பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலம்

பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலம், வி.கந்தசுவாமி முதலியாரின் உரை விளக்கம் மற்றும் ஆங்கில விளக்கத்துடன், பா.மதுகேஸ்வரன், பிரானேஷ் பப்ளிகேஷன்ஸ். அண்மையில் வெளிவந்திருக்கும் புத்தகம், ‘பத்துப்பாட்டுள் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படை மூலம்!’ இது, வி.கந்தசுவாமி முதலியாரின் உரை விளக்கம் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் வெளியிடப் பெற்றிருக்கிறது. இதில் சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்ற சொற்களுக்குப் பொருள் தெரிந்துகொள்ளும் வகையில் கூடுதலாக சொற்பொருள் விளக்கம் என்பதும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தை 1947ல் வி.கந்தசாமி முதலியார் வெளியிட்ட, ‘சிறுபாணாற்றுப்படை விளக்கம்’ என்பதன் மறுபதிப்பாகக் கொள்ள முடியும். சங்க இலக்கியமான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டுள் இடம்பெற்ற, 18 […]

Read more

மொழித் தொல்லியல்

மொழித் தொல்லியல், முனைவர் செ.வை.சண்முகம், மணிவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. கடந்த இரண்டாண்டுகளில் செ.வை. சண்முகம் பங்கேற்ற கருத்தரங்குகளில் வாசித்த 9 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘மொழித் தொல்லியல்’ எனும் முதல் கட்டுரையே தொல் மொழி, இலக்கியத் தொல்லியல், இலக்கணத் தொல்லியல், எழுத்தாக்கம் உள்ளிட்ட பல உட்தலைப்புகளின் கீழ் விரிவான ஆய்வுக் கட்டுரையாக உள்ளது. வ.சுப.மா-வின் தொல்காப்பியச் சிந்தனை, சங்க இலக்கியத்தில் சூழலியல், கவிதைக் கருத்தாடல் நோக்கில் திருக்குறள் ஆகிய கட்டுரைகள் சண்முகத்தின் இலக்கிய, மொழியியல் சிந்தனையின் விரிந்த தளத்தை உணர்த்துவதாக உள்ளன. நன்றி: தி […]

Read more

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் விளக்கம், திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், கி.குப்புசாமி முதலியார், சிவலாயம் வெளியீடு, பக்.1735, விலை 1800ரூ. உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளுக்கு, எண்ணற்ற விளக்கவுரைகள் வெளிவந்துள்ளன; இனியும் வரும். அவை அத்தனையும், மாற்றுக் குறையாத பரிமேலழகரின் உரைக்கு அடுத்த விளக்கமாகும். பரிமேலழகர், வைணவராக இருந்தாலும், சைவ நுால்களை நன்கு பயின்று தேர்ந்தவர். வட மொழியைக் கற்று கரை தேர்ந்த வித்தகர். திருக்குறளுக்கு அவரின் உரை, மாபெரும் கோவிலுக்கு தங்கக் கூரை வேய்ந்ததை போன்றது என்றாலும், அவரின் உரையும், விமர்சனங்களை சந்தித்தே வருகிறது. […]

Read more

தமிழ் இன்று

தமிழ் இன்று, கேள்வியும் பதிலும், இ. அண்ணாமலை, அடையாளம், பக்.182, விலை ரூ.170. தமிழ்மொழி தொடர்பாக பலருக்கும் எழுந்த பல்வேறு சந்தேகங்கள் சிஃபி, வல்லமை ஆகிய ஆன்லைன் இதழ்களில் கேள்விகளாகக் கேட்கப்பட்டு, அதற்குத்தக்க விடைகளும் நூலாசிரியரால் அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய வினா-விடைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்து, எழுத்துச் சீர்திருத்தம், சந்தி, கிரந்த எழுத்து, பிறமொழிச் சொற்கள், பேச்சுத்தமிழ், சொல், கலைச்சொல், இலக்கணம், செம்மொழி, தொன்மை, வளர்ச்சி, நடைவேறுபாடுகள் ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக நூலாசிரியர் விடையளித்துள்ளார். இந்த விளக்கங்கள் அனைத்தும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு […]

Read more

ஐம்பெருங்காப்பியங்களும் தமிழர் வாழ்வும்

ஐம்பெருங்காப்பியங்களும் தமிழர் வாழ்வும், கி.நெடுஞ்செழியன், வளர்மதி பதிப்பகம், விலை 200ரூ. மயிலாடுதுறையில் வழக்குரைஞராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், ‘தமிழ்மாமணி’ விருதும், ‘கரைகண்டம்’ என்ற புனைப்பெயரும் பெற்றவர். இவர் தமிழில் கரை காண முயற்சித்திருப்பது இந்நூலின் மூலம் அறியமுடிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் தமிழ்க் கடைச்சங்கம் தோன்றிய காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்கள் பல. அவற்றில் ஐம்பெருங்காப்பியங்களும் உண்டு. அதில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகியவை சமணக் காப்பியங்கள் என்றும், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவை பௌத்த காப்பியங்கள் என்றும் கூறப்படுவதுண்டு. இக்காப்பியங்கள் அச்சமயக் கொள்கைகளைப் போதிப்பதில்லை. […]

Read more

சிந்தனை முத்துக்கள்

சிந்தனை முத்துக்கள், வாழ்வியல் தடங்கள், நவீன ஆத்திச்சூடி, குறளின் குரல், 108 நட்சத்திரங்கள்,கவிஞர் ஆவியூரார், கே.கே.பதிப்பகம், விலை 100ரூ, 50ரூ, 40ரூ, 40ரூ, 80ரூ. நான் தானே உலகம்; எனது தானே எல்லாம்; படைப்பவன் கடமை எனக்கு எல்லாமே தரணும்’ என்ற போக்கில் மக்கள் திசைமாறியதை படம் பிடிக்கும் ஆசிரியர், இந்த ஐந்து நுால்களை உருவாக்கியிக்கிறார். அட்டலக்குமி அர்ச்சகர் ஆன இவர் இலக்கிய ஆசை கொண்டவர். நம்மைச் சுற்றி நடக்கின்ற வாழ்க்கைகளை, அதிகம் அறிந்தவர் என்ற முறையில் இவரது படைப்புகள் உள்ளன. தவிரவும் அறிவு […]

Read more

குந்தியின் குருசேத்திரம்

குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 352, விலை 275ரூ. தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவனை பெற்றாலும், வரத்தால் குழந்தை பெற்று, கணவன் இறந்தபோது, தன் சக்களத்தியை, உடன்கட்டை ஏற வைத்து, தன் பிள்ளைகளுக்கு, அரசாளும் உரிமை பெற போராடிய, பெண்ணரசியான குந்தியின் ராஜதந்திரங்களை, இந்நூல் விவரிக்கிறது. கர்ணன் இறந்த பின், அவனை அணைத்து கதறும், அவளின் தாய்மையையும் இந்நூல் சிறப்பாக படம் பிடிக்கிறது. நன்றி: தினமலர், 16/1/2018

Read more

அகநாழிகை

அகநாழிகை,(கலை இலக்கிய இதழ்), பொன்.வாசுதேவன், அகநாழிகை, பக். 128, விலை 120ரூ. கலை இலக்கிய இதழ், பிரபல எழுத்தாளர்களின் நேர்காணல், கட்டுரை, சிறுகதைகள், நூல் அறிமுகம், கவிதைகள் என, முழுமையான இலக்கிய இதழாக வெளிவந்திருக்கிறது அகநாழிகை. இலக்கிய வட்டாரத்தில் இந்நூல் தடம் பதிக்கும். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு

பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, முனைவர் சபா. அருணாசலம், முல்லை பதிப்பகம், விலை 40ரூ. புரட்சிக் கவிஞர் படைத்த வீரம், காதல், நகைச்சுவை என யாவும் நிறைந்த ஒப்பற்ற காவியமான பாண்டியன் பரிசின் சுருக்கம், முழுமையாகப் படித்த உணர்வைத் தரும் வகையில் செதுக்கித் தந்திருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர்,  பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.190, விலை ரூ.160. தமிழிலக்கிய ஆராய்ச்சி, முற்போக்கு இலக்கிய விமர்சனம், நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுக்கும் முயற்சி என்று பல தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர் பேராசிரியர் நா.வானமாமலை. 1969 -இல் தமிழ் இலக்கிய, தமிழக வரலாற்று ஆராய்ச்சிக்காக அவர் தொடங்கி நடத்திய ஆராய்ச்சி இதழின் பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது. இந்நூலாசிரியர் பொன்னீலன், தனது இளமைப் பருவத்தில் இருந்தே நா.வானமாமலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து பல இயக்கங்களில், […]

Read more
1 15 16 17 18 19 56