வாட் இஸ் பரதநாட்டியம்?

வாட் இஸ் பரதநாட்டியம்?(ஆங்கிலம்), வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்பிளகேஷன்ஸ், விலை 1330ரூ. தலைப்பு பரதநாட்டியம் கற்றுத்தரும் புத்தகம்போல் இருந்தாலும், பரத நாட்டியக் கலைஞரும் இசை ஆராய்ச்சியாளருமான வித்யா பவானி சுரேஷ், பரதக் கலையோடு வாழ்க்கையில் முன்னேறும் கலையையும் கற்றுத்தரும் வகையில் எழுதியிருக்கும் நூல் இது. “ஒருநாள் நான் லிஃப்டில் சென்றபோது, அவசர அவசரமாக தலைமுடியில் இருந்து ஈரம் சொட்ட ஓடிவந்தார் ஒரு பெண்மணி. வலது கையால் தலையைக் கோதி காய வைத்தபடியே, அரக்கப்பரக்க அலுவலகத்துக்குச் சென்ற அவரைப் பார்த்த எனக்கு சங்கடமாக இருந்தது. […]

Read more

கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள்

கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள், ஆங்கில மூலம்: எஸ். சாரதா, தமிழில்: கிருஷாங்கினி, சதுரங்கம் பதிப்பகம், பக்.384, விலை ரூ.300. உலகப் பிரசித்தி பெற்ற கலாக்ஷேத்ரா என்னும் இந்திய பாரம்பரியக் கலைக் கல்வி மையத்தைப் பற்றியது இந்தப் புத்தகம். அதே நேரத்தில் ஈடு இணையற்ற அந்தக் கலை மையத்தை உருவாக்கிய ருக்மிணிதேவி பற்றிய வரலாற்றுப் பதிவாகவும் இருக்கிறது. கலாக்ஷேத்ராவில் சேர்ந்து கலை ஞானத்துக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணம் செய்த எஸ். சாரதா எழுதிய ஆங்கில மூல நூலின் தமிழ் மொழி மாற்றமாக இந்தப் […]

Read more

தமிழக ஆலயங்களில் நாட்டியாஞ்சலி

தமிழக ஆலயங்களில் நாட்டியாஞ்சலி – தஞ்சை வெ.கோபாலன்,  கலைமகள் டிரேடர்ஸ், பக்.96, விலை ரூ.75. ஒவ்வோராண்டும் திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் ஆலயத்தில் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். அந்த நாட்டியாஞ்சலி குழுவில் இடம் பெற்றிருப்பவர் நூலாசிரியர். பல நாட்டியக்கலைஞர்களுடன் பழகும் அனுபவமும், நாட்டியம் பற்றிய பரந்த அறிவும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய வரலாற்று நூல்களின் தாக்கமும் சேர்ந்து இந்நூலை எழுத அவரைத் தூண்டியிருக்கிறது. பல்வேறு ஆலயங்களில் நடனமாடும் பெண்களின் சிலைகளைக் காண முடியும். நடனம் தவிர பல்வேறு வகையான வாத்தியங்களும் […]

Read more

திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள் (தொகுதி 3)

திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள் (தொகுதி 3), கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ. திரைப்பட பாடலாசிரியர் மதுர பாஸ்கரதாஸ் தொடங்கி பஞ்சு அருணாசலம் வரை 100 பாடலாசிரியர்களையும், அவர்களின் படைப்புகளையும் முதல் தொகுதியில் ஆவணப்படுத்தி, 1963-1981 காலகட்டத்தில் பாடல்கள் எழுதிய 19 பேரையும், அவர்களின் பாடல்களையும் 2வது தொகுப்பில் ஆவணப்படுத்திவிட்டு, இந்த 3ம் தொகுதியை நூலாசிரியர் தந்து உள்ளார். இதில் எம்.ஜி.வல்லபன் தொடங்கி யுகபாரதி வரையில் 21 திரைப்பட பாடலாசிரியர்களின் வாழக்கைச்சுருக்கம், படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. திரைப்படத்துறைக்கு அப்பால் இருந்து ஒருவர், அதுவும் […]

Read more

சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி)

சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி), முனைவர் ஆ.மணி, காவ்யா, பக். 768, விலை 750ரூ. கும்மியாட்டம் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்வர். நடுவில் முளைப்பாரி அல்லது வேறு ஏதேனும் சில பொருட்களை நடுவில் வைத்து, பெண்கள் வட்டமாக நின்று கை கொட்டி ஆடும் ஆட்டம் கும்மியாட்டம் எனப்படும். இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது. வெள்ளையரை எதிர்த்து போராடிய மாவீரர்களில், மருது சகோதரர்களின் பெயர் மறக்க முடியாததாகும். 1772ல் ராணி வேலு நாச்சியாருக்கு உதவி […]

Read more

இசைத்தமிழ்ச் சாரல்

இசைத்தமிழ்ச் சாரல், தஞ்சை ந.இராமதாசு, வாசன் பிரதர்ஸ், பக். 76, விலை 50ரூ. இயலுக்குடைய பாட்டுக்கு இசை நன்று என்பது அவ்வையின் அமுத வாக்காகும். இசையுடன் கூடிய பக்திப் பாடல்கள் என்னென்ன வகையான இன்பம் பயக்கும் என்பதை, நூலாசிரியரின் இசைப்பா தொகுப்பைக் கற்பார் அனைவரும் கண்டுணர்வர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. சுவாமி படங்களுடன் அலங்கரிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more

தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள்

தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள், பேராசிரியர் முனைவர் ஜே.ஆர். இலட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 228, விலை 150ரூ. பழையாறை மாநகரின் ஒரு பகுதிதான் இன்றைய தாராசுரம் என்னும் பேரூர். ஐராவதீச்சுரம் கோவிலில் இடம்பெற்றுள்ள, சிற்ப வடிவங்கள் பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தை பின்பற்றியே அமைந்திருப்பதை படங்களுடன் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2, எஸ்.எஸ். பரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், பக். 328, விலை 275ரூ. முறையான இசைப் பயில விரும்புவோர், ஒரு சாகித்தியத்தை யார் எழுதியது என்பதையும், அந்த சாகித்தியத்தின் முழு அர்த்தத்தையும் முற்றிலும் புரிந்து கொள்ள முனைவர். இதெல்லாம், இசைக் கல்லூரிகளில் பயின்றால் மட்டுமே சாத்தியம். இப்போதைய அவசர உலகில், சங்கீதம் கற்றுக் கொடுப்பவர்களே, வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் காட்டுவதில்லை. ஆனால், வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் கொண்டோர், அவர்களைப் பற்றி மேம்போக்காக எழுதப்பட்டுள்ள […]

Read more

தெருக்கூத்து பனுவலும் நிகழ்த்தலும்,

தெருக்கூத்து பனுவலும் நிகழ்த்தலும், கோ. பழனி, சென்னை பல்கலைக்கழகம் வெளியீடு, விலை 320ரூ. இந்நூல் தெருக்கூத்தின் பல்வேறு நுட்பங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. நவீன நாடகத்திற்கு, தெருக்கூத்து வழங்கிய வழிமுறை தொழில்நுட்பம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களை வழி நடத்துபவர் யார், அவர்கள் எந்தெந்த வகைகளில் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை இந்நூல் ஆராய்கிறது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

இளையராஜா இசையில் தத்துவமும் அழகியலும்

இளையராஜா இசையில் தத்துவமும் அழகியலும், பிரேம் ரமேஷ், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 118, விலை 100ரூ. இளையராஜா இசையின் சிறப்பை பேசும் உன்னத நூல். வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்நாடக இசை வர்ண மெட்டுகளை போல் மக்களிடம் நாட்டுப்புற இசை வர்ண மெட்டுக்கள் ஏராளமாக உண்டு. அவைகளை தேடித் தேடி கவனத்துடன் மனதில் வாங்கிப் பதிவு செய்து கொண்ட ஞானியரில் மகா ஞானி நம்முடைய இளையராஜா அவர்கள் என்பது கி.ராஜ நாராயணனின் கணிப்பு. ஆனால், இளையராஜாவோ அடக்கத்துடன் பேசுகிறார். ‘இசை என்பது மிகப்பெரிய […]

Read more
1 2 3 4 5 8