ஓடு பையா ஓடு

ஓடு பையா ஓடு, எஸ்.இளங்கோ, மேன்மை பதிப்பகம், விலை 100ரூ. இன்றைய குழந்தைகள்தான் நாளைய உலகின் தூண்கள். அந்த குழந்தைகள் இன்று அனுபவித்து வரும் போராட்டங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட, உலக சினிமாக்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. இந்த புத்தகம் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழந்தைகளின் போராட்டங்களை கண்முன் நிறுத்துகின்றார் ஆசிரியர். தொகுக்கப்பட்டுள்ள 20 சினிமாக்களும் நம்மிடம் எழுப்பும் கேள்விகள் பல. புத்தகத்தை படிக்கும்போதே, அந்தந்த சினிமாக்களை நேரல் பார்க்கும் உணர்வு ஏற்படுவது நிஜம். நன்றி: தினத்தந்தி, 24/10/2018. இந்தப் […]

Read more

தனிமையில் ஒரு கோயில்

தனிமையில் ஒரு கோயில், என்.நாகராஜன், ஸ்வேதகலா புக்ஸ், பக். 208, விலை 160ரூ. எளிய நடையில் தெளிவான நேரடித்தன்மை கொண்ட, 16 சிறுகதைகளும் இந்நுாலாசிரியரின் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கைப் பாதையில் காண்பனவும், உணர்வனவும் கதைக்குக் கருப்பொருளாகி இருப்பதை இந்நுால் வெளிப்படுத்தியுள்ளது. ‘தனிமையில் ஒரு கோவில்’ எனும் கதை, கோவிலுக்கு நேர்ந்து கொண்ட ஓர் அனுபவத்தினுாடே மனிதர்களின் மனோபாவங்களைப் படம் பிடிக்கிறது. பேருந்தில் செல்லும் போது நடத்துனர் பாக்கி சில்லரை தராததோடு, அவன் எப்படிப்பட்டவன் என்பதை விளக்கும் கதை, ‘இருளனைத்தும் புலரும்’ என்ற […]

Read more

காலத்தின் வாசனை

காலத்தின் வாசனை, தஞ்சாவூர் கவிராயர், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், பக். 144, விலை 160ரூ. நிற்பதுவே… நடப்பதுவே, திண்ணைகளின் பொற்காலம்! ரயில் என்ன சாப்பிடும்? கொசுவலை கோலாகலம், கைமாற்று வெண்பா, விசிறி வீடு, ஜவ்வாது பூனையும் ரஹீம்பாய் அத்தர் கடையும், வெயில் மனிதர்கள், வளையல்காரர் வராத தெரு, சக்கரவர்த்தியின் ஆவி, காலை பேப்பரும் காபி டம்ளரும், வள்ளலாரைத் தேடிய சி.ஐ.டி., கூஜாவின் கோபம், வீட்டுக்கு வரும் டாக்டர், சந்துகளுக்கும் சரித்திரம் உண்டு’ உள்ளிட்ட சிறுகதைகள், படிக்கும் வாசகரின் மனதில் முத்திரை பதிக்கும் என்பது திண்ணம். நன்றி: […]

Read more

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம், டாக்டர் ஜெ. பாஸ்கரன், மணிமேகலை பிரசுரம், பக். 144, விலை 100ரூ. சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் சந்தேகமில்லை. சைக்கிள் விட்ட துள்ளலையும், கல்யாணங்களில் ஆனந்தப்பட்டதையும், பெண் பார்த்த அப்பாவித் தனத்தையும், வாழைப்பூ வடை சாப்பிட்ட நாக்கு ரசனையையும், துபாய் அனுபவிப்பையும், லண்டனில் படித்ததையும், அகஸ்தியர் கோவில் அமைப்பையும், அம்மாவின் அரவணைப்பையும், சினிமா மோகத்தையும் நினைவுகூர்வதாக அமைந்துள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 30/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

முத்திரை சிறுகதைகள்

முத்திரை சிறுகதைகள், தொகுப்பாசிரியர் கி.ராமசுப்பு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 156, விலை 140ரூ. கதைகள்… மனித வாழ்வின் அனுபவத்தை பூர்த்தி செய்யும் மாபெரும் ஆயுதம்! கதைகள் இல்லா விட்டால்; கற்பனைகள் இல்லாவிட்டால் மனித வாழ்வு வறட்சி கண்டு விடும். தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, ஆயிரமாயிரம் ஆண்டு காலமாகவே கதை கேட்டே வளர்ந்த சிறப்புடையது. தாத்தா – பாட்டி, கூத்து, நாடகம், புத்தகம், சினிமா… என எந்த வழியிலாவது கதைகள் நம்மை வந்தடைந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது… கூத்தும், நாடகமும் காணாமல் […]

Read more

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை,  தற்காலக் கன்னடச் சிறுகதைகள்

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை,  தற்காலக் கன்னடச் சிறுகதைகள், தொகுப்பும் மொழியாக்கமும்: கே.நல்லதம்பி, எதிர் வெளியீடு, பக்.200, விலை ரூ.200. கன்னடத்தில் வெளிவந்த 12 சமகாலச் சிறுகதைகளின் தொகுப்பு. உலகமயச் சூழலில் வாழ்க்கைமுறையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை கலை இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவின் நேவடா மாநிலத்தில் பரத்தமைத் தொழில், நவீனத் தொழில்களுக்குரிய நிர்வாக உத்திகளுடன் நடைபெறுவதைச் சொல்கிறது தொழில் சிறுகதை. போனதலைமுறையில் குடும்பத்தில் தந்தை ஆழமாக உள்ளோடும் அன்போடும், இறுகிய வெளித்தோற்ற முகத்துடனும் அதிகாரம் செலுத்தியதைச் சித்திரிக்கிறது சிரத்தை சிறுகதை. அளவுக்கதிகமான காம உணர்வுடைய […]

Read more

முகவரியில்லா முகங்கள்

முகவரியில்லா முகங்கள்,கவி.தங்க.ஆரோக்கியதாசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. 25 சிறுகதைகள் கொண்ட தொகுதியாக வழங்கப்பட்டுள்ளது. இது தனது முதல் முயற்சி என்று நூலாசிரியர் கூறியுள்ளது நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு தேர்ந்த எழுத்தாளர் போல யதார்த்த நடையில், தான் சந்தித்த முகம் தெரியாத சாதாரண மனிதர்கள் பற்றிய நிகழ்வை கதையாக வடித்துள்ளார். சில கதைகள் சென்னையில் நம் கண் முன் நடந்த சம்பவங்களை நினைவு கூறுகின்றன. சோகம், வறுமை என பிழிந்துவிடுகிறார். ஒவ்வொரு சிறுகதையும் சில இடங்களில் நடந்த சிறுகதைகளுக்கான போட்டிகளில் பரிசு பெற்றுள்ளன. […]

Read more

டொரினா

டொரினா, கார்த்திக் பாலசுப்ரமணியன், யாவரும் பதிப்பகம், விலை 100ரூ. புதிய களத்தில் புதிய கதைகள் கார்த்திக் பாலசுப்ரமணியனின் முதல் தொகுப்பான டொரினாவிலுள்ள 12 கதைகளும் எளிய கதைகள் அல்லது 12 உண்மைகள். வீட்டைவிட்டு வெளியேறிய சொந்தங்கள், யோசிக்காமல் எதிர்வினையாற்றுபவர்கள், துணை இழந்த முதியவர்கள் என நமக்குத் தெரிந்திருக்கும் ஜீவன்கள்தான் இத்தொகுப்பின் பாத்திரங்கள். பின் ஏன் டொரினா? ஏனென்றால், நம்மிடமிருந்து பிரிந்தவர்கள், தொலைத்தவர்களை, நினைவுகளின் ஓரத்தில் கிடக்கும் விஷயங்களை எடுத்துவந்து நம் முன் நிறுத்துகிறது. இத்தொகுப்பின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கதைகள் முக்கியமானவை. ஐடி துறையில் […]

Read more

ஏழாம் நம்பர் வீடு

ஏழாம் நம்பர் வீடு, சுப்ரஜா, வாதினி வெளியீடு, விலை 499ரூ. எழுத்தாளர் சுப்ரஜா எழுதிய 40க்கும் மேலான சிறுகதைகளின் தொகுப்பு. அவருடைய சிறுகதைகள் குறித்து மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ருசிகர கடிதமும் இணைக்கப்பட்டு உள்ளது. ஏழாம் நம்பர் வீடு, திருட்டுப் பய, அது வேற இது வேற ஆகியவை மனதை தொடுகின்றன. 50 கிராம் மிக்சரும் 100 கிராம் அல்வாவும் கதையில் ஒரு சாதாரண மனிதனின் மன உணர்வு வெளிப்படுகிறது. அறை எண் 13, விடுதியில் தங்கி உயர்கல்வி பயில்வோருக்கும், சாக்கடை, அடுக்குமாடிவாசிகளின் […]

Read more

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை, ரவி பிரகாஷ், உங்கள் ரசிகன் பதிப்பகம், விலை 420ரூ. 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படிப்பதற்கு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளன. ஒவ்வொரு கதைக்கும் பிரபல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல பிரமுகர்கள் வழங்கி இருக்கும் மதிப்புரைகள், சிறந்த முன்னோட்டமாக அமைந்து ஆர்வத்தை தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027228.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more
1 19 20 21 22 23 80