கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், டாக்டர் விஜயலட்சுமி இராமசாமி, பூம்புகார். ஒரு சமுதாயத்தின் உண்மையான நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை, தெளிவாக எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடிய நாட்டுப்புறப்பாடல்கள் அமைந்துள்ளன. தாலாட்டு, ஒப்பாரி, காதல், தொழில், நையாண்டி, வழிபாடு என பால கோணங்களை எளிதில் உணர்த்தும் தாய்மை குணம் கொண்டது நாட்டுப்புறப் பாடல். இன்னும் கொஞ்சம் உயர்த்திச் சொன்னால், பழங்கால இலக்கியத்திற்கும் நாட்டுப்புறப் பாடல்கள் தாயாக அமைந்துள்ளன. நாட்டுப்புற பாடல்களின் மகுடம், அதன் எளிமையும், இனிமையும்தான். மனம் லயிக்கும் பல நாட்டுப்புறப் பாடல்கள் கொண்ட இந்த 648 பக்க […]

Read more

கழியல் ஆட்டம்

கழியல் ஆட்டம், முனைவர். வே. கட்டளை கைலாசம், காவ்யா. நாட்டுப்புற நிகழ்த்துதல் கலைகளில் ஒன்றான ஆண்களின் ஆட்டக் கலையை பற்றியதே கழியல் ஆட்டம் என்ற இந்த நூல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆண்கள் ஆடும் கோலாட்டம் தான் கழியல் ஆட்டம். இன்றைய சூழலில் பல்வேறு பொழுதுபோக்குகள் மக்களை ஆக்கிரமித்தாலும் நாட்டுப்புற கலைகளில் கிடைக்கும் இயற்கையான உற்சாகம் ஈடில்லாதது. இந்த ஆட்டத்தில் ஒத்த உடற்கட்டுள்ள எட்டு பேர் பங்கு கொண்டு ஆடுவர். கும்மிக்கழியல் என்ற ஆட்ட முறையில் மட்டும் எட்டு பேருக்கு மேல் கலந்து கொள்வர். […]

Read more

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 176, விலை 55ரூ. தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, இலக்கியக் கலை ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும் ஓரளவு விரிவாகவும் எழுதப்பட்டுள்ள நூல். அழகுக் கலை என்பது ஒப்பனை மட்டுமல்ல என்பதை விளக்கும்விதமாக அழகுக் கலைகள் யாவை? என்ற தலைப்பில் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார் நூலாசிரியர். […]

Read more

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம்

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம், புலவர் சிகாமணி சம்பந்தன், முல்லை பதிப்பகம், பக். 208, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-8.html மூன்று காண்டங்கள், 30 காதைகள் கொண்ட சிலப்பதிகாரத்தில் 10 காதைகளையும், பற்பல வரிகளையும் இடைச்செருகல் என்று காரணம் காட்டி நீக்கி, தம் கருத்திற்கேற்றவற்றை மட்டும் 20 காதைகளாக அமைத்துப் பதிப்பித்துள்ளார் ஆசிரியர். வஞ்சிக்காண்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. காப்பியத்தின் சுவை மிளிரும் பகுதிகளான கானல் வரி, ஆய்ச்சிக்குரவை இரண்டும் நீக்கப்பட்டுள்ளன. வைதிக, சைவ, வைணவக் கருத்துகளும் அதற்கேற்பப் […]

Read more

ட்ரஷர் ஆப் இந்தியன் மியூசிக்,

ட்ரஷர் ஆப் இந்தியன் மியூசிக், கே.ஏ. பக்கிரிசுவாமி பாரதி, குருகலம் அகாதமி, சென்னை 78, பக். 720, விலை 440ரூ. இசையும் பரதமும் நமது நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் இருகலைகள். இவ்விரு கலைகளைப் பற்றியும் பல பயனுள்ள தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. 72 மேளகர்த்தா ராகங்கள், அவற்றின் ஸ்வரஸ்தானங்கள், 35 தாள வகைகள் பற்றிய விளக்கங்கள், கடபயாதி திட்டம், வாக்கேயகாரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், சுமார் 130 ராகங்களின் ராக லட்சணங்கள், வாக்கேயக்காரர்களின் முத்திரைப் பட்டியல், தேவாரம், திவ்யப்பிரபந்தம் பற்றிய […]

Read more
1 6 7 8