சிலம்பம் படம் பாடம்

சிலம்பம் படம் பாடம், பூ. திருமாறன், டிரஸ்ட் நிறுவனம், 91ஏ, மேற்குத் தெரு, வெங்கடாம்பட்டி, கடையம் வழி, ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம், பக். 195, விலை 100ரூ. தமிழர்களின் தற்காப்புக் கலைகளுள் தலையாயது சிலம்பம். பாரம்பரியமும் பழைமையும் கொண்ட இக்கலையின் நுட்பங்களையும் சூட்சுமங்களையும் நெறிமுறையையும் அதன் ரகசியங்களையும் நூல்வழி கற்றுத் தரும் புதிய முயற்சி இந்நூல். சிலம்பாட்டத்தின் வரலாற்றோடு அதன் நேர்த்தியைச் சொல்லும்போதே அக்கலையை நாமும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. எதிரியின் தாக்குதல்களை சமாளிக்க உதவும் கருங்குருவி நிலை முதல் […]

Read more

தமிழிசைக் களஞ்சியம் (7 தொகுதிகள்)

தமிழிசைக் களஞ்சியம் (7 தொகுதிகள்), மு. ஆபிரகாம் பண்டிதர், பதிப்பாசிரியர்-மு. அங்கயற்கண்ணி, வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 4875ரூ. தமிழிசை விழாக்களில் இறை வணக்கத்துக்கு முன்னதாகப் போற்றப்பட வேண்டியவர் மு. ஆபிரகாம் பண்டிதர். கதை உபாத்யாயராக வாழ்க்கையைத் தொடங்கி இசை வல்லுநராக மறைந்து (1859-1919) போனவர். மொழி தெரியாமல் பாடல்கள் பாடுவதை உணர்ந்த இவர், 96 தமிழ்ப் பாடல்களை இயற்றிக் கொடுத்தார். தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரின் தெலுங்கு மற்றம் வடமொழிப் பாடல்களையும், […]

Read more

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை ரூ.115. உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பதுதான் இறையன்புவின் பேச்சும் மூச்சும். அதற்கான உத்தரவாதத்தைத்தான் இந்நூலில் தந்துள்ளார். குமுதம் ரிப்போட்டரில் தொடராக வந்தபோது அதன் தலைப்பே கவனத்திற்குரியதாகி பலரைப் படிக்கத் தூண்டியது. இன்றைய மனிதனின் ஒவ்வொரு நொடி உழைப்பும் அடுத்த பல தலைமுறையினரின் உயர்வாக அமையும் என்பதை நூல் முழுதும் பதியன் போட்டுள்ளார். விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் வியர்வை, உழைப்பிற்காகச் சிந்தியதாக […]

Read more

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 250ரூ. தமிழர்களின் வரலாற்றை நம்முடைய தமிழ் அறிஞர்கள் பலர் விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர். இருந்தபோதிலும் பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் வரலாறு பல சிறப்புகளைக் கொண்டது. இதை புலவர் கா. கோவிந்தன் மொழிபெயர்த்துள்ளார். கி.பி. 600 வரையிலான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றை விளக்குகின்ற அருமையான நூல். பி.டி.சீனிவாச அய்யங்காரின் சில தவறான முடிவுகளை தக்க சான்றுகளோடு மறுத்து அந்தந்த அதிகாரங்களின் […]

Read more

டாலர் தேசத்து அனுபவங்கள்

டாலர் தேசத்து அனுபவங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை ரூ.100. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஆர். நல்லக்கண்ணு, தனது அமெரிக்க 20 நாள் சுற்றுப்பயண அனுபவத்தை வெளிப்படுத்தி உள்ளார். அங்கு வாழும் தமிழ் பற்றாளர்களின் சந்திப்பு, வரலாற்று தலங்கள், தலைவர்களின் சிலைகள், அவர்களின் சிறப்புகளையும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஏகாதிபத்திய போக்கையைம் வெளிப்படுத்த தவறவில்லை.   —-   தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில், குடவாயில் பால […]

Read more

ஆசியாவின் பேரொளி

ஆசியாவின் பேரொளி, எம்.ஏ. பழனியப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 55ரூ. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, அரசியல் பிரவேசம், சுதந்திர தாகம், பேச்சாற்றல், தைரியம் ஆங்கிலேயரை எதிர்த்து போராட்டங்கள், சிறைவாழ்வு, நிர்வாகத்திறன், இறுதி நாட்கள், மறைவு ஆகிய விவரங்கள் ஆகியவை படிக்க சுவாரசியமாக உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2014.   —-   சங்கீத சற்குரு தியாகராஜர், ஜெ. அரவிந்த்குமார், லதா பதிப்பகம், […]

Read more

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், டாக்டர் விஜயலட்சுமி இராமசாமி, பூம்புகார். ஒரு சமுதாயத்தின் உண்மையான நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை, தெளிவாக எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடிய நாட்டுப்புறப்பாடல்கள் அமைந்துள்ளன. தாலாட்டு, ஒப்பாரி, காதல், தொழில், நையாண்டி, வழிபாடு என பால கோணங்களை எளிதில் உணர்த்தும் தாய்மை குணம் கொண்டது நாட்டுப்புறப் பாடல். இன்னும் கொஞ்சம் உயர்த்திச் சொன்னால், பழங்கால இலக்கியத்திற்கும் நாட்டுப்புறப் பாடல்கள் தாயாக அமைந்துள்ளன. நாட்டுப்புற பாடல்களின் மகுடம், அதன் எளிமையும், இனிமையும்தான். மனம் லயிக்கும் பல நாட்டுப்புறப் பாடல்கள் கொண்ட இந்த 648 பக்க […]

Read more

கழியல் ஆட்டம்

கழியல் ஆட்டம், முனைவர். வே. கட்டளை கைலாசம், காவ்யா. நாட்டுப்புற நிகழ்த்துதல் கலைகளில் ஒன்றான ஆண்களின் ஆட்டக் கலையை பற்றியதே கழியல் ஆட்டம் என்ற இந்த நூல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆண்கள் ஆடும் கோலாட்டம் தான் கழியல் ஆட்டம். இன்றைய சூழலில் பல்வேறு பொழுதுபோக்குகள் மக்களை ஆக்கிரமித்தாலும் நாட்டுப்புற கலைகளில் கிடைக்கும் இயற்கையான உற்சாகம் ஈடில்லாதது. இந்த ஆட்டத்தில் ஒத்த உடற்கட்டுள்ள எட்டு பேர் பங்கு கொண்டு ஆடுவர். கும்மிக்கழியல் என்ற ஆட்ட முறையில் மட்டும் எட்டு பேருக்கு மேல் கலந்து கொள்வர். […]

Read more

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 176, விலை 55ரூ. தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, இலக்கியக் கலை ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும் ஓரளவு விரிவாகவும் எழுதப்பட்டுள்ள நூல். அழகுக் கலை என்பது ஒப்பனை மட்டுமல்ல என்பதை விளக்கும்விதமாக அழகுக் கலைகள் யாவை? என்ற தலைப்பில் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார் நூலாசிரியர். […]

Read more

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம்

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம், புலவர் சிகாமணி சம்பந்தன், முல்லை பதிப்பகம், பக். 208, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-8.html மூன்று காண்டங்கள், 30 காதைகள் கொண்ட சிலப்பதிகாரத்தில் 10 காதைகளையும், பற்பல வரிகளையும் இடைச்செருகல் என்று காரணம் காட்டி நீக்கி, தம் கருத்திற்கேற்றவற்றை மட்டும் 20 காதைகளாக அமைத்துப் பதிப்பித்துள்ளார் ஆசிரியர். வஞ்சிக்காண்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. காப்பியத்தின் சுவை மிளிரும் பகுதிகளான கானல் வரி, ஆய்ச்சிக்குரவை இரண்டும் நீக்கப்பட்டுள்ளன. வைதிக, சைவ, வைணவக் கருத்துகளும் அதற்கேற்பப் […]

Read more
1 5 6 7 8