1001 இரவு அரபுக் கதைகள்

1001 இரவு அரபுக் கதைகள், தொகுப்பு ஏ.சோதி, நன்மொழிப் பதிப்பகம், விலை 500ரூ. யார் எழுதினார்கள் என்பதே தெரியாத, மிகப் பழங்காலக் கதைகளின் தொகுப்புதான் 1001 இரவு அரபுக் கதைகள். வீர சாகசம், மாயமந்திரம், காதல், நன்னெறி, நகைச்சுவை என்று பலதரப்பட்ட குணநலன்களை உள்ளடக்கிய, படிக்கப் படிக்கத் தெவிட்டாத கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் ஏ.சோதி, தனக்கே உரிய பாணியில் மிக எளிய முறையில் தொகுத்துத் தந்துள்ள இந்தக் கதைகள், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை. […]

Read more

பாகுபலி

பாகுபலி, சொ.முத்துக்குமார், வனிதா பதிப்பகம், விலை 110ரூ. சரித்திரம், சாதனை, கோயில் என்று பலதரப்பட்ட விஷயங்களின் விவரங்கள், நிஜ பாகுபலியார் என்பதில் தொடங்கி, ஔவை வழி நடந்து, சில கோயில்கள் கடந்து, வழியில் சில்வர்ஸ்டார் ஸ்டோலனின் கதை சொல்லி வரலாற்று நிகழ்வுகளை உரையாடல் பாணியில் நகர்த்திச் சென்றிருக்கும் விதம் அற்புதம். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வழங்க வளரும் நேயங்கள்

வழங்க வளரும் நேயங்கள்,-ஸ்ரீதர்-சாமா,விருட்சம் வெளியீடு, பக்.161, விலை ரூ.120. தமிழ் இலக்கியத்தில் சிறுகதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக்கும் தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது. இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார். நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக்கின்றன. நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும், சடங்குகளாக நடைபெறும் பாராட்டு நிகழ்வுகளையும் தமது முதல் கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் நூலாசிரியர், வாக்கு எனும் கதையில் அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்கும் தேவியின் […]

Read more

வழங்க வளரும் நேயங்கள்

வழங்க வளரும் நேயங்கள்,  ஸ்ரீதர்-சாமா, விருட்சம் வெளியீடு, பக்.161, விலை ரூ.120. தமிழ் இலக்கியத்தில் சிறுகதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக்கும் தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது. இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார். நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக்கின்றன. நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும், சடங்குகளாக நடைபெறும் பாராட்டு நிகழ்வுகளையும் தமது முதல் கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் நூலாசிரியர், ‘வாக்கு‘ எனும் கதையில் அம்மாவின் அரவணைப்புக்கு […]

Read more

இரவு

இரவு, கலைச்செல்வி, என்சிபிஎச், விலை 140 ரூ. பிடித்த கதைகளில் சில ரகசியங்கள் கட்டவிழ்க்கப்பட்ட மேலும் மேலும் மர்மப் புன்னகையுடன் அவை நழுவிக் கொண்டு தான் இருக்கின்றன. அகமும் புறமுமான தேடல்களை கதைகள் ஆகி இருக்கிறேன் என்று சொல்லும் நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. இந்தக் கிளி கூண்டில் தொடங்கி அம்மாவும் தனமும் உள்ளிட்ட 15 கதைகள் அடங்கியுள்ளன. சராசரியான வாழ்க்கைச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் மனித மன ஓட்டங்களை வெகு யதார்த்தமாக பதிவு செய்துள்ள கதைகளாகவே அனைத்துக் கதைகளும் உள்ளன. எளிமையான […]

Read more

இஸ்மத் சுக்தாய் கதைகள்

இஸ்மத் சுக்தாய் கதைகள்,-தமிழில்: ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக்.496, விலை ரூ.500. உருது இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை விதைத்த பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் படைப்பில் வெளியான 24 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். வறுமையை மட்டுமே வாழ்க்கையில் சொத்தாகக் கிடைக்கப் பெற்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சில பெண்களின் வலிகளும், வேதனைகளும்தான் பெரும்பாலான கதைகளின் கருப்பொருள். முகத்தை திரையிட்டு மறைத்து வாழும் எத்தனையோ பெண்களின் அகத்துக்குள் நடக்கும் அக்னி பிரவேசங்களை எழுத்தினூடே அழுத்தமாகக் கூறியிருக்கிறார் சுக்தாய். போர்வை என்றொரு கதையில், கணவரின் அன்பும், தாம்பத்யமும் […]

Read more

டால்ஸ்டாய் கதைகள் (யானைக்குத் தீனி மற்றும் கதைகள்)

டால்ஸ்டாய் கதைகள் (யானைக்குத் தீனி மற்றும் கதைகள்), தொகுப்பாசிரியர்: எம்.ஏ.பழனியப்பன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் ஐந்து கதைகளின் தொகுப்பு இந்நூல். மனித வாழ்வை மிக அற்புதமாக, துல்லியமாகச் சித்திரிப்பவை. இந்நூலில் இடம் பெற்ற கதைகள் வேறொரு தளத்தில் மனித வாழ்வை, மனிதர்களின் மனதை, விருப்பு, வெறுப்புகளை, நல்லனவற்றை, தீயனவற்றைச் சித்திரிக்கின்றன. உண்மையான வாழ்க்கையும், கற்பனையும் கலந்ததான நிகழ்வுகள் நம்மை வேறொரு உலகத்தில் பயணம் செய்ய வைக்கின்றன. மக்களின் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் அதிக வரி வசூலித்து […]

Read more

புத்திக் கொள்முதல்

புத்திக் கொள்முதல் (சிறுகதைகள்), ஜனநேசன்,பாரதி புத்தகாலயம், பக்.112, விலை ரூ.90. தினமணி கதிர், உயிர் எழுத்து, தாமரை, கணையாழி, வண்ணக்கதிர் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த 17 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பங்குச் சந்தையில் ஈடுபட்டு பெரிய அளவுக்கு நஷ்டமடைந்த சொக்கலிங்கம், அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பின்பு அதிலிருந்து மீண்டு எழுந்ததைச் சொல்லும் ‘புத்திக் கொள்முதல்‘ சிறுகதை, பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் ‘பாடம்‘ மற்றும் ‘உதிர்வதற்கல்ல முதுமை‘ கதைகள், காதல் திருமணம் பற்றி கூறும்‘கெளரவம்‘, மதநல்லிணக்கத்தை […]

Read more

வாழ்வியல் கதைகள் 100

வாழ்வியல் கதைகள் 100, கவிஞர் சி.ஸ்ரீரங்கம், மணிமேகலை பிரசுரம், பக்.142, விலை 90ரூ. இந்நுாலில் உள்ள கதைகளில் இடம்பெற்ற மாந்தர்கள் இருவர் பேசுவதை, தாமே பேசுவது போன்ற புது உத்தியை ஆசிரியர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. ‘வீடு, பணிவு, வாடகை, ஆட்டோ, செல்லம், சாதுர்யம், புத்திசாலி, அப்படி இப்படி, போட்டோ, சிம்பிள், தீபாவளி, சொல்வதற்கு ஒன்றும் இல்லை’ உள்ளிட்ட கதைகள், இன்றைய சமுதாயத்திற்கு பாடம் கற்பிப்பதாக உள்ளன. நன்றி: தினமலர்,13/5/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026733.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

பதிலிகள்

பதிலிகள், மணிநாத், காவ்யா வெளியீடு, விலை 150ரூ. கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரம் மணிநாத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. 15 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் சாதாரண உழைப்பாளி மக்களைப் பற்றியும் அவர்களது நிரந்தரமற்ற பணிச்சூழலைப் பற்றியும் பெரும் அக்கறையோடு பேசுகின்றன. சமூக உண்மைகளை உரத்த குரலில் முழங்குகின்றன. சென்னையில் பெருவெள்ளத்தின்போது நடைபெற்ற நிகழ்வுகளை அப்படியே சொல்லும் ‘வெள்ளப்பெருக்கு’ம், தர்மபுரி சம்பவத்தை வேறொரு கோணத்தில் பார்க்கும் ‘தப்புக்கொட்டை’ யும் இவரது சமூக அக்கறைக்குச் சான்றான கதைகள். நன்றி: தி இந்து, […]

Read more
1 21 22 23 24 25 80