தமிழ் உலா

தமிழ் உலா, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 160ரூ. அருந்தமிழ் அன்று முதல் இன்றுவரை கவிதையாய் நடைபோட்டு வந்திருக்கும் நல்லிலக்கிய நூல்களில் இடம்பெற்ற தனிச்சிறப்பான வரிகளின் வர்ணனையாய் விளக்கக் கட்டுரைகள். செந்தமிழ்த் தேரில் செம்மாந்து உலாவரும் உவகை, பக்கங்களைப் புரட்டுகையில் மனதைப் பரவசப்படுத்துகிறது. அருந்தமிழ் விரும்பிகளுக்கு அற்புதமான விருந்து. நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027343.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தீந்தமிழ்த் திறவுகோல்

தீந்தமிழ்த் திறவுகோல், தி.மு.அப்துல்காதர்,வே.பதுமனார், எல்.சி.குப்புசாமி, வேலூர் தமிழ்ச் சங்கம் அறக்கட்டளை, பக். 60, விலை 50ரூ- எல்லா மொழிகளுக்கும் முதன்மையாக அகரம் உள்ளது. அந்த அகர எழுத்தின் அமைப்பே, எல்லா மொழிகளின் அமைப்புக்கும் மூலமாகும். தமிழ் எழுத்து வரிசை அறிதல், எழுத்து வகைகள், ‘ண – ந – ன’ பயன்பாடு அறிதல், ‘ல – ழ – ள, ர – ற’ வேறுபாடு அறிதல், வல்லினம் மிகும் – வல்லினம் மிகா இடங்கள் அறிதல். சொற்பிழை திருத்தம், மரபுப் பெயர்கள் அறிதல், […]

Read more

ஒரு மிடறு பச்சைக் குருதி

ஒரு மிடறு பச்சைக் குருதி, கலைச்சித்தன், விஜயா பதிப்பகம், பக். 136, விலை 120ரூ. அடர் காட்டுக்குள் சலசலத்து ஓடும் சிற்றோடை எழில் வாய்ந்தது மட்டுமல்ல, பிரதிபலிக்கும் கண்ணாடி கவிதை என்பர். ‘முற்றிய பாண்டத்தை பிரித்தெடுக்கிறான்… அறுகிறது மண்ணின் தொப்புள்கொடி. வெம்மை தகிக்கும் நாற்சுவருக்குள் சுட்டெடுக்கிறான்… எரிதழல் கொப்பளிக்கும் இசை தின்ற மண் பொதி கடமென்று சமைகிறது’ என்ற கவிதை, இசை தின்ற மண் பொதி கடமென கவிஞரால் உருவாகின்ற அற்புதத்தை விதைக்கிறது. நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026708.html இந்தப் […]

Read more

தமிழ்க்கிளை மொழி அகராதி

தமிழ்க்கிளை மொழி அகராதி, தொகுப்பாசிரியர் இரா.பாலகிருஷ்ணன், சபாநாயகம் பப்ளிகேஷன்ஸ், விலை 400ரூ. ஒரு பொருளைக் குறிக்கும் ஒரு சொல், ஒரு வட்டாரத்தில் ஒரு விதமாகவும், வேறு வட்டாரத்தில் வேறு விதமாகவும் குறிப்பிடப்படுவது கிளை மொழிச் சொற்கள் எனப்படுகின்றன. தமிழ் மொழியில் உள்ள இது போன்ற சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருளுடன் அவை எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவை என்பதையும் அகராதியாகத் தந்து இருக்கிறார் ஆசிரியர். சுமார் 5 ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை மொழிச் சொற்கள் உள்ளன என்பது இதம் மூலம் […]

Read more

திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை

திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை, இரா.இளங்குமரனார் (ஆறு தொகுதிகள்), பாவேந்தர் பதிப்பகம், தொகுதி-1, பக்.624, ரூ.500; தொகுதி-2, பக்.352, ரூ.300; தொகுதி-3, பக்.608, ரூ.500; தொகுதி-4, பக்.464, ரூ.350; தொகுதி-5, பக்.480, ரூ.400; தொகுதி-6, பக்.416, ரூ.350; ஆறு தொகுதிகள் மொத்தம் ரூ.2400; திருக்குறளுக்குப் பல்வேறு விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன – எழுதப்பட்டும் வருகின்றன. அவற்றுள்  இரா. இளங்குமரனாரின் திருக்குறளுக்கான வாழ்வியல் விளக்கவுரை தனிச்சிறப்புப் பெற்றது.திருக்குறள் நம் மறை என ஆணித்தரமாகக்கூறும் இளங்குமரனாரின் ஆழங்காற்பட்ட புலமையை இத்தொகுதிகள் வெளிப்படுத்துகின்றன. முப்பொருள் கூறிய திருவள்ளுவர்  பற்றிக் கூறாமைக்கான விளக்கம்; […]

Read more

மகாபாரதம் – மாறுபட்ட கோணத்தில்

மகாபாரதம் – மாறுபட்ட கோணத்தில், சுரானந்தா, சுரா பதிப்பகம், பக்400, விலை ரூ.200. வேதவியாசரால் எழுதப்பட்ட மகாபாரதம் ஓர் இதிகாசம். ஒவ்வொரு மனிதரும் அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்பிக்கிறது. நம்ப முடியாத பல சம்பவங்களும் கிளைக்கதைகளும் இதில் உள்ளன. மகாபாரதத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் இன்றைக்கும் நாம் பல உருவங்களில் காணமுடிகிறது என்பதுதான் வியப்பு. அதுமட்டுமல்ல, கலியுகத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதை அன்றைக்கே பட்டியலிட்டிருக்கும் வேதவியாசர் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான். துரியோதனனை தீயவன் என்று முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. அதே சமயம் யுதிஷ்டிரனை முழுமையான […]

Read more

தமிழக ஆலயங்களில் நாட்டியாஞ்சலி

தமிழக ஆலயங்களில் நாட்டியாஞ்சலி – தஞ்சை வெ.கோபாலன்,  கலைமகள் டிரேடர்ஸ், பக்.96, விலை ரூ.75. ஒவ்வோராண்டும் திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் ஆலயத்தில் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். அந்த நாட்டியாஞ்சலி குழுவில் இடம் பெற்றிருப்பவர் நூலாசிரியர். பல நாட்டியக்கலைஞர்களுடன் பழகும் அனுபவமும், நாட்டியம் பற்றிய பரந்த அறிவும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய வரலாற்று நூல்களின் தாக்கமும் சேர்ந்து இந்நூலை எழுத அவரைத் தூண்டியிருக்கிறது. பல்வேறு ஆலயங்களில் நடனமாடும் பெண்களின் சிலைகளைக் காண முடியும். நடனம் தவிர பல்வேறு வகையான வாத்தியங்களும் […]

Read more

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள், முனைவர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 600ரூ. சைவ சமயம் உலகில் உள்ள எல்லா சமயங்களுக்கும் முற்பட்ட தொன்மையை உடையது. தமிழும், சைவமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன. சைவத்தமிழின் சிறப்பை பறைசாற்றும் வகையில் 78 கட்டுரைகள் சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள் என்ற நூல் தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சைவத்தமிழ் இலக்கியங்கள், திருமந்திரத்தின் தனிச்சிறப்புகள், சைவத் தமிழ் அறிஞர்கள் ஆகிய தலைப்புகளில் பகுக்கப்பட்டு அறிவு நிறை ஆய்வாளர்களால் படைக்கப்பட்டு இருக்கிறது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் வேறு, […]

Read more

குண்டலகேசி (புதிய காப்பியச் சுருக்கம்)

குண்டலகேசி (புதிய காப்பியச் சுருக்கம்),  இரா.இளங்குமரனார், தெளிவுரை: இளவரச அமிழ்தன், சிங்காரம் பதிப்பகம், பக்.240, விலை ரூ.275. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி. இது பெளத்தம் சார்ந்த காப்பியம். கள்வனை விரும்பி மணக்கும் வணிகர்குலப் பெண்ணான குண்டலகேசி, ஒரு நாள் விளையாட்டாக அவனைக் கள்வன் எனக் கூறிவிட, அன்றிலிருந்து அவர்கள் உறவு ஒட்டா உறவாகிறது. இதனால், தன்னைக் கொல்ல முயன்ற கணவனை அவள் கொன்றுவிட்டு, பிக்குணியாகி, பெளத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபடுகிறாள் குண்டலகேசி. குண்டலகேசி எனும் பெயரையே தம் புதிய […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப்பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும், திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி என, வாதிட்டவர் தேவநேயப்பாவணர். மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல் ஆராய்ச்சி வல்லுனரும் ஆவார். இந்நுால், மொழிகள், இயன்மொழி, திரிமொழி என இருவகைப்படும். வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு இயன்மொழியும் இயற்கை மொழி, வளர்ச்சி மொழி என இருவகை நிலைகளை உடையது என்கிறார். ‘அம்’ என்னும் வேர்ச்சொல் கட்டுரையில், ‘அம்முதல்’ என்ற சொல்லுக்குரிய […]

Read more
1 13 14 15 16 17 56