்துகொள்வது அவசியம். இந்நூலின் நோக்கமும் அதுதான். இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. முற்பகுதியில் தொல்காப்பியத்தின் தோற்றம், நூலாசிரியரான தொல்காப்பியர் வாழ்ந்த காலம், இந்நூலை இயற்றியதற்கான காரணம் முதலியவற்றை விரித்துரைக்கிறது. இறையனார் களவியலுரை ஆசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பேராசிரியர், அடியார்க்கு […]
Read more