உயிர்ப்பு மிக்க காவியம்

உயிர்ப்பு மிக்க காவியம், சீறா வசனகாவியம், கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டி பாபு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. சீறாப்புராணத்தின் உரைநடை வடிவம்தான் இந்தச் சீறா வசன காவியம். இதை எழுதியிருப்பவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இது 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்றாலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியால் இந்நூல் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் புத்தகம் சீறாப்புராணத்தின் பொழிப்புரையோ தெளிவுரையோ அல்ல. கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர் இதை ஒரு பருந்துப் பார்வையுடன் எழுதியிருக்கிறார். சீறாப்புராணத்தின் […]

Read more

வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html சுஜாதா, அம்பலம் மின்னிதழிலும் கல்கி வார இதழிலும் எழுதிய பாசுர அறிமுகங்களின் தொகுப்பு இந்த நூல். தமிழ் அழகும் பக்தி ரசமும் சொட்டும் அழகிய பாசுரங்களுக்கு நவீன பாணியில், மொழியில் உரை எழுதியுள்ள சுஜாதா, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பல அரிய தமிழ்ச் சொற்களையும் அறிமுகப்படுத்துகிறார். அவருக்கு விருப்பமான பாசுரங்களை எடுத்துக்கொண்டு அதன் இலக்கிய தன்மையை மையப்படுத்தி, ஆழ்வார்களின் பக்திப் பெருக்கை உயர்த்திப் பிடித்து, […]

Read more

தமிழ்வேள் கோ. சாரங்கபாணி

தமிழ்வேள் கோ. சாரங்கபாணி, இலக்கிய வீதி, 52/3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை 101, விலை 200ரூ. திருவாரூர் மாவட்டம் விஜயபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேள் கோ. சாரங்கபாணி. சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளராக அரை நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றியவர். தமிழ் இலக்கியத்திலிருந்து சமுதாயப் பிரச்சினைகள், அரசியல் கருத்துகள் வரை ஆழ்ந்த அறிவும், அவற்றைத் தெளிவாகப் பேச்சிலும், எழுத்திலும் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாசிரியர் ஜே.எம். சாலி நூலாக தொகுத்துள்ளார். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் மாமனார் வள்ளல் உ. […]

Read more

மனதைத் திற அறிவு வரட்டும்

மனதைத் திற அறிவு வரட்டும், அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 130ரூ. நூலாசிரியர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தியின் தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனை மலர்களே மனதைத்திற அறிவு வரட்டும் நூல். மலை உச்சியில் நின்று பார்த்தால் பள்ளங்கள் தெரிவதில்லை. அதுபோல அன்பெனும் சிகரத்தில் நின்று பார்த்தால் குறை எனும் பள்ளங்கள் தென்படாது என்பது போன்ற கவிதைச் சொல்லாடலில் சிந்தனையை விதைக்கிறார் நூலாசிரியர்.   —-   சித்தர்களின் ஜீவசமாதி ரகசியங்கள், கைலாசநாதன், ஸ்ரீஆனந்தநிலையம், 7/14, புதூர் முதல் […]

Read more

சமகால மலையாளக் கவிதைகள்

சமகால மலையாளக் கவிதைகள், தொகுப்பு-சுகத குமார், தமிழில்-சா. சிவமணி, சாகித்ய அகடமி, 433, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 256, விலை 135ரூ. மகாகவி ஜி. சங்கர குறுப்பு முதல் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வரையுள்ள கவிஞர்கள் 1950 முதல் 1980 வரை எழுதியுள்ள கவிதைகளிலிருந்து 56 கவிதைகள் இந்நூலுள் தொகுக்கப்பட்டுள்ளன. மலையாளக் கவிதைகளின் 30 ஆண்டுகால வரலாற்றின் பதிவுகள் இவை. இந்தக் கவிதைகளைப் படித்துப் பார்க்கும்போது புலப்படுவது. ஒரு மகா நதியின் பிரவாகச் சித்திரம். உயர்ந்த இமயமலைச் சிகரங்களில் இருந்து, பள்ளத்தை நோக்கி […]

Read more

அத்தையின் அருள்

அத்தையின் அருள், சு. வெங்கடசுப்ராய நாயக்கர், கண்ணம்மா பதிப்பகம், 144, மகாலட்சுமி இல்லம், பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி, பக். 100, விலை 70ரூ. அப்பாவைக் காட்டிலும மாமாவின்பேரில்தான் குழந்தைகளுக்கு பிரியம் அதிகம். அப்பாவின் உடன்பிறந்த அத்தை பேரிலும் ஒரு அலாதிப் பிரியம் ஏற்படும். அதிலும் சிறுபிள்ளையாய், தாயை இழந்துவிட்ட குழந்தைகளுக்கு அப்பத்தை பேரில் சொல்லவொண்ணாப் பிரயம் சகஜமே என்று கி.ராஜநாராயணன் கொடுத்திருக்கும் முன்னுரையே இந்நூல் பற்றிய விளக்கமாக அமைந்துவிடுகிறது. இந்நூலை யாரோ ஒருவன் தன் அத்தையைப் பற்றி எழுதியிருப்பதாக சாதாரணமாக நினைக்க முடியாது. ஒரு அத்தையை […]

Read more

ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்)

ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்), தொகுப்பு – மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 272, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-5.html ஓஷோ ரஜனீஷ் என்னும் தத்துவ ஞானி தன் சீடர்களுக்கு மத்தியில் ஆற்றிய சொற்பொழிவுகளின் இடையிடையே கூறப்பட்ட தத்துவ முத்துக்கள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. தேடுவதை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் என்பதில் தொடங்கி உங்களது சொந்த வெற்றியில் ஆர்வமாக இருப்பது போன்று மற்றவர்களது வெற்றியிலும் ஆர்வமாக இருக்கங்கள். […]

Read more
1 4 5 6