100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், தொகுப்பு எஸ்.ராமகிருஷ்ணன், டிஸ்கவரி புக் பேலஸ், இரண்டு பாகங்கள் 800ரூ. தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் தனது வாசகர்களுக்குப் பரிந்துரைத்த 100 முக்கியமான சிறுகதைகளின் தொகுப்பு இது. நூறாண்டுகளைக் கடந்த தமிழ்ச் சிறுகதையின் உச்சங்களைப் பட்டியலுக்குள் அடக்கிவிடமுடியாதுதான். ஆனாலும், புதுமைப்பித்தன் தொடங்கி சந்திரா வரைக்கும் தமிழ்ச் சிறுகதை கடந்து வந்திருக்கும் பாதையைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுகதையின் காதலர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் சிறுகதை எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு அருமையான வழிகாட்டி. நன்றி: தி இந்து, […]

Read more

மந்திரவாதி மன்னர்

மந்திரவாதி மன்னர், தமிழில் சரவணன் பார்த்தசாரதி, புக்ஸ் பார் சில்ரன், பக். 24, விலை 45ரூ. வண்ணப் படங்களால் நிறைந்துள்ள இந்த நூலில், மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி ஆகிய இரண்டு கதைகள் உள்ளன. சோவியத் கதை வரிசையில் இன்னுமொரு நூல். சோவியத் ஓவியர்களால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள், நூலுக்கு கூடுதல் அழகூட்டுகின்றன. குழந்தைகளை கவரும் வடிவமைப்பும் அழகு!. நன்றி: தினமலர், 16/1/2018.

Read more

மலர்களே கொஞ்சம் மலருங்கள்

மலர்களே கொஞ்சம் மலருங்கள், சிறுவர்களுக்கான அறிவியல் சிறுகதைகள், லூர்து எஸ்.ராஜ், வைகறை பதிப்பகம், விலை 40ரூ. பூக்கள் குறித்த அறிவியல் சார்ந்த விஷயங்கள், வித்தியாசமான கதை பாணியில் சொல்லப்படுகின்றன. மாணவர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து மணம் வீசும். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

படகோட்டி எறும்பு

படகோட்டி எறும்பு, சரவணன் பார்த்தசாரதி, புக் ஃபார் சில்ரன், பக். 24, விலை 45ரூ. இரை தேடிச் சென்ற எறும்புகள் குடும்பம் ஒன்று, தங்களின் புற்று இருந்த இடத்தை மறந்துவிட்டு தேடி அலைகின்றன. அந்த நேரம் பார்த்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வர, இந்த எறும்புகளுக்கு என்ன ஆயிற்று என்பது பற்றிச் சுவைபடச் சொல்லும் சிறு நுால். சோவியத் கதை புத்தகமான இதில், பக்கத்திற்குப் பக்கம் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களும், நேரடித்தமிழ் நுால் போன்ற மொழிபெயர்ப்பும், வாசிக்கும் ஆர்வத்தைத் துாண்டுகின்றன. நன்றி: தினமலர், […]

Read more

தப்புக் கடல

தப்புக் கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம், பக்.192, விலை 150ரூ. ஆசிரியரின், சிறுகதை தொகுப்பு. கிராமத்தில், தன் பால்ய வயது நினைவுகளில் இருந்து, சிறுகதைக்கான கருவையும், அதன் வழியே, அந்நாட்களின் தடங்களையும் பதிவு செய்துள்ளார். தப்புக் கடல முதல், வால் பையன் வரை, 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. சாமானியர்களின் வாழ்க்கையும், சரிந்திரமாகக் கூடும் என்பதை நிரூபித்திருக்கிறார். நன்றி: தினமலர், 20/1/2018

Read more

தப்புக்கடல

  தப்புக்கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம், விலை 150ரூ. மண் வாசனை வீசும் பெ. கருணாகரன் கதைகள் தமிழ்நாட்டில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், பத்திரிகையாளருமான .கருணாகரன் எழுதிய 15 சிறுகதைகள் கொண்ட புத்தகம் ‘தப்புக்கடல’. கதாபாத்திரங்களை வடிவமைப்பது, கதையை வேகமாக நடத்திச் செல்வது இரண்டிலும் முழு வெற்றி பெற்றிருக்கிறார், கருணாகரன். அணிந்துரை வழங்கிய வெ. இறையன்பு, “பெ.கருணாகரன் எழுத்துகள் பரிச்சயமானவை மட்டுமல்ல. படிக்கத் தூண்டுபவையும் கூட… மண்ணின் மணம் நிறைந்தவை” என்று குறிப்பிட்டிருப்பது, முற்றிலும் உண்மை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

மனித யந்திரம்

மனித யந்திரம், சின்னப்ப பாரதி, கோரல், பக். 119, விலை ரூ.100. சமூகத்தின் விளிம்புகளில் வாழ்ந்து வருவோர் குறித்து தொடர்ந்து எழுதி பரவலான வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. ஊரில் எல்லாருடைய இழுப்புக்கும் இசைந்து கொடுக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளி வீரன் முதல், வாழ்க்கைப்பட்ட வீட்டில் அனைவருக்கும் இசைந்து கொடுக்கும் இல்லத்தரசி, ஒரு காவல் நிலையத்தையே தனது இல்லமாக்கிக் கொண்டு அங்கு நடைபெறும் அநீதிகளின் ஏக நேரடி சாட்சியான போதிலும், அந்த அநீதிகளுக்கு இசைந்து […]

Read more

உச்ச வழு

உச்ச வழு, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக். 176, விலை ரூ.200. நூலாசிரியர் கடந்த இரண்டாண்டுகளில் எழுதிய 10 புதிய சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் படிமங்களையும், உருவகங்களையும் பயன்படுத்திப் பேசுகின்றன. டாப்சிலிப் காட்டுக்குள் பழைய பங்களாவில் செல்லிட பேசியும் இல்லாது தனியாகத் தங்கும் இளைஞனை மையமாகக் கொண்டு நகரும் கதை. அம்மாவின் இறப்புக்குக் கூட நேரில் போக முடியாத கடந்த காலம் அடர்ந்த கானக கும்மிருட்டில் அவனுக்கு நினைவில் வருவது யதார்த்தம். பகல் முடியக் கூடாது என்பதற்காக விமானத்திலேயே பயணம் செய்து கொண்டிருக்கும் […]

Read more

பான் கி மூனின் றுவாண்டா

பான் கி மூனின் றுவாண்டா, அகர முதல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை ரூ.120; பத்து சிறுகதைகளின் தொகுப்பு. ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போர் அங்கு வாழ்ந்த மக்களை எவ்வாறெல்லாம் பாதித்தது, மக்களின் அன்றாட, இயல்பான வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து போனது என்பதைச் சித்திரிக்கும் சிறுகதைகள். ராணுவம், மக்கள் மீது போர்தொடுக்கும்போது ஏற்படும் படுமோசமான தீய விளைவுகளும், நிகழும் மனிதத்தன்மையற்ற செயல்களும் மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் போர் இயக்கங்களின் நடவடிக்கைகள், அவற்றில் ஈடுபட்ட மனிதர்கள், அவர்கள் செய்த தியாகங்கள், அவர்களின் இழப்புகள் அதிர […]

Read more

கடவுள் கனவில் வந்தாரா?

கடவுள் கனவில் வந்தாரா?, பட்டுக்கோட்டை பிரபாகர், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 192, விலை 170ரூ. வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், சிறுகதையிலும் அதே தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ‘கடவுள் கனவில் வந்தாரா?’ சிறுகதை தொகுப்பிலும் வாசகனை கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறார். ஒவ்வொன்றும் குடும்ப உறவுகள், காதல், சமூகம் பற்றிய கதையாக இருப்பினும், இன்றைய நடைமுறை மற்றும் இளைய தலைமுறையினரின் உலகத்தை அப்படியே படம் பிடித்து யதார்த்தத்தின் […]

Read more
1 23 24 25 26 27 80