கல்லாப் பிழை

கல்லாப் பிழை, க.மோகனரங்கன், தமிழினி வெளியீடு, விலை: ரூ.90. க.மோகனரங்கன். இந்தப் பெயர் ஒரு மந்திரச் சொல். நினைவில் சட்டென நிதானத்தைக் கொண்டுவரும் தன்மை கொண்ட எழுத்துக்காரர். தூரிகைகளும் வர்ணங்களும் இல்லாது நம்முள் சித்திரங்களை வரைந்துசெல்லும் கவிமொழிக்காரர். தற்பெருமையும் தளும்புதலும் இல்லாது மொழிக்கு வளமை சேர்த்தபடியே இருப்பவர். நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரை நூல்கள், ஒரு கதைத் தொகுப்பு, இரு மொழிபெயர்ப்பு நூல்கள் என இவரின் பங்களிப்புகள் காத்திரமானவை. ‘வாசனை’ கவிதை வரைந்த பூக்கட்டும் பெண் தொடங்கி ‘கிளிப்பெண்’ணோடு கூடடைந்தது நல்ல அனுபவம். […]

Read more

நாங்கூழ்

நாங்கூழ், மின்ஹா, கருப்புப்பிரதிகள் வெளியீடு, விலை: ரூ.70. கவிதைகள் பெரும்பாலும் நிரந்தர அர்த்தம் உடையவை அல்ல. அவை காலந்தோறும், நிலந்தோறும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அவரவருக்குத் தக்கவாறு தனித்துவமான நுகர்ச்சியை வழங்கக்கூடியவை. இவற்றைக் கடந்து கவிதைகளுக்குச் சில பொதுவான பண்புகள் உண்டு என்பதும் மறுக்க இயலாது. படைப்பிலக்கிய வகைமைகளில் மற்ற எல்லாவற்றையும்விடக் கவிதைகளின் பங்கே இவ்வுலகில் கணிசமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இயற்கையோடு இணைந்து வாழும் விருப்பமுடைய மனித மனம் ஏராளமான ரகசியங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ரகசியங்களில்தான் கடவுளும் படைப்பும் […]

Read more

முறிந்த வானவில்

முறிந்த வானவில், கோ.வசந்தகுமாரன், தமிழ் அலை வெளியீடு, விலை: ரூ.100 முறிந்தாலும் வானவில்தான் ‘கவிதை என்பது ரொட்டி மாதிரி; படித்தவர்களும் பாமரர்களும் மகத்தான மானுடக் குடும்பத்தினர் அனைவரும் அப்படைப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என பாப்லோ நெரூதாவின் கருத்தை முன் பக்கத்தில் பதிவிட்டு, அதைத் தொடர்ந்த பக்கங்களில் தொடரும் வசந்தகுமாரனின் கவிதைகள் அந்தக் கூற்றுக்கு சான்று பகிர்கின்றன. ‘ஒரு பறவையை வரைவதற்கு முன்  ஒரு கூட்டை வரைந்துவிடு பாவம் எங்கு போய் அவை தங்கும்’ என்பன போன்ற கவிதைகள் கருணையின் கோப்பையில் தேநீர் அருந்துகின்றன. ‘என்னை […]

Read more

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவிசுப்பிரமணியன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.150. இசை எனும் நீர் நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக […]

Read more

பரலி சு.நெல்லையப்பா் கவிதைகள் – தொகுப்பு

பரலி சு.நெல்லையப்பா் கவிதைகள் – தொகுப்பு, எதிரொலி விசுவநாதன், மணிவாசகா் பதிப்பகம், பக்.144, விலை ரூ.75. பக்திமலா், சுதந்திர பாரதம், தேசியத் தலைவா்கள், தமிழ்நாடு, பாரதி வாழ்த்து, பெரியோா் புகழ், அஞ்சலி மலா்கள், இயற்கை இன்பம், பசுமைப்புரட்சி, சமுதாயம், அன்பு வ ழி, அறிவுரை, பல்சுவை என்ற தலைப்புகளில் மொத்தம் 110 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தேசவிடுதலை வீரராக விளங்கிய நெல்லையப்பா் சிறந்த தமிழ் அறிஞராக, பத்திரிகை ஆசிரியராக, பதிப்பாளராக, சைவப் பெரியாராக, கவிஞராக, மிக நல்ல மனிதராக வாழ்ந்தவா். மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனாருடன் […]

Read more

பச்சையம் என்பது பச்சை ரத்தம்

பச்சையம் என்பது பச்சை ரத்தம், பிருந்தா பார்த்தசாரதி, படைப்பு பதிப்பகம், விலைரூ.100. தாவரங்களை கருப்பொருளாகவும், உரிப்பொருளாகவும் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இயற்கையை எண்ணி எழுதியுள்ளார் நுாலாசிரியர். நீண்ட முன்னுரையுடன் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மண்ணைத் தோண்டி கிழங்கு எடுத்தேன்; கருணையின் வாசனை என்று ஒரு கவிதை. புலி உறுமியது; பயப்படாமல் நிமிர்ந்தே நிற்கிறது சிறு புல் போன்ற சுவாரசியமான சிறு கவிதைகள் உள்ளன. வங்காரி மாத்தாய், பூக்கோ போன்ற சூழல் பாதுகாப்பு முன்னோடிகளின் பொன்மொழியும் தொகுப்பில் உள்ளது. நன்றி: தினமலர், 4.4.21 இந்தப் […]

Read more

வெண்பா பாடும் பண்பாடு

வெண்பா பாடும் பண்பாடு, எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், பாற்கடல் பதிப்பகம், விலைரூ.91. பல்சுவையாக தொகுக்கப்பட்டுள்ள நுால். 52 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. சங்கக் கவிதைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அறங்கூறும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடல்களும், அவற்றுக்கான விளக்கங்களுமாக அமைந்து உள்ளது. நன்றி: தினமலர்,14/3/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பெண் எனும் பேரிலக்கியம்

பெண் எனும் பேரிலக்கியம், கவிஞர் துரைசாமி, நவீனா பதிப்பகம், விலை 60ரூ. பெண்மை தொடர்பாகவும், மனித வாழ்வின் உள்ளடக்கத்தைக் கொண்டவைகள் குறித்தும் எழுதப்பட்ட 33 கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அனைத்துக் கவிதைகளும் படிப்பதற்கு இதமாக இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள், வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.250. மகாகவி பாரதியின் பாடல், கவிதைகளை உள்ளடக்கிய முழுமையான மறு பதிப்பு நுால். எளிதாக புரியும் வண்ணம் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. பாடல்களை சுலபமாக அடையாளம் காணும் வகையில் நிரல்படுத்தப்பட்டுள்ளது. கெட்டி அட்டையில் சிறப்பாக, ‘பைண்ட்’ செய்யப்பட்டுள்ளது. பாரதி பாடல்களில் உள்ள கம்பீரம் இந்த நுாலிலும் தெரிகிறது. தெளிவான எழுத்துக்கள், வாசிப்பைத் துாண்டுகின்றன. வீடுகளில் இருக்க வேண்டிய காலப்பெட்டகம். நன்றி: தினமலர், 2.5.21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

சிறுவருக்கான அறக்கவிதைகள்

சிறுவருக்கான அறக்கவிதைகள், செ.ஏழுமலை, பானு ஏழுமலை, விலை 125ரூ. எளிமையான பாடல்கள் மூலம் சிறுவர்களின் மனதில் நல்ல கருத்துகளை விதைக்க முடியும் என்று அடிப்படையில் இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கவிதைகளில் வாழ்வுநெறி, கல்வியின் முக்கியத்துவம், பெற்றோரின் சிறப்பு, யோகா, நடைப்பயிற்சியின் அவசியம் உள்பட பல நல்ல கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,2/5/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 55