கோதை சொல் அமுதம்

கோதை சொல் அமுதம், க.துரியானந்தம், கங்கை புத்தக நிலையம், விலை 70ரூ. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சியில் சைவ, வைணவ சமயங்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும் ஒருத்தி. அவள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுகிறாள். பரந்தாமன் மேல் அவள் கொண்ட பக்தியாகிய காதல், தமிழ்ப் பாசுரங்களாக மலர்ந்தன. அவை, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்னும் தங்கத் தாம்பாளத்தில் மின்னும் வைரங்களாகும். நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கடித இலக்கியம்

கடித இலக்கியம், இரா.காமராசு, சாகித்திய அகாதெமி, பக்.320, விலை ரூ.200. செல்லிட பேசி அதிக அளவில் புழக்கத்தில் வந்த பிறகு உறவினர்களுக்கு, நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவது அடியோடு நின்றுபோய்விட்டது. கடிதம் எழுதுவதில் உள்ள சுகம், கடிதம் எப்போது வரும் என்ற காத்திருப்பு, கடிதம் வந்தபின் எழும் பல்வேறு உணர்வுகள் என இந்தத் தலைமுறையினரும், வருங்காலத் தலைமுறையினரும் இழந்த அனுபவங்கள், உணர்வுகள் அதிகம். அந்த அனுபவங்களை, உணர்வுகளை இந்நூல் தொட்டுக் காட்டுகிறது . பாரதியார் தன் மனைவிக்கு, பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு, தம்பி சி.விசுவநாதனுக்கு எழுதிய […]

Read more

திருப்பா இலக்கியம்

திருப்பா இலக்கியம்,  ச. வனிதா, சபாபதி வெளியீடு, பக்.164, விலை ரூ. 120. தமிழும் சமயமும் பிரித்துப்பார்க்க முடியாதவை. சமயச் சான்றோர் பலரின் காலத்தை வென்ற படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்கு செழுமையும், பெருமையும் சேர்ப்பவையாக உள்ளன. அருணகிரிநாதர் படைத்த திருப்புகழ், வள்ளலார் படைத்த திருவருட்பா போன்ற நூல்களின் வரிசையில் வைத்து அழகுபார்க்கவும், வாய்மணக்கப் பாடிப்பார்க்கவும் தக்கது திருப்பா. அதைப் படைத்தவர் "பாம்பன் சுவாமிகள்' என அழைக்கப்படும் குமரகுருதாச சுவாமிகள். எத்தனையோ அற்புத நூல்களைப் படைத்திருந்தாலும் பாம்பன் சுவாமிகளின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கது திருப்பாதான். இவரது அனைத்து நூல்களும் […]

Read more

உரைவேந்தர் ஔவை துரைசாமி

உரைவேந்தர் ஔவை துரைசாமி, பேராசிரியர் நிர்மலா மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. ஓலைச் சுவடிகளில் உறங்கிய தமிழை தேடி எடுத்துத் தெsளிவுரை எழுதி, உரைநடையாக்கி உலகறியச் செய்த அக்காலத்து இலக்கியக் கர்த்தாக்களுள் தனித்திறன் பெற்று உரைவேந்தர் எனப் போற்றப்பட்ட ஔவை துரைசாமியின் உரைநயம் உரைக்கும் புத்தகம். சுவைத்துணர வேண்டிய தமிழ்ச்சுவை. நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள், இரா.பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. திருவள்ளுவரின் திருக்குறளில் பல தாவரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த தாவரங்களின் இயல்புகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் வரும் தாவரங்கள் பற்றி பேராசிரியர் இரா.பஞ்சவவர்ணம் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஏராளமான தகவல்களை இந்த நூலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் ஆராய்ச்சியாளர்களின் கையில் இருக்க வேண்டிய அரிய நூல். நன்றி: தினத்தந்தி 6/6/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026859.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

கல்வெட்டில் தேவார மூவர்

கல்வெட்டில் தேவார மூவர், கா.ம.வேங்கடராமையா, சேகர் பதிப்பகம் சைவ மரபில் தேவார மூவருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அன்றாட வழிபாட்டில் மூவர் தேவாரப் பாடல்களைப் பாடுகிறவர்கள் ஏராளம். அநேகமாக எல்லா சிவ ஆலயங்களிலும் நாவல்வர் திருவுருவச்சிலைகளை அமைத்து வழிபடுகிறார்கள். ‘கல்வெட்டில் தேவார மூவர்’ என்ற பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவின் நூலைப் படிக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேரூன்றிய மரபு இது என்று புரிகிறது. தமிழகமெங்கும் பக்தர்களும் மன்னர்களும் தேவார மூவரை எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்நூல். குறிப்பாக, இந்நூலில் வரும் பெயர்கள் அனைத்தும் நம்மை […]

Read more

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர், பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 180, விலை 160ரூ. பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் வழக்காற்றியலின் தந்தை. மார்ச்சிய லெனினிய அகராதி, தமிழர் நாட்டுப் பாமரர் பாடல்கள், தமிழர் நாட்டுப் பாடல்கள், புதுக்கவிதை – முற்போக்கும் பிற்போக்கும் – போன்ற அவரது நுால்கள் தமிழுக்கு சிறந்த பங்களிப்புகள். அவரது அன்றாட வாழ்க்கை, ரசனைகள், குறைகள், சாதனைகள், வேதனைகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள் ஆகியவை பொன்னீலனால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் புதுக்கவிதை இடதுசாரி விமர்சகர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. தொ.மு.சி.ரகுநாதன், கலாநிதி […]

Read more

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. சொல் மணக்க, பொருள் விளங்க உரைபல எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்த பத்மஸ்ரீ ஔவை நடராசன், சங்க இலக்கியம் முதல் கம்பர் வரை பலவற்றிலும் நயம் கண்டு கூறிய நல்லுரைகளின் தொகுப்பு. அவரது பன்முகம் குறித்த ஆய்வு நூலாக இருந்தாலும், தமிழை நேசிப்போரின் வாசிப்புக்கு ஏற்ற நூல். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

முல்லை மண்-மக்கள்-இலக்கியம்

முல்லை மண்-மக்கள்-இலக்கியம், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக்.200, விலை ரூ.150. சங்கத் தமிழ் இலக்கண-இலக்கியங்களில் பல சந்தேகங்களும், சிக்கல்களும், முரண்பாடான கருத்துகளும் இருக்கின்றன. அந்தவகையில், முல்லைத் திணைப் பாடல்களில் உள்ள பல வகை சிக்கல்களும் ஐயங்களும் ஆய்வுப் பொருளாகியுள்ளன. அவை களையப்பட வேண்டும் என்ற நோக்கில் ‘முல்லைத் திண‘யில் இருக்கும் ஐயங்களுக்கான விடைகளை இந்நூல் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்துகிறது. முல்லைத் திணைப் பாடல்கள், உலக இலக்கியங்களான கிரேக்க, லத்தீன் முல்லைத் திணைப் பாக்களோடு ஒப்புநோக்கப்பட்டுள்ளது. பல பொருள் தரும் ஒரு சொல் […]

Read more

பாப்பாவுக்குப் பாட்டு

பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ. பாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது. உறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் […]

Read more
1 14 15 16 17 18 56